91- நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் சிலருக்கு கொடுத்தார்கள். சிலரைவிட்டார்கள். (யாருக்கு கொடுக்கவில்லையோ) அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் மூமின் என்றே கருதுகிறேன் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவரை முஸ்லிம் என்று சொல் என்று சொன்னார்கள். சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் என் நாவில் வந்தபோது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் அவரை ஒரு மூமின் என்று கருதுகிறேன் என்றேன். அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு நபி (ஸல்) பழைய பதிலையே கூறிவிட்டு ஸஅதே! நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கின்றேன். ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம் ஏதும் கொடுக்காதிருந்தால் (குற்றம் இழைத்து அதனால்)அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான் என்றார்கள்.
புகாரி: 27 ஸஅது(ரலி)