135-உதுமான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இருகைகளையும் மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு நான் உளூ செய்வதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்வதைப் பார்த்திருக்கிறேன் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் என்னிடம், யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவர் முன் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று கூறினார்கள் என்றார்கள்.
உளுச் செய்யும் முறை………
வானங்களையும் பூமியையும் படைத்தோனே!
யூஸுஃப் நபி (அலை) ‘இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.” (அல்குர்ஆன்: 12:101)
தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…
134- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாதவரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
சத்தியம் Vs அசத்தியம்
அ(ல்லாஹ்)வன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான். (அல்குர்ஆன்: 13:17)
இசையும் இசைக் கருவிகளும்
மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான்” (31:6). இவ்வசனத்திலுள்ள மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் தோன்றும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஆமிர் (ரலி), மற்றும் அபூமாலிக் அல்அஸ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி.
மேலும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘திண்ணமாக இந்த சமுதாயத்தில் பூகம்பம், உருமாற்றம் செய்யப்படுதல், அவதூறு கூறல் ஆகியவை உண்டாகும். எப்போதெனில் அவர்கள் மது பானங்களை அருந்தும்போது, (நடனமாடி) பாட்டுப் படிக்கும் பெண்களை ஏற்படுத்தும் போது, இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னு அபித்துன்யா) இதே கருத்து திர்மிதியிலும் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் முரசு அடிப்பதைத் தடுத்துள்ளார்கள். நாதசுரம் (Pipe) பற்றிக் குறிப்பிடும் பொழுது அது தீய மோசமான சப்தம் எனக் கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் முன் சென்ற மார்க்க அறிஞர்களும் யாழ் (வீணை), மேன்டலின், ரீபெக், (Mandolin, Rebec-இவை யாவும் வீணையில் ஒவ்வொரு வகை), புல்லாங்குழல், சிங்கி (Cymbal) போன்ற இசைக் கருவிகள் ஹராம் எனக் கூறியுள்ளனர்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் இசைக் கருவிகளைத் தடுத்துள்ள ஹதீஸில் வயலின், சிதர் (Zither-இது ஒரு வகை நரம்பு இசைக்கருவி), பியானோ, கிதார் போன்ற நவீன இசைக் கருவிகளும் அடங்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சொல்லவதானால் இந்த நவீன இசைக் கருவிகள் ஹதீஸ்களில் தடை வந்துள்ள பழங்கால இசைக் கருவிகளை விட பெருமளவு பரவசம், போதை, மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். இப்னுல் கய்யூம் போன்ற அறிஞர்கள் கூறியதுபோல இசையின் போதை மதுவின் போதையை விடக் கடுமையானது. இசையுடன் பாடலும், மனமகிழ்ச்சியூட்டி பரவசப்படுத்தும் பெண்களின் குரலும் இணைந்து விட்டால் அது அதைவிடக் கூடுதல் ஹராமாகும், கூடுதல் பாவமாகும் என்பதில் சந்தேகமில்லை.
பாடலின் வரிகள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் காதலியின் அழகை வர்ணிப்பதாகவும் இருந்தால் விபரீதம் மேலும் அதிகமாகிவிடும். இதனால் தான் பாடல்கள் விபச்சாரத்திற்குத் தூது விடுகின்றது, உள்ளத்தில் நயவஞ்சகத்தை வளர்க்கின்றது என அறிஞர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் பாடல்கள் மற்றும் இசையின் பிரச்சனை இக்காலத்தில் மிகப் பெரும் குழப்பமாகவும் சோதனையாகவும் ஆகிவிட்டது.
மேலும் நம்முடைய இக்காலத்தில் பல்வேறு பொருட்களில் இசை நுழைந்து விட்டிருப்பது மிகப் பெரும் தொல்லையாகும். உதாரணத்திற்கு கைக்காடிகாரங்கள், அலாரங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கம்யூட்டர்கள், சில தொலைப்பேசி சாதனங்கள் ஆகியவற்றை சொல்லலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பெரும் மன உறுதி வேண்டும் என்றாகி விட்டது. அல்லாஹ்தான் உதவி செய்ய வேண்டும்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
ஆயிரத்தில் ஒருவர்……..
133- (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதிமனிதரை நோக்கி) ஆதமே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் (இறைவா!) இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் (உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள் என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் எத்தனை நரகவாசிகளை? என்று கேட்பார்கள். அதற்கு அவன் ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப்பிரித்திடுங்கள்) என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இது தான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும். இவ்வாறு நபியவர்கள் கூறியபோது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்)அந்த ஒரு நபர் எங்களில் யார்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (பயப்படாதீர்கள்,) நற்செய்தி பெறுங்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில்) இருப்பார் என்று கூறி விட்டுப் பிறகு, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன் என்று கூறினார்கள்.
உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹூஅக்பர்) முழக்கமிட்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக இருக்கவேண்டுமென நான் பேராவல் கொள்கிறேன். மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளைமாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.
கேள்வி கணக்கு கடினம் சிலருக்கு ஏன்?
எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம். (அல்குர்ஆன்:13:18)
சொர்க்கம் முஸ்லிமுக்கு மட்டுமே!
132- நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். அவர்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம் சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணைவைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக்காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்று தான், அல்லது சிவப்புக் காளை மாட்டிலுள்ள கறுப்புமுடியைப் போன்று தான் இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.
பலஹீனர்களே! செவிமடுப்பீர்!
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது: தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன்: 22:73)
2. நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது
இது அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். இதுபோல் கேட்பது புதிதல்ல. ஸஹாபா பெருமக்கள் காலத்திலேயே இவ்வாறு கேட்கப்பட்டு அதற்கான பதிலும் கிடைத்து விட்டது. கீழ்கண்ட ஹதீஸை கவனியுங்கள்:
‘ஒருமுறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிற்றைக் கண்டு இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் இது எனக்காக மந்திரிக்கப்பட்ட கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப் பிடித்து அறுத்து விட்டு நீங்களோ (நபித் தோழராகிய) அப்துல்லாஹ்வின் குடும்பத்தார். ஷிர்க்கை விட்டும் மிக அதிகமாக ஒதுங்கியவர்கள். ‘நிச்சயமாக மந்திரித்தல், கஷ்ட நிவர்த்திக்காக கழுத்தில் மணியைக் கோர்த்துக் கட்டுதல், கணவன், மனைவிக்கிடையே நட்பு நீடிப்பதற்காக மந்திர வேலை செய்தல் ஆகியவை ஷிர்க்கின்பால் சேர்க்கக் கூடியவையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்கள். அப்போது நான் நீங்கள் என்ன இவ்வாறு கூறுகிறீர்கள்? எனது கண்ணில் வலி ஏற்பட்டு கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. நான் ஒரு யூதரிடம் சென்று அதற்காக அவர் மந்திரித்த போது நீர் வடிதல் நின்று விட்டதே! என்றேன். அவர்கள் இது ஷைத்தானுடைய வேலையாகும். அவன் தனது கையால் கண்களை இடித்துக் கொண்டிருக்கிறான். மந்திரிக்கும் போது அகன்று கொள்கிறான். நீர் இதற்காக நபி (ஸல்) அவர்கள் ஓதியது போன்று ஓதினாலே போதும் என்றார்கள்’ அறிவிப்பாளர்: ஜைனப் (ரலி) நூல்: அபூதாவூத் (3385), இப்னுமாஜா (3521), அஹ்மத் (3433).
நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குலதெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்தி வாய்ந்தது. அது நாங்கள் கேட்பதையெல்லம் கொடுக்கிறது. அதனால்தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக்கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக் கொண்டவைகளில் சில நடைபெறுவதாக தோன்றுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப்போலவே நம் சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர் கூறுவதைப்போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளையெல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நேர்ச்சை செய்தால் நிறைவேறுவதாக தோன்றுவது போல, பிற சமுதாயத்து வழிபாட்டுத் தலங்களிலும் நேர்ச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறைவேறுவதாக தோன்றுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?
அல்குர்ஆன் (18:39) வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: “….அல்லாஹ் நாடியதே நடக்கும். அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை….” நமக்கு நடக்கும் நல்லவைகளும் கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டபடியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமானால் இணைவைக்கும் இதுபோன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.
ஆய்வு தொடரும்.