அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் – பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன்: 6:164)
மற்றவரின் பாவச் சுமையை நான் சுமப்பேனா?
அந்த எழுபதினாயிரம் பேர் யார்? கவனியுங்கள்!
131- நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, ‘இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், ‘பாருங்கள்” என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், ‘இங்கும் இங்கும் பாருங்கள்” என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்” என்று சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்றவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் ‘நாமோ இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில் பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீது அவனுடைய தூதர் மீதும்நம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர்” என்று கூறினார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள்; ஓதிப்பார்க்கமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரலி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ”இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டுவிட்டார்” என்று கூறினார்கள்.
களங்கமில்லா ஈமானுக்கு பரிசு நேர்வழியே!
எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்: 6:82)
பௌர்ணமி நிலவின் பிரகாசம் வேண்டுமா?
130- நிச்சயமாக என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர், அல்லது ஏழு லட்சம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை-அவர்களின் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்) அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும்.
அல்லாஹ் அல்லாதவனை அழைப்பவனுக்கு உதாரணம்
அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
“மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகின்றது. அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்; அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ, அவையாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும், ஓர் ஈயைக் கூட சிருஷ்டிக்க முடியாது. (ஈயை சிருஷ்டிப்பதென்ன?) ஓர் ஈ அவர்களுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்ட போதிலும் அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவற்றால் முடியாது. (ஏனென்றால், அவற்றைத் தெய்வங்களென) அழைப்போரும், அவர்களால் தெய்வங்களென அழைக்கப்படுபவர்களும் பலஹீனமானவர்களே!” (22:73)
கஷ்டத்திலும் துன்பத்திலும் உங்களுக்கு உதவ வேண்டும் என நீங்கள் அழைக்கும் அவுலியாக்கள் அதனைச் செய்ய சக்தியற்றவர்கள் என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் எல்லா மனிதர்களும் கேட்கக் கூடியவாறு அல்லாஹ் கூறியுள்ளான். அவுலியாக்களான அவர்களோ, அல்லாஹ்வுடைய படைப்புகளிலிருந்து ஓர் ஈயைத் தானும் படைக்கச் சக்தியற்றவர்கள்.
மரணித்து அடக்கம் செய்யப்படிருக்கும் அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் உணவிலிருந்தோ, அல்லது பானத்திலிருந்தோ ஏதேனுமொன்றை அந்த ஈ அபகரித்துக் கொண்டால் அதனை மீட்டு எடுக்கவும் அவர்களால் முடியாது. இவர்களுடைய பலஹீனத்துக்கு இதுவே ஓர் அத்தாட்சியாகும்.
ஈயோ பலஹீனமான ஒன்று. இதனுடைய சக்தியை விட மரணித்த அவர்கள் பலஹீனமானவர்கள். நீங்கள் எவ்வாறுதான் அவர்களை உதவிக்கு அழைப்பீர்கள்?
அல்லாஹ் அல்லாத நபிமார்களையும், அவுலியாக்களையும் உதவிக்கு அழைக்கின்றவர்களுக்கு எதிரான மிகக் கடுமையான ஒரு மறுப்பாகவே இந்த உதாரணம் அமைந்துள்ளது.
அல்லாஹ் அல்லாதவர்களை உதவிக்கு அழைப்பவர்களுக்கு மற்றுமொரு உதாரணத்தை அல்லாஹ் கூறுகிறான்.
“(நாம் பிரார்த்தனை செய்து) அழைக்கத் தகுதியுடையோன் அவனே. (அல்லாஹ்தான்) எவர்கள் அவனையன்றி (மற்றைய பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தை செய்து) அழைக்கின்றார்களோ அவர்களுக்கு, அவை யாதொரு விடையும் அளிக்கா.
(அல்லாஹ்வையன்றி மற்றவற்றை அழைப்போரின் உதாரணம்;) தண்ணீர் (தானாகவே) தன்வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதனை அவன் தன் கையைக் கொண்டு அள்ளிக் குடிக்கும் வரையில் அவனுடைய) வாயை அது அடைந்து விடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்போர் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது” (13:14)
‘துஆ’ என்றால் அது ‘இபாதத்’ (வணக்கம்) என்றும், அது அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் இந்த (13:14) வசனம் தெளிவுபடுத்துகிறது. (இணைவைக்கின்ற) இவர்கள் தான், அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கின்றனர். அவர்களால் இவர்கள் எந்தப்பயனையும் அடையப் போவதில்லை. எதனைக் கொண்டும் இவர்களுக்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். இதிலே அவர்களுக்கு உதாரணமாவது, கிணற்று ஓரத்தில் நின்று கொண்டு கையை நீட்டாமலேயே அதிலிருந்து கையினால் தண்ணீரைக் குடிக்க முயற்சிப்பது போன்றதாகும். இதற்கு ஒருகாலும் அவன் சக்திபெற மாட்டான் என்று ஓர் உதாரணத்தின் மூலம் அல்லாஹ் விளக்குகிறான்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுவதை இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பதிந்து வைத்துள்ளார்கள். ‘அவன் தண்ணீரை நோக்கி தன்பால் வருமாறு அழைத்துச் சாடைகாட்டுபவனைப் போன்றவனாவான். அது அவனிடம் வரவே மாட்டாது’.
பின்பு அல்லாஹ், தன்னல்லாதவர்களை உதவிக்கு அழைப்பவர்கள் மீது குஃப்ரை (இறைநிராகரிப்பை)க் கொண்டு தீர்ப்பளித்துள்ளான். ‘நிராகரிப்போர் செய்யும் பிரார்த்தனை வழிகேடாகவே இருக்கின்றது’ என்று அல்லாஹ் கூறுவதற்கமைவாக அவர்கள் வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.
முஸ்லிம் சகோதரனே! அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதிலிருந்து நீ விலகிக் கொள்வாயாக! அவ்வாறு அழைத்தால் நீ நிராகரித்து வழிகேட்டிலாகி விடுவாய். ஏகத்துவக் கொள்கையுள்ள மூமினாக நீ ஆகுவதற்காக, யாவற்றின் மீதும் சக்தியுள்ளவனான அல்லாஹ்வை மட்டுமே பிரார்த்தனை செய்து அழைப்பாயாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
நமது காரியங்களை ஒப்படைக்க தகுதியான அல்லாஹ்!
நபி மூஸா (அலை) (தம் சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால் அவனை முற்றிலும் நம்பி விடுங்கள். அவனிடமே உங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.” (அல்குர்ஆன்: 10:84)
கேள்வி கணக்கின்றி சுவனம் புகும் விசுவாசிகள்
129- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள் என்று கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடு போட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து அல்லாஹ்பின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார் என்று சொன்னார்கள்.
இரத்த உறவை காய்ந்து போகச் செய்யலாமா?
128- இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர், என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும் தாம் என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன் என்று கூறியதாக அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, அவர்களின் உறவைப் பேணி நடந்து கொள்வேன் என்றார்கள்.
இறைவனிடத்தில் நன்மை பலனுடையது எது?
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்க கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 18:46)
மிக இலேசான நரகவேதனை
127- மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.