இரண்டு விதக் கூலிகள்!

94- மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும் தம் எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப்பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தும் கொண்டவர். இம்மூவருக்கும் இரண்டுவிதக் கூலிகள் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-97: அபூமூஸா அல் அஷ்அரி(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இரண்டு விதக் கூலிகள்!

உலகம் ஒரு பரிட்சைக் கூடம் என்பது பற்றி..

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 21:35)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உலகம் ஒரு பரிட்சைக் கூடம் என்பது பற்றி..

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக சமுதாயத்தாருக்கு..

93- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் அதனை நம்பித்தான் ஆக வேண்டிய நிலையிருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ) தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-4981: அபூஹூரைரா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக சமுதாயத்தாருக்கு..

உலகை நாடுவோர்க்கு உலகிலேயே வழங்கப்படுவது பற்றி..

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப் பட்டவராகவும் நுழைவார். (அல்குர்ஆன்: 17:18)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உலகை நாடுவோர்க்கு உலகிலேயே வழங்கப்படுவது பற்றி..

ஆணிலிருந்தே பெண்!

கேள்வி எண்: 1. ஒரு பெண் கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கணவனின் உயிரணுவே காரணம்; மனைவி காரணமல்ல என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருகுர்ஆன் வசனம் எது?

பதில்: “இன்னும் நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல்குர்ஆன்: 53:45-46)

“(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டு சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளியாக அவன் இருக்கவில்லையா” (அல்குர்ஆன்: 75:37)

சிறு விளக்கம்: பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும். ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும். Y என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம் படித்திருக்கிறோம்.

இப்போது மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் இன்றைய அறிவியலுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றது என்பதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கின்றது. ஆனால், பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்தணுக்களில் X மற்றும் Y குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்கள் கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேரக்கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், Y குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.

அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் உயிரணுக்களே சினை முட்டையுடன் சேர்ந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகின்றது.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது என்ன்வென்றால், ‘கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் இந்திரியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது. பெண்ணின் சினை முட்டையல்ல’ இன்னும் சற்று விளக்கமாக கூறுவதென்றால்; ‘ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டே’ என்பது நன்கு புலப்படுகின்றது.

20-ம் நூற்றாண்டின் இந்த அரிய கண்டுபிடிப்பை 7-ம் நூற்றாண்டிலேயே கூறிய அல்லாஹ்வின் திருமறையின் மகிமையை உலகிற்கு எடுத்துக் கூறுவது நமது கடமையன்றோ?

இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையையே பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறார்கள். குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம். இவர்கள் பின்வரும் இறைவசனங்களைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

“அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும். ஆகவே, தான் விரும்பியவற்றை அவன் படைக்கிறான். தான் விரும்புவோருக்கு பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கிறான் அல்லது அவர்களுக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கிறான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன்” (அல்குர்ஆன்: 42:49-50)

Posted in கேள்வி பதில் | Comments Off on ஆணிலிருந்தே பெண்!

அறிவிப்பு!

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் திறம்படச் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிய கல்வி மையம்’ (IEC) நடத்திய (2002-ஆம் ஆண்டு) மார்க்க அறிவு போட்டியின் கேள்வி பதில்கள் அவர்களின் முழுமையான அனுமதியுடன் இந்த தளத்தில் பதியப்படுகின்றது.

Posted in கேள்வி பதில் | Comments Off on அறிவிப்பு!

இறை அத்தாட்சிகளை கண்டு ஈமானிய உறுதி கொள்தல்..

92- (இறந்து விட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர் ஆவோம்.(ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி) இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு என்று கேட்டபோது அல்லாஹ் நீங்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லையா? என்று கேட்டான். அவர்கள் ஆம்,(நம்பிக்கைக் கொண்டுள்ளேன்) ஆனாலும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன் என்று பதிலளித்தார்கள். லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன்.

புகாரி-3372: அபூஹூரைரா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இறை அத்தாட்சிகளை கண்டு ஈமானிய உறுதி கொள்தல்..

மூதாதையர்களின் மார்க்கம்?

ஆதி கால மதங்களில் ஊறிப் போய், தமது மூதாதையர்கள் பின்பற்றும் மார்க்கமே சரியென கூறுபவர்கள் பற்றி..

34:43 நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள், ‘இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம் : திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, ‘இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை’ என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன்: 34:43)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மூதாதையர்களின் மார்க்கம்?

விசுவாசத்தில் பலவீனர்களுக்கு உதவிபுரிதல் பற்றி …

91- நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் சிலருக்கு கொடுத்தார்கள். சிலரைவிட்டார்கள். (யாருக்கு கொடுக்கவில்லையோ) அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் மூமின் என்றே கருதுகிறேன் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவரை முஸ்லிம் என்று சொல் என்று சொன்னார்கள். சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் என் நாவில் வந்தபோது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் அவரை ஒரு மூமின் என்று கருதுகிறேன் என்றேன். அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு நபி (ஸல்) பழைய பதிலையே கூறிவிட்டு ஸஅதே! நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கின்றேன். ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம் ஏதும் கொடுக்காதிருந்தால் (குற்றம் இழைத்து அதனால்)அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான் என்றார்கள்.

புகாரி: 27 ஸஅது(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on விசுவாசத்தில் பலவீனர்களுக்கு உதவிபுரிதல் பற்றி …

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே……

(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன்:2:272)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே……