வேத எச்சரிக்கையால் பயன் பெறுவோர் யார்?

“நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை” (அல்குர்ஆன்: 6:51)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வேத எச்சரிக்கையால் பயன் பெறுவோர் யார்?

பூமியின் தாழ்வான பகுதி!

கேள்வி எண்: 10. “அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. பூமியின் மிகவும் தாழ்வான பகுதியில்” என்று குர்ஆன் குறிப்பிடும் அந்த தாழ்வான பகுதி பூமியில் எங்குள்ளது? இந்த இடம் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் கூறும் கருத்து என்ன?

பதில்: “அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில், ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்” (அல்குர்ஆன்: 30:1-3)

இந்த இடம் பாலஸ்தீனத்தில் ஜெருசலத்திற்கு அருகில் உள்ளது. இந்த இடத்தை ஆய்வு செய்த புவியியல் வல்லுணர்கள் இது பூமியின் நிலப்பரப்புகளிலேயே மிகவும் தாழ்வான பகுதியாகும் என்று குறிப்பிடுகின்றனர்.

Posted in கேள்வி பதில் | Comments Off on பூமியின் தாழ்வான பகுதி!

தூக்கத்தில் ஷைத்தான் தங்கும் இடம்!

138- நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-3295: அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தூக்கத்தில் ஷைத்தான் தங்கும் இடம்!

மறைவானவற்றை முற்றிலும் அறிந்தவன்!

(நபியே) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் (நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்த போது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்? என்று கேட்பான்; அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 5:199)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மறைவானவற்றை முற்றிலும் அறிந்தவன்!

மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…

137- உளூ செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும், மலஜலம் கழித்து விட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-161: அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…

என்னுடைய அனைத்து வழிபாடும்…..

(நபியே) நீர் கூறும்: என்னுடைய தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும், (அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன்: 6:1620)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on என்னுடைய அனைத்து வழிபாடும்…..

மாதவிடாய் சட்டங்கள்

மாதவிடாயும், பிரசவ இரத்தமும்.
மாதவிடாயின் கால வரையறை.

பெரும்பாலும் மாதவிலக்கு வரக்கூடிய காலம் 12 வயது முதல் 50 வயது வரையாகும். சிலசமயம் பெண்ணின் நிலையைப் பொறுத்து இதற்கு முன்னரோ, பின்னரோ மாதவிடாய் ஏற்பட்டு விடலாம். மாதவிடாயின் குறைந்த கால அளவிற்கும், அதன் கூடுதலுக்கும் வரையறை கிடையாது.

கர்ப்பமுற்றவளின் உதிரப்போக்கு.

ஒரு பெண் கர்ப்பமுற்று விட்டால் பெரும்பாலும் இரத்தம் நின்று விடும். எனினும் கர்ப்பமுற்றவள் இரத்தத்தைக் கண்டு, அது குழந்தை பெறுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக இருக்குமானால் அத்துடன் பிரசவ வலியுமிருந்தால் அது பிரசவ இரத்தமாகும். குழந்தை பெறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரோ, அல்லது பிரசவ வலியின்றி குறைந்த காலத்திற்குப் பின்னரோ, இரத்தத்தை கண்டால் அது பிரசவ இரத்தமல்ல. மாத விடாயுமல்ல. எனினும் குழந்தை பெறும்வரை தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அது மாதவிடாய் இரத்தமாகும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தங்கள்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தங்கள் பல வகையாகும்.

* அதிகமாகி விடுவது அல்லது குறைந்து விடுவது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆறு நாட்கள் வருவது தான் வழமை. அது நீடித்து ஏழாவது நாளும் வருவது. அல்லது வழமையாக ஏழு நாட்களுக்கு வரக்கூடியவளுக்கு ஆறு நாட்களிலேயே நின்று விடுவது.

* முந்தி விடுவது அல்லது பிந்தி விடுவது. உதாரணமாக மாதவிடாய் மாதக்கடைசியில் வருவது வழக்கமாக உள்ளவள், மாத ஆரம்பத்திலேயே மாதவிடாயைக் கண்டு விடுகிறாள். அல்லது மாத ஆரம்பத்தில் வருவது வழக்கமாக உள்ளவள் மாத இறுதியில் அதைக் காண்கிறாள். எப்போது அவள் இரத்தத்தைக் காணுகிறாளோ அப்போதே அவள் மாதவிடாய்க்காரியாகி விடுகிறாள். அதிலிருந்து எப்போது சுத்தமாகி விடுகிறாளோ அப்போதே சுத்தமானவளாகி விடுகிறாள். அது வழக்கத்தை விட அதிகமானாலும் சரி. குறைவானாலும் சரி. அல்லது முந்தினாலும் பிந்தினாலும் சரியே.

* மஞ்சள் அல்லது கலங்கள் நிறமாக வருதல். அதாவது காயத்தின் தண்ணீரைப் போன்று மஞ்சளாகவோ, அல்லது மஞ்சளுக்கும் கருப்பிற்கும் இடைப்பட்ட நிலையிலோ இரத்தத்தைக் கண்டால், அது மாதவிடாய் காலத்திலோ அல்லது சுத்தமடையுமுன் அதனுடன் சேர்ந்தோ இருந்தால் அது மாதவிடாய்தான். அதற்கும் மாதவிடாய் சட்டங்கள் தான். சுத்தமடைந்த பின்னாலிருந்தால் அது மாதவிடாயல்ல.

* ஒருநாள் இரத்தத்தையும், மறுநாள் சுத்தத்தையும் அவள் காணும் விதத்தில், மாதவிடாய் நின்று நின்று வருவது இரு நிலைகளாகும்.

1. ஒரு பெண்ணுக்கு இரத்தம் எல்லா நேரத்திலும் நிரந்தரமாக இருப்பது சீக்கு இரத்தமாகும். இதை பார்ப்பவளுக்கு சீக்கு இரத்த முடையவளின் சட்டமே.

2. மாதவிடாய் விட்டு விட்டு வரும் நிலை. அதாவது நிரந்தரமாக இல்லாமல் மாதவிடாய் வந்து, பிறகு வழக்கமான சுத்த நிலை ஏற்படுதல். ஒரு நாளைவிட குறைவாக இரத்தம் வந்து நின்றுவிட்டால் அது சுத்த நிலையல்ல. ஆனால் ஒரு நாளைவிடக் குறைவாக இரத்தம் வந்து நின்று விட்டாலும் அது சுத்தமான நிலை என்பதை உறுதிபடுத்தும் அம்சங்களிருந்தால், அதாவது அவளது வழக்கமான மாதவிடாய் நாட்களின் இறுதியில் இரத்தம் நின்று சுத்தம் ஏற்பட்டால், அல்லது இரத்தம் நிற்கும்போது வெண்மையான திரவம் கர்ப்பப்பையிலிருந்து வெளியேறினால் அது சுத்தமான நிலையேயாகும்.

 அல்லாஹ் நாடினால் தொடரும்.

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on மாதவிடாய் சட்டங்கள்

நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…

136- அம்ர் பின் அபீ ஹஸன், அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) இடம் நபி (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூ செய்து காட்டினார்கள். பாத்திரத்திலிருந்து தண்ணீரை தமது கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து) மூன்று முறை வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது கையை பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரு முறை கழுவினார்கள். பின்னர் தமது கையை (பாத்திரத்தில்) நுழைந்து தமது தலையைத் தடவினார்கள். இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கத்திலிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு இரு தடவை செய்தார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கரண்டை வரை கழுவினார்கள் எனக் கூறினார்கள்.

புகாரி-186: அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…

நமக்கு கஷ்டத்தை அல்லாஹ் நாடவில்லை

ரமளான் (நோன்பு) மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான். (அல்குர்ஆன்: 2:185)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நமக்கு கஷ்டத்தை அல்லாஹ் நாடவில்லை

சகோதரா! நன்மையை அள்ளக்கூடிய மாதம் வந்து விட்டது!

2:183. ஈமான் (நம்பிக்கை) கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு (விரதம்) விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) (விரதம்) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதை கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக (ஃபித்யாவாக) ஒரு ஏழைக்கு (மிஸ்கீன்) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

2:185. ரமளான் (நோன்பு) மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.

2:186. (நபியே) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்: “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

2:187. நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்தைத் தேடிக் கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாக தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில் – தியானத்தில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசுமாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சகோதரா! நன்மையை அள்ளக்கூடிய மாதம் வந்து விட்டது!