அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை

25:72 அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

28:55 அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து; ”எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.

23:3 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை

விசுவாசம்!

ஒருவர் பயந்தால் தம் விசுவாசத்தை மறைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி………

90- மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்காக ஆயிரத்து ஜந்நூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், நாம் ஆயிரத்து ஜநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா? என்று கேட்டோம். (ஆனால் பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக் குள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

புகாரி-3060: ஹூதைஃபா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on விசுவாசம்!

ஆள்பாதி ஆடைபாதி?

விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தில் கோலோச்சி கொண்டிருக்கும் இந்த காலத்தில் மனிதன் மீண்டும் ஆதி மனிதனின் கற்காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறான். சகல விஷயத்திலும் முன்னேற்றத்தின் பாதையில் வெற்றி நடை போடும் மனித இனம், உடலை மூடி மறைக்கும் உடை விஷயத்தில் மட்டும் கீழிறங்கி கொண்டு இருக்கிறது. ஆண் தன் அங்க அவயங்களை முழுமையாக மறைத்து உடை உடுத்தி கொள்கிறான். ஆனால் முழுமையாக மறைக்க வேண்டிய பெண் சகலமும் திறந்தவாறு. நம் கண் கொண்டு பார்ப்பதை தவறு என்று சுட்டி காட்டும் நோக்கோடு சொல்லும் போது கூட, இது இப்போதைய நாகரீகம் என்று சொல்லி தங்கள் தவறை மூடி மறைத்து விடுகிறார்கள். மனிதனை வளர்ச்சியின் உச்சாணிகொம்புக்கு கொண்டு சென்ற நாகரீகம் தான் சில விஷயங்களில் அதே மனிதனை கலாச்சார சீர்கேட்டிலும், இன்னும் சமூகங்களின் ஒழுக்க சீர் கேட்டிற்க்கும் வழி திறந்து விட்டது.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஆள்பாதி ஆடைபாதி?

வெற்றி பெற்றோரின் பண்புகள்!

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:1,2,3)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வெற்றி பெற்றோரின் பண்புகள்!

ஈமானின் இறுதி நிலை

89- பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் (இறைநம்பிக்கை) மதீனாவில் அபயம் பெறும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-1876: அபூஹூரைரா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமானின் இறுதி நிலை

தௌஹீதினதும் ஷிர்க்கினதும் போர்க்களம்

ஷிர்க்குடன் தௌஹீதுக்கு ஏற்பட்ட யுத்தம், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குமாறும், சிலை வணக்கத்தைக் கைவிடுமாறும் நூஹ் (அலை) அவர்கள் தனது மக்களை அழைத்த காலந்தொட்டு ஏற்பட்டதாகும். அம்மக்களிடையே நூஹ் (அலை) அவர்கள் 950 வருடகாலங்கள் வாழ்ந்து தௌஹீதுப் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். பின்வருமாறு அல்குர்ஆன் கூறுகின்றவாறு அவர்களுடைய மறுப்பு இருந்தது.

“(அவர்களில் உள்ளவர்கள் தங்களில் உள்ள மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்’ (என்னும் விக்கிரத்)தையும் (விட்டு விடாதீர்கள்.) ‘ஸுவாவு’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ரு’ (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டு விடாதீர்கள் என்று கூறி நிச்சயமாக அநேகரை வழிகெடுத்து விட்டனர்” (71:23,24)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவ்வசனங்களுக்கு அளிக்கும் விளக்கத்தை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இவ்வசனத்தில் கூறப்பட்ட பெயர்கள் நூஹ் (அலை) அவர்களது கூட்டத்திலிருந்த நல்லடியார்களுடையதாகும். அவர்கள் மரணித்த பின்னால், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் (அவர்களது நினைவாக) ஏதேனும் நட்டு அடையாளமிடுமாறு, ஷைத்தான் அம்மக்களைத் தூண்டினான். அவர்கள் அவ்வாறே நட்டார்கள். ஆனால் அவர்கள் அவற்றை வணங்கவில்லை. இந்தச் சமூகம் இறந்த பின்னால் அடுத்து வந்த சமூகம் அதனை வணங்க ஆரம்பித்தது. (இதுதான் சிலை வணக்கத்தின் தோற்றமாகும்)

நூஹ் (அலை) அவர்களுக்குப் பின்னால் பல தூதர்கள் வந்தனர். அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், வணக்கத்துக்குத் தகுதியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதை விட்டு விடுமாறும் அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தனர். (சகோதரனே!) குர்ஆனின் பக்கம் செவிதாழ்த்து! அது அவர்களைப்பற்றி உனக்குத் தகவல் சொல்லும்.

“‘ஆத்’ (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய ரஸூலாக அனுப்பினோம்) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா?” என்று கூறினார்” (7:65)

“‘ஸமூது’ (என்னும் மக்)களிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (நம்முடைய ரஸூலாக அனுப்பி வைத்தோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு நாயன் இல்லை” என்று கூறினார்” (11:60)

“‘மத்யன்’ (என்னும் ஊர்) மக்களுக்கு, அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பினோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு நாயன் உங்களுக்கு இல்லை” என்று கூறினார்” (11:84)

“(நபியே!) இப்றாஹீம் (அலை) தன்னுடைய தந்தையையும் ஜனங்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாரும். ‘நிச்சயமாக நான் நீங்கள் வணங்குபவைகளை விட்டு விலகிக் கொண்டேன்; எவன் என்னைச் சிருஷ்டித்தானோ, அவனைத்தவிர, (அவனையே நான் வணங்குவேன்;) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான் (என்றும் கூறினார்.)” (43:26,27)

நபிமார்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்களாகவும் தடை செய்பவர்களாகவுமே முஷ்ரிக்குகள் இருந்துள்ளனர். அந்த நபிமார்கள் தங்களால் பலம் கொண்டளவு எதிரிகளை எதித்துப் போராடினர்.

எங்கள்பால் அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், நம்பிக்கைக்குரியவர்; உண்மையுரைப்பவர் என்றெல்லாம் நபித்துவத்துக்கு முன்னால் பிரபல்யமடைந்திருந்தனர். அம்மக்களை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வணக்கம் செலுத்துமாறும், அவர்களுடைய முன்னோர்கள் வணங்கி வழிபட்டு வந்த சிலை வணக்கத்தை விட்டு விடுமாறும் நபியவர்கள் சொன்னபோது, அவர்களுக்குச் சூட்டியிருந்த உண்மை பேசுபவர், நம்பிக்கைக்குரியவர் என்ற புகழாரங்களையெல்லாம் மறந்து, பொய்யன், சூனியக்காரன் என்றெல்லாம் அம்மக்கள் சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுடைய புறக்கணிப்பைப்பற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப்பற்றி அவர்கள் ஆச்சர்யப்பட்டு, ‘இவர் பொய் சொல்லும் ஒரு சூனியக்காரர்தான்’ என்று (உம்மைப் பற்றி) இந்நிராகரிப்போர் கூறுகின்றனர். என்ன! இவர் (நாம் வணங்கும்) தெய்வங்கள் யாவற்றையும் (நிராகரித்து விட்டு வணக்கத்துக்குரியவன்) ஒரே ஆண்டவன் தான் என்று ஆக்கி விட்டாரா? மெய்யாகவே இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான் (என்று கூறி,) அவர்களில் உள்ள தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி ‘இவரை விட்டு) நீங்கள் சென்று விடுங்கள்; உங்கள் தெய்வங்களில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்களுடைய தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இக்காரியம் நிச்சயமாக (உங்களுக்கு விரோதமாக)க் கருதப்பட்டதாகும்’ என்று (கூறிக் கொண்டே) சென்று விட்டனர்” (38:4,5,6)

“இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தவர் (ஜனங்)களும் (அவர்களிடம்) எந்தத்தூதர் வந்த போதிலும் (அவரை) ‘சூனியக்காரர்’ அல்லது ‘பைத்தியக்காரர்’ என்று அவர்கள் கூறாமல் இருக்கவில்லை. இவ்வாறு (கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! அன்று அவர்கள் (இயற்கையிலேயே) அக்கிரமக்கார ஜனங்களாக இருக்கின்றனர்” (51:52,53)

தௌஹீதின்பால் மக்களை அழைத்த நபிமார்களின் நிலைபற்றியும், அவர்களையும், அவர்கள் கொண்டு வந்தவற்றையும் பொய்யாக்கிப் புறக்கணித்துப் பல அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்த பொய்யர்களின் நிலைபற்றியும் மேலேயுள்ள வசனங்கள் அழகாகக் கூறுகின்றன.

எமது இக்காலத்தில் ஒரு முஸ்லிம் (அல்லது ஒரு ஜமாஅத்) ஏனைய முஸ்லிம் சகோதரர்களுக்கு நற்பண்புகள், உண்மை நம்பிக்கைப் போன்றவற்றைப் போதித்தால் இங்கு எதிர்ப்போ இடையூறோ வரமாட்டாது. நபிமார்கள் ரஸூல்மார்கள் செய்த போதனையாகிய தௌஹீதின் பக்கம் மக்களை அழைக்க முற்பட்டாலோ எதிர்ப்புக் கிளம்பிவிடும். அவன்மீது பல பொய்யான கதைகளையெல்லாம் கட்டி விடுவார்கள். அவனுடைய அழைப்பை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அவனை ‘வஹ்ஹாபி’ என்றும் சொல்லுவார்கள். தௌஹீதுடையக் கருத்தைக் கூறும் குர்ஆன் வசனமொன்றை மொழிந்தாலும் ‘இது வஹ்ஹாபியத்தான வசனம்’ என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.

‘உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு’ என்ற ஹதீஸை அவர்கள் முன் கூறினால் இது வஹ்ஹாபியத்தான ஹதீஸ் என்று கூறிவிடுவார்கள். தொழுகின்றவன் நெஞ்சின் மீது கையை வைத்து விட்டாலும் அல்லது அத்தஹிய்யாத்தின் போது விரலை ஆட்டி விட்டாலும் அவனை வஹ்ஹாபி என்று சொல்லி விடுவார்கள்.

அல்லாஹ்வை மட்டுமே உதவிக்கு அழைத்து, அவனுக்கு மட்டுமே வணக்கம் செலுத்தி நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவை நிலைநாட்டுகின்ற ஒருவனுடைய அடையாளமாக ‘வஹ்ஹாபி’ என்ற சொல் ஆகிவிட்டது. இது தௌஹீதுடைய அடிப்படையில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் செய்த ஒரு பேரருளாகும்.

தௌஹீதுப் பிரசாரகர்கள், பின்வரும் அல்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் தனது ரஸூலுக்குச் சொன்னபடி அந்த ரஸூல் (ஸல்) நடந்தவாறு தமது நடைமுறையை அமைத்துப் பொறுமையாக நடந்து கொள்ளல் அவசியமாகும்.

“(நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றம் குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகிவிடும்” (73:10)

“உமது இறைவனின் கட்டளைக்காக நீர் பொறுத்திரும். அவர்களிலுள்ள யாதொரு பாவியையும் நன்றி கெட்டோரையும் நீர் பின்பற்றாதீர்” (76:24)

முஸ்லிம்கள் அனைவரும் தௌஹீதை ஒப்புக்கொண்டு அதன் பிரசங்கிகளை நேசிக்க வேண்டும். ஏனென்றால் தௌஹீத் என்பது எல்லா ரஸூல்மார்களினதும் தஃவத்தா (பிரசாரமா)கும். இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய தஃவத்தும் இதுவேயாகும்.

எவனொருவன் நபி (ஸல்) அவர்களை நேசிக்கிறானோ, அவன் தௌஹீதை நேசித்தவனாவான். எவன் தௌஹீதுடன் கோபம் கொள்கிறானோ, அவன் நபி (ஸல்) அவர்களுடன் கோபம் கொள்பவனாவான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தௌஹீதினதும் ஷிர்க்கினதும் போர்க்களம்

நினைவுபடுத்தப்பட்ட பின்னரும், புறக்கணிப்பவர்கள் பற்றி..

எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம். (அல் குர்ஆன்: 32:22)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நினைவுபடுத்தப்பட்ட பின்னரும், புறக்கணிப்பவர்கள் பற்றி..

குழப்பங்களின் பரிகாரம் நல்லறங்களே……

88- நாங்கள் உமர் (ரலி) இடம் அமர்ந்திருந்த போது, நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்தவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு). நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) நீர் அதற்குத் தகுதியானவர் தாம் என்றனர். ஒரு மனிதன் தமது குடும்பத்தினரிடமும் தமது சொத்துகளிலும் தமது குழந்தைகளிடமும் தமது அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம் ஃபித்னாவில் (சோதனையில்)ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.

அதற்கு உமர் (ரலி) நான் இதைக் கருதவில்லை என்றனர். கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால்முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன் என்று கூறினார்கள். மூமின்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என நான் கூறினேன். அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா? என உமர் (ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது என்று உமர் (ரலி) கூறினார்கள்.

ஷகீக் கூறியதாவது: அந்தக் கதவு எதுவென உமர் (ரலி) அறிவார்களா? என்று ஹூதைஃபா (ரலி)விடம் நாங்கள் கேட்டோம். ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவதுபோல் அதை உமர் (ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன் என்று ஹூதைஃபா (ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹூதைஃபா (ரலி) இடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹூதைஃபா (ரலி) அந்தக் கதவு உமர் (ரலி) தாம் என்றார்கள்.

புகாரி-525: ஹூதைஃபா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on குழப்பங்களின் பரிகாரம் நல்லறங்களே……

பொறுமையாளர்களுடன் அல்லாஹ்!

2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

2:155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

2:156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்.

2:157 இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

39:10 (நபியே!) நீர் கூறும்; ”ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் – அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”

அல் குர்ஆன்
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பொறுமையாளர்களுடன் அல்லாஹ்!

பிள்ளைகளிடையே பாரபட்சம்

அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம்

சிலர் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை விடுத்து சிலருக்கு மட்டும் அன்பளிப்புகள், வெகுமதிகள் வழங்குகின்றனர். ஷரீஅத் ரீதியிலான தக்க காரணம் இல்லையெனில், சரியான கூற்றின் பிரகாரம் இவ்வாறு செய்வது ஹராமாகும். உதாரணமாக தம் பிள்ளைகளில் ஒருவனுக்கு மற்ற பிள்ளைகளூக்கு ஏற்படாத ஒரு தேவை ஏற்பட்டு விட்டதெனில் – உதாரணமாக அவன் நோயாளியாக இருக்கிறான், அல்லது அவனுக்கு கடன் இருக்கிறது, அல்லது திருக்குர்ஆனை மனனம் செய்ததற்காக அவனுக்கு வெகுமதி கொடுக்க வேண்டி இருக்கிறது, அல்லது அவன் வேலையில்லாமல் இருக்கிறான், அல்லது அவன் குடும்பம் பெரிதாக இருக்கிறது, அல்லது அவன் படித்துக் கொண்டு இருக்கிறான் – அவனுக்குப் படிப்புச் செலவு இருக்கிறது, இன்னும் இதுபோன்ற மார்க்கம் அனுமதிக்கின்ற ஏதாவது ஒரு காரணம் இருந்தால் அந்தப் பிள்ளைக்கு மட்டும் அன்பளிப்பு வழங்குவதில் தவறில்லை. ஆனால் அப்படிக் கொடுக்கும் போது அதுபோன்ற தேவை மற்ற பிள்ளைகளுக்கும் வந்தால் அவனுக்கும் கொடுப்பேன் என அந்த தந்தை எண்ணிக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்திற்கும் பொதுவான ஆதாரம்: அல்லாஹ் கூறுகிறான்: “நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” (5:8). குறிப்பான ஆதாரம் நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். அவருடைய தந்தை அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, ‘நான் என்னுடைய இந்த மகனுக்கு ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்துள்ளேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது போன்று உமது எல்லா பிள்ளைகளுக்கும் அன்பளிப்புச் செய்துள்ளீரா? எனக் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்று கூறவும், அப்படியாயின் அந்த அன்பளிப்பை திரும்பப் பெறுவீராக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மற்றொரு அறிவிப்பில், ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் எனக் கூறினார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்று தான் அன்பளிப்புச் செய்ததை திரும்பப் பெற்றுக் கொண்டார்’ என வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிமுடைய ஒரு அறிவிப்பில், ‘அப்படியானால் என்னை இதற்கு சாட்சியாக்காதீர். அநியாயத்துக்கு நான் சாட்சியாக இருக்க மாட்டேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் கருத்தாவது: அன்பளிப்பு ஒரு ஆணுக்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது கொடுக்கப்பட வேண்டும் – சொத்துப் பங்கீட்டில் கொடுக்கப்படுவது போன்று.

சில குடும்பங்களின் நிலையை பார்க்கின்றபொழுது இப்படியும் சில தந்தையர்களைக் காண முடிகிறது. அவர்கள் தம் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். இது விஷயத்தில் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை. இதனால் பிள்ளைகளின் உள்ளங்களில் பொறாமையை மூட்டி விடுகின்றனர். அவர்களிடையே வெறுப்பையும், பகைமையையும் விதைத்து விடுகின்றனர்.

சிலபோது, தனது பிள்ளை உடன் பிறந்த சகோதரனைப் போல் இருந்தால் அவனுக்குக் கொடுப்பதும், தன் மனைவியின் சகோதரனைப் போல் இருந்தால் கொடுக்காமல் இருப்பதும் உண்டு. (சவுதி போன்ற நாடுகளில் இப்படி நடக்கிறது) அல்லது தனது மனைவியரில் ஒருத்தியினுடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பதும் ஒருத்தியினுடைய பிள்ளைகளுக்கு கொடுக்காமல் இருப்பதும் உண்டு. சில சமயம் தமது மனைவியரில் ஒருத்தியின் பிள்ளைகளை குறிப்பிட்ட பள்ளியிலும் ஒருத்தியினுடைய பிள்ளைகளை வேறொரு பள்ளியிலும் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு செய்வது அவர்களுக்கே பாதகமாக மாறி விடும். காரணம் புறக்கணிக்கப்பட்டவன் பெரும்பாலும் எதிர்காலத்தில் தன்னுடைய தந்தையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான்.

தம் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டியவருக்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘அவர்கள் உம்மிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளவதில் சமமாக இருக்க வேண்டும் என்பதை நீர் விரும்பவில்லையா?” அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: அஹ்மத், முஸ்லிம்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on பிள்ளைகளிடையே பாரபட்சம்