உளுச் செய்யும் முறை………

135-உதுமான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இருகைகளையும் மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு நான் உளூ செய்வதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்வதைப் பார்த்திருக்கிறேன் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் என்னிடம், யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவர் முன் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று கூறினார்கள் என்றார்கள்.

புகாரி-164: ஹூம்ரான் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.