படைத்தவனை ஒப்புக் கொள்ளுதல்.

குறைஷிகளிலிருந்தும், மற்ற சமூகங்களிலிருந்தும் முஷ்ரிக்குகள் என்று யாரைப்பற்றி திருமறை பிரகடனப்படுத்தியதோ அவர்களும் நபி (ஸல்) அவர்கள் எவர்களை வெட்டிக் கொன்று அவர்களின் செல்வத்தைப் பறித்து அவர்களின் மகளிரை சிறை பிடிக்க வேண்டுமென்றும், அவர்கள் அனைவரும் நரகவாதிகளென்றும் பகிரங்கமாக விளக்கினார்களோ அவர்களும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வானங்கள் பூமிகளைப் படைத்தவன் என்ற உண்மையை மனமாற ஏற்று ஒப்புக் கொண்டிருந்தார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , | Comments Off on படைத்தவனை ஒப்புக் கொள்ளுதல்.

தன்னந்தனியே நிற்கும் நாள்.

19:66. மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று.

19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா?

19:68. ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு (அருளாளனுக்கு) மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

19:70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்களுடைய பாவத்தால்) முதல் தகுதியுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம் இறைவனின் முடிவான தீர்மானமாகும்.

19:72. அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.

19:73. இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில் (நம்பிக்கை கொண்டவர்களிடத்தில்) (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடைய சபை மிக அழகாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.

19:74. இன்னும், இவர்களை விட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.

19:75. “யார் வழி கேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை (தீர்ப்பு நாளை) காணும் வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலகீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்துக் கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

19:76. “மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”

19:77. “நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும் – தீர்ப்பு நாளிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப் படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?

19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா?

19:79. அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.

19:80. இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.

19:81. (முஷ்ரிக்குகள் – இணை வைப்பவர்கள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!

19:82. அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து இவர்களுக்கு விரோதமாக மாறிவிடுவர்.

அல் குர்ஆன்: ஸூரத்து மர்யம்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தன்னந்தனியே நிற்கும் நாள்.

இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

தீர்ப்பு நாளின் அதிபதி!


20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம (தீர்ப்பு) நாளில் குருடனாகவே எழுப்புவோம்”

20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் (உலக வாழ்வில்) பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.

20:126. (அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன; அவற்றை நீ மறந்து விட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று (அல்லாஹ்) கூறுவான்.

20:127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் (தீர்ப்பு நாளின்) வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.

20:128. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு (ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.

அல் குர்ஆன்: சூரா; தாஹா

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தீர்ப்பு நாளின் அதிபதி!

இணை வைப்பவர்களும் ஷபாஅத்தும்

இறைவனுக்கு இணைவைப்போர் மலக்குகளையும், நபிமார்களையும், மற்றும் நன்மக்களின் பிம்பங்களையும் அமைத்து அவற்றிடம் சிபாரிசை வேண்டினார்கள். இப்பிம்பங்களைக் கொண்டு வெளிப்படையில் நாங்கள் சிபாரிசைத் தேடினாலும் உண்மையில் நேரடியாகவே இவர்களிடம் கேட்கிறோம் என்று வாதாடினார்கள். இந்தப் படைப்பினங்களுக்கு கல்லறைகளை அமைத்து வேண்டி நின்றார்கள். அவற்றுக்கு முன் மண்டியிட்டு விழுந்து சிபாரிசை வேண்டி வணக்கங்களும் புரிந்தார்கள். இம்மாதிரியான சிபாரிசை இறைவன் அழித்து இல்லாமலாக்கி விட்டான். இந்த ஷபாஅத்தை நம்பிய முஷ்ரிக்குகளை இழிவானவர்கள் என கண்டித்தான். இவர்கள் அல்லாஹ்வை முழுக்க முழுக்க நிராகரித காஃபிர்கள் என்றும் இறைவன் இவர்களை வர்ணித்தான். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on இணை வைப்பவர்களும் ஷபாஅத்தும்

நபியின் ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள் யார்?

முஃதஸிலாக்கள், ஜய்திய்யாக்கள், கவாரிஜிகள் போன்ற பித்அத்துக்காரர்கள்தான் இவ்வுண்மையை ஏற்கமாட்டார்கள். நரகத்தில் அகப்பட்டவர்களுக்கு யாருடைய சிபாரிசும் பலனளிக்காது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். மனிதன் இரண்டே அமைப்புக்குரியவன். சுவனவாதி அல்லது நரகவாதி. நரகவாதியாக நரகில் பிரவேசித்தவனுக்கு என்றும் இருப்பிடம் நரகமே. சுவனத்தைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டவனுக்கு என்றும் சுவனமே இருப்பிடமாகும். இவ்விரு இருப்பிடங்களிலிருந்தும் எக்காரணத்தாலும் இவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். தண்டனையும், நற்செய்கைக்கான நல்ல கூலியும் ஒருபோதிலும் ஒன்று சேராது. இவ்வாறு இவர்கள் வாதாடுகிறார்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on நபியின் ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள் யார்?

சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்!

4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) தூதர்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு, நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

4:165. தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.

4:166. (நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சி கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

4:167. நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்துக் கொண்டி இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் வழிகெட்டுச் சென்று விட்டார்கள்.

4:168. நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.

4:169. நரகத்தின் வழியைத் தவிர – அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.

4:170. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.

அல் குர்ஆன்: அன்னிஸாவு. (பெண்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

அன்பு சகோதரர் அபு உமர் அவர்கள் தமிழ் முஸ்லிம் வலைப்பூவில் என்னுடைய தளத்தில் நான் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனங்களுக்கு மறுப்பு தெரிவித்து அத்தகைய சூழல் நிலவவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். வேறு எத்தகைய சூழலுக்கு அந்த வசனங்கள் பொருந்தும் என்பதை அவசியம் குறிப்பிடவும்.

நேசகுமாருக்கு பதிலளிக்கவில்லை அதை படிக்கக் கூடிய மற்றவர்கள் அவர் இட்டுக்கட்டும் பொய்யை அறிந்து கொள்ள நண்பர்கள் எழுதுவது உதவும் என்று அவர் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் குறிப்பிட்ட இறைவசனம் நேசகுமாருக்கு மட்டும் பதிலளிக்க கூடியவர்களுக்கு பொருந்தும் என்பதை அவரே குறிப்பிட்டு விட்டு பிறகு ஏன் குர்ஆன் வசனங்களைக் கொண்டுநான் விளையாடுவதாக அபாண்டத்தை சுமத்துகிறார் என்று தெரியவில்லை. நான் அல்லாஹ்வின் கூற்றுப்படி குர்ஆனைக் கொண்டு உங்களை நினைவுறுத்துகிறேன். (பார்க்க இறைவசனம் 6:70) ஆனால் அவரோ இறைவசனங்களைக் கொண்டு விளையாடுவதாக எத்தகைய ஆதாரமுமில்லாமல் எழுதுகிறார். அத்தகைய நிலையை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். மாற்று மதத்தவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக ஓட்டுக மதவெறி என்று கூறிவிட்டு உண்மையை பூசி மெழுகுகிறார். நான் அவதானித்த வகையில் அவருடைய எழுத்தில் பூசி மெழுகுதல் நிறையவே காண கிடைக்கிறது.

சுனாமி குறித்து நான் பதித்த இறைவசனத்துக்கு என்னுடைய தளத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இன்னும் என்னவெல்லாமோ எழுதும் அபு உமர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் எழுதியது தவறென்றால் அல்லவா மன்னிப்பு கேட்க முடியும். ஒவ்வொருவருடைய புரிந்துணர்வும் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் அவருடைய புரிந்துணர்வை, அவர் இவ்வாறு சொல்வதால் என் மீது திணிப்பதாகவே நான் கருதுகிறேன்.

எக்காலத்திற்கும் ஏற்ற குர்ஆன் என்று நாம் கூறுகின்றோம். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையே குர்ஆனாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ். இப்ராஹீம் நபியவர்கள் எதற்கும் தன் இறைவன்பால் முகம் திருப்புபவராக இருந்தார் என்ற இறைவசனம் இது அத்தனையும் செவிமடுத்துக் கொண்டே நம்மிடையே ஏற்படக்கூடிய நிகழ்வுகளுக்கு மட்டும் ‘அந்த நிலைமை இப்போது இல்லை’ என்றும் ‘இயற்கை சீற்றம் இறை சித்தமா?’ என்றும் பேசிக் கொண்டிருக்கிறோமே இது சரியா சகோதரர்களே? அறிந்து கொள்ளுங்கள்! இறை சித்தமா? என்ற சொல்லில் தொக்கி நிற்பது கேள்வியல்ல ஈமானின் பலவீனம். உறுதியான ஈமானில் திளைத்த உள்ளம் இயற்கை சீற்றம் இறை சித்தம்தான் என்று அடித்து சொல்லும்.

இன்னும் கவனியுங்கள். இடி தாக்கி அழித்த ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது மனிதர்களைப் பற்றியோ நிராகரிக்கும் மக்கள் என்ன கூறுகிறார்கள்: ‘அது இயற்கையாக நடக்குது. நாம என்ன செய்ய முடியும்’ நாம் ஒவ்வொருவரும் இதை செவிமடுத்திருப்போம். ஆனால் நம்பிக்கை கொண்ட மக்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான் “இன்னும் அவனே (அல்லாஹ்வே) இடிகளை விழச் செய்து அதைக் கொண்டு தான் நாடியவரைத் தாக்குகின்றான்…” (13:13). இப்போது சிந்தியுங்கள். நிராகரிக்கும் மக்கள் கூறும் ‘இயற்கை’ என்ற நிராகரிப்புக்கும், சகோதரர் சலாஹுத்தீனின் ‘இயற்கை சீற்றம் இறை சித்தமா? என்ற கேள்விக்கும் ஏதேனும் வித்தியாசம் தென்படுகிறதா? நம்பிக்கை கொண்ட பின் மொழிகின்ற வார்த்தைகளால் நிராகரிக்கும் மக்களாக ஆகிவிட வேண்டாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மேலே நான் குறிப்பிட்ட இறைவசனத்தை (13:13) படிக்கும் நம்பிகையற்ற மக்களுக்கு இறைவன் கொடுமையாளனாக தெரிகிறான் என்பதற்காக இறை வசனங்களைக் கூறாமல் இருக்க முடியுமோ? இன்னும் நிறைய எழுத வேண்டும் நேரமின்மை காரணமாக இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

அபு உமரை தவிர்த்து மற்றவர்கள் பதிலளித்தால் நல்லது. ஏனென்றால் உங்கள் இஸ்லாம் மின் மன்றத்தில் வரதட்சணை சம்பந்தமாக வாதாடியதில் இருந்து என் மீதான நல்லெண்ணம் அவருக்கில்லை என்பதாலும், இன்னும் “(பிறரின் குறைகளை)நீங்கள் துருவி துருவி ஆராந்து கொண்டிராதீர்கள்”… (49:12) என்ற இறைவசனத்தை மறந்து தன்னுடைய அத்தனை பதிவுகளிலும் அடுத்தவரை குறை சொல்லிக் கொண்டே இருப்பதாலும் இதைச் சொல்கிறேன்.

இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

இறை வசனங்களை பொய்ப்பிப்பவர் யார்?

39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.

39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால் , நானும் முத்தகீன் – பயபக்தியுடையவர்களில் – ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும் ;

39:.58. அல்லது: வேதனையை கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகி விடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

39:59. (பதில் கூறப்படும்) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் (நிராகரிப்பவர்களில்) ஒருவனாக இருந்தாய்.”

39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம (இறுதி தீர்ப்பு) நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரத்தில் இருக்கிறதல்லவா?

அல் குர்ஆன்: அல் ஜூமர் (கூட்டங்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை வசனங்களை பொய்ப்பிப்பவர் யார்?

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு செய்கிறார்களோ அவர்கள் தாம் நபிகளாரின் சிபாரிசைக் கொண்டும், துஆவைக்கொண்டும் அல்லாஹ்விடம் நெருங்கி அவனின் திருப்பொருத்தத்தைப் பெறுகிறவர்கள். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.