“நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை
செய்வதெல்லாம் வஹீமூலம் எனக்கு அறிவிக்கப்
பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்;
எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும்
போது, (அவர்கள் நேர்வழியைப் பெறும்) அந்த
அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள
வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத்
தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக
நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று
அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான
தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர்
ஆத்மாவுக்கும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட
மாட்டாது. மேலும், (நன்மை, தீமையில்) ஒரு கடுகளவு
எடையிருப்பினும் அதனையும் நாம் (கணக்கில்)
கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே
போதும். (21:45-47)