பாங்கின் பிரார்த்தனை!

நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஒருமுறை என்மீது ஒருவர் ஸலவாத்துச் சொன்னால் அல்லாஹ் அவர்மீது பத்துமுறை ஸலவாத்துச் சொல்வான். பிறகு பாங்குடைய துஆவில் எனக்காக வஸீலாவை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தியுங்கள். இந்த வஸீலா சுவனத்தில் வழங்கப்படும் மாபெரும் ஒரு பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒரே ஒரு மனிதருக்கு அப்பதவி வழங்கப்படுகிறது. அது எனக்கு வழங்கப்படுவதை ஆசைப்படுகிறேன். ஆகவே எனக்காக எவர் அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேட்கிறாரோ அவர் மறுமையில் என்னுடைய ஷபாஅத்துக்கு உரியவராகிறார்’. (முஸ்லிம்) Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on பாங்கின் பிரார்த்தனை!

அறிந்து கொள்ளுங்கள்!

57:20. அறிந்து கொள்ளுங்கள்; “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் (தீர்ப்பு நாளில்) கடிமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு – நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அறிந்து கொள்ளுங்கள்!

சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்

எதையும் சிருஷ்டிகளிடம் கேட்பதற்கு மூமின் முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக நபிமார்கள் யாரிடமும் கேட்க கூடாது. அவர்களிலும் குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. நபிமார்கள் மதிப்பாலும், கண்ணியத்தாலும் பொதுவாக மேலானவர்கள். எதையும் அல்லாஹ்விடம் கேட்பார்கள். அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் அல்லாஹ் போதுமானவன். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்

அனைத்துக்கும் சொந்தக்காரன்!


6:162. (நபியே) (தூதரே) நீர் கூறும்: என்னுடைய தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும், (அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. “அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)

6:164. அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் – பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று (நபியே) நீர் கூறும்.

6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை விடப் பதவிகளில் உயர்த்தினான் – நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைத்துக்கும் சொந்தக்காரன்!

இஸ்லாத்தின் இரு அடிப்படைகள்

இஸ்லாத்தில் அடைப்படைச் சித்தாந்தங்கள் இரண்டு. ஒன்று: இணைவைக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிப்படுவது. இரண்டு: வழிபாடுகளின் முறைகளை அல்லாஹ்வின் சட்டங்களிலிருந்தும், அவன் தூதர் காட்டித்தந்த வாஜிப், முஸ்தஹப் என்ற விதிகளிலிருந்தும் எடுத்து வழிபடுவது. தூதுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் தோன்றியிருக்கிறார்கள். அவ்வப்போதுள்ள நபிமார்களின் ஏவல்களுக்கொப்ப அல்லாஹ்வுக்கு வணக்கங்கள் செலுத்தப்பட்டன. யூதர்களின் தௌராத் வேதம் உறுதி குலையாமல் நேர்மையாக இருந்த காலத்தில் அதன் விதிப்படி வணக்கங்கள் புரிந்தவர்கள் முஸ்லிம்களாக மதிக்கப்பட்டனர். இன்ஜீலும் அப்படித்தான். அதாவது இவ்வேதங்களில் மனிதக்கரம் நுழைந்து அவற்றை மாற்றி மறிப்பதற்கு முன்னர் வேதங்களுக்கொப்ப வணங்கி வழிபட்டு வந்தவர்களையே முஸ்லிம்களென்று கூறமுடியும். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , | Comments Off on இஸ்லாத்தின் இரு அடிப்படைகள்

இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் ஒன்றே!

தொன்று தொட்டு இன்று வரை அனைத்து நபிமார்களும் போதித்து வந்த ஒரேவழி நாம் விளக்கிக் காட்டிய இதே இஸ்லாம் ஒன்றே. இதுவே நேர்மையான வழி. இதுவே உண்மையான இஸ்லாமிய வழி. நேர்மையில்லாச் செய்கைகளை இஸ்லாமியச் செய்கைகள் எனக்கருதி எவர் செயல்பட்டாலும் அவை இஸ்லாத்திற்குப் புறம்பான செய்கைகள் என்றே கருதப்படும். இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன்: “இஸ்லாத்தைத் தவிர வேறொரு மார்க்கத்தை யாரும் விரும்பினால் நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவன் நஷ்டமடைந்தோரில் சேர்ந்து விடுவான்” என்று கூறுகிறான். (3:85) Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் ஒன்றே!

குதர்க்க வாதமுடைய செவிடர்கள்!

“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை
செய்வதெல்லாம் வஹீமூலம் எனக்கு அறிவிக்கப்
பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்;
எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும்
போது, (அவர்கள் நேர்வழியைப் பெறும்) அந்த
அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.

உம்முடைய இறைவனிடமிருந்துள்ள
வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத்
தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக
நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்”
என்று
அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.

இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான
தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர்
ஆத்மாவுக்கும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட
மாட்டாது. மேலும், (நன்மை, தீமையில்) ஒரு கடுகளவு
எடையிருப்பினும் அதனையும் நாம் (கணக்கில்)
கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே
போதும். (21:45-47)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on குதர்க்க வாதமுடைய செவிடர்கள்!

சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?

கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43)

“…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7)

“உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம் ஆக்கினோமா? (என்று)”. (43:45) Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?

இறை சாபத்துக்குள்ளான மன எரிச்சல்!

3:118-120 இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றை விட) அதிக கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்) அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும் போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகிறோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கிறார்கள். — அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கி சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.” — உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கிறது. மேலும், உங்களுக்கு துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அல் குர்ஆன்: சூரா ஆல இம்ரான்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை சாபத்துக்குள்ளான மன எரிச்சல்!

அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை

வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் போன்று பிரார்த்திக்க ஏவியிருக்கிறார்கள். குறிப்பாக ஸுஜுதில் துஆ செய்வது மிக ஏற்றமானது. ஸுஜுதில் அதிகமாகப் பிரார்த்திப்பதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியிருக்கிறார்கள். நிலையிலும், ருகூவிலும் கூடப் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும். குர்ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் தொழுகையில் மிகச்சிறந்த கர்மங்களாக இருந்தும் கூட மனிதன் தன் இரட்சகனிடம் சிரம் பணிந்து பாவமன்னிப்புத் தேடுதல் சிலாகிக்கத் தக்கதாக கருதப்படுகிறது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை