சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்’ என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்காகப் பரிந்துரை பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது” (அல்குர்ஆன்: 70:40-48)
இத்தனை குற்றத்திற்கு பிறகு சிபாரிசு பயனளிக்குமா?
பல் துலக்குதல் பற்றி…
142-என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குருடனும், பார்வையுடையவனும் சமமா?
(நபியே அவர்களிடம்:) “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.” (அவ்வாறில்லையே; எனவே, நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று. (அல்குர்ஆன்: 13:16)
புறம் பேசுதல்
முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: “உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுகின்றீர்கள்” (49:12)
புறம் என்பதின் அர்த்தத்தை நபி (ஸல்) அவர்கள் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள்: ‘புறம் பேசுதல் என்றால் என்ன? என்று நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள் எனக் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுதல் என்பது) நீ உம் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்று கூறினார்கள். நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நீ கூறுவது அவனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய். நீ கூறுவது அவனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி அவதூறு கூறி விட்டாய்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.
எனவே புறமென்பது ஒரு முஸ்லிமைப் பற்றி அவனிடம் உள்ள- அவன் விரும்பாத தன்மைகளில் ஒன்றைக் கூறுவதாகும். அவனுடைய உடல், மார்க்கம், உலக விவகாரம், குணநலன்கள், உடலமைப்பு என எது தொடர்பானதாக இருந்தாலும் சரியே! இப்படிப் புறம் பேசுவதற்குப் பல முறைகள் உள்ளன. அவனுடைய குறைகளை அல்லது அவனுடைய நடவடிக்கைகள் பழக்க வழக்கங்களைக் கேலியாக எடுத்துச் சொல்வதும் அவற்றுள் ஒன்றாகும்.
புறம் பேசுதல் என்பது அல்லாஹ்விடத்தில் மிக மோசமான விஷயமாக இருந்தும் மக்கள் இது விஷயத்தில் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார்கள். பின்வரும் நபிமொழி இதை உணர்த்துகிறது. ‘வட்டியில் எழுபத்திரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்தது ஒருவன் தன் தாயிடம் உடலுறவு கொள்வதற்குச் சமமானதாகும். வட்டியிலேயே மிகக் கொடுமையானது தன் சகோதரனுடைய மானம் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: (ஸில்ஸிலத்துல் ஸஹீஹா 1871)
ஆகவே சபையிலிருப்பவர் அங்கு நடக்கின்ற தீமையையும் தன் சகோதரனைப் பற்றி புறம் பேசப்படுவதையும் தடுப்பது கடமையாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் ஆர்வமூட்டியுள்ளார்கள்: ‘யார் தன்னுடைய சகோதரனின் கண்ணியம் மற்றும் மான மரியாதைக்கு களங்கம் ஏற்படுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவருடைய முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டும் தடுப்பான்’ (நபிமொழி) அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: திர்மிதி.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
கழுவி சுத்தம் செய்தலின் பலன் பற்றி…
141-பள்ளிவாசலின் மேற்புறத்தில் அபூஹூரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹூரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவுடைய சுவடுகளால் முகம், கை, கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை (அவர் உளூ செய்யும் உறுப்புகளில்) நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.
அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காக…
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்குர்ஆன்: 38:29)
குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…
140- மக்கள் உளூ செய்யும் தொட்டியிலிருந்து உளூ செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹூரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல்காஸிம் (முஹம்மத்) (ஸல்) அவர்கள், குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான் என்று கூறினார்கள் என்றார்கள்.
நாம் நன்றி செலுத்தத் தகுதியானவன்!
இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் (அருளால்) உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத்தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன்: 28:73)
நாம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்குவது எப்படி?
நாம், ஷிர்க்கில் மூன்று வகைகளைத் தவிர்ப்பதைக் கொண்டல்லாமல், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதிலிருந்து நீங்கியவர்களாக ஆகமாட்டோம்.
இரட்சகனு (அல்லாஹ்வு)டைய செயல்களில் இணைவைத்தல்:-
படைக்கக் கூடியதாகவோ, நிர்வகிக்கக் கூடியதாகவோ அல்லாஹ்வுடன் வேறெவரும் இருப்பதாக நம்புதல். இந்த நம்பிக்கை, அல்லாஹ் உலக நிர்வாகங்களில் சிலவற்றை சில அவுலியாக்களிடம் ஒப்படைத்துள்ளதாக, சில சூபிய்யாக்கள் நம்புவது போன்றாகும். இந்த நம்பிக்கை இஸ்லாத்துக்கு முன்னிருந்த முஷ்ரிக்குகளிடம் கூட இருந்ததில்லை.
‘நிச்சயமாக அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் இருக்கின்றனர். அவர்கள் ஏதாவதொன்றை நோக்கி ‘ஆகு’ என்று சொன்னால், அது ஆகி விடும்’ என்று ஒரு சூபி சொல்லுகிறார். அல்காபி பி-ர்ரத்தி அலல்-வஹ்ஹாபி என்ற பெயருடன் அந்த சூபி இயற்றிய நூலொன்றில் இதனைக் கூறுகிறார். இவருடைய கூற்றை குர்ஆன் பொய்யாக்குகின்றது.
“என்னே! அவனது (அல்லாஹ்வினது) ஆற்றல்! அவன் யாதொரு பொருளை (ப் படைக்க)க் கருதினால், அவன் கட்டளையிடுவதெல்லாம் ‘ஆகுக’ எனக் கூறுவதுதான் (தாமதம்) உடனே அது ஆகிவிடும்” (36:82)
“படைத்தலும், (அதன்) ஆட்சியும் அவனுக்குடையதல்லவா?” (7:54)
வணக்கத் (இபாதத்)திலும் துஆவிலும் இணைவைத்தல்:-
இது, அல்லாஹ் அல்லாத நபிமார்கள், நல்லடியார்கள் போன்றோருக்கு வழிபட்டு, அவர்களிடம் துஆக் கேட்பதாகும். இந்த வணக்கம் அவர்களைக் கொண்டு இரட்சிப்புத் தேடுதல், இன்பத்திலும் துன்பத்திலும் அவர்களிடம் பிரார்த்தித்தல் போன்றாகும்.
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த முஸ்லிம் உம்மத் (சமுதாயத்)தில் அதிகமானவர்களுடைய பெரும்பாவங்களை, இந்த(க் குருட்டு) நம்பிக்கையை உறுதிப் படுத்தக்கூடிய சில மஷாயிகுகள் ‘வஸீலா’ என்ற பெயரைக் கொண்டு பொறுப்பேற்பதாகக் கூறுகின்றனர். ‘வஸீலா’ என்றால் அல்லாஹ்விடத்தில், ஒரு துணையைக் கொண்டு கேட்பதாகும் என்றும் கூறுகின்றனர். தம்மை அவ்வாறான துணைவர்கள் என்று நம்பச் செய்துள்ளார்கள். அப்பாவி மக்களும் அதனை நம்பியுள்ளனர்.
‘அல்-மதத்’ யாரஸூலல்லாஹ்! (உதவியளிக்கும் ரஸூலுல்லாஹ்வே!) யாமுஹ்யித்தீன்! (முஹ்யித்தீனே!) யா-பதவி! (பத(DHA)வியே!) என்றெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதற்கு அந்த மஷாயிகுகள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இந்த வேண்டுதல், அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்கம் புரிவதாகும். இது ஒரு துஆ. ‘துஆ என்பது வணக்கமாகும்’ (திர்மிதி). வணக்கத்தை அல்லாஹ் அல்லாத எவருக்கும் புரியலாகாது. அல்லாஹ் அல்லாத எவரிடமும் உதவி தேடக்கூடாது. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“(அல்லாஹ்) பொருள்களையும் மக்களையும் தந்து உங்களுக்கு உதவி புரிவான்” (71:12)
தீர்ப்பளிக்கின்றவனோ, அல்லது தீர்ப்பளிக்கப்படுகின்றவனோ அல்லாஹ்வுடைய சட்டம் பொருத்தமற்றது என்று கருதுவானென்றால் அல்லது அல்லாஹ்வுடைய சட்டம் அல்லாததைக் கொண்டு தீர்ப்பளிப்பதை ஆகுமாக்கினால், இது ஆட்சியிலுள்ள வழிபாட்டில் (இபாதத்தில்) இணைவைப்பதாகும். இதுகூட ஷிர்க்கைச் சேர்ந்ததே!
அல்லாஹ்வுடைய ஸிபத்துகளில் இணைவைத்தல்:-
அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான மறைவானவற்றைப் பற்றிய அறிவு போன்ற சில பண்புகள், நபிமார்கள் அவுலியாக்கள் போன்றோருக்கு இருப்பதாக நம்புதல், ஸிபத்துகளில் இணைவைப்பதாகும். இந்த வகை சூபியாக்களிடமுமவர்களைப் போன்றவர்களிடமும் இருக்கின்றன. புர்தாவை இயற்றிய ‘பூஸரி’ அவர்கள் ஒரு பாடலில் கூறுவது இந்த வகையான ஷிர்க்குக்கு ஒரு சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம்.
‘நபியே! இம்மையும் அதன் சக்களத்தி (மறுமை)யும் உங்களது கொடையாகும். ‘லவ்ஹுல் மஹ்பூழ்’ அல்லாஹ்வுடைய கலம் ஆகியவை உங்களுடைய அறிவிலுள்ளதாகும்’.
கவிஞர் இந்தப்பாடலில் ‘துன்யா’ (இம்மை) என்ற சொல்லைத் தொடர்ந்து ‘ளர்ரத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அந்தச் சொல்லின் சரியான அர்த்தம் ஒரு கணவன் முதலாவது மனைவி இருக்கும்போது மணக்கும் இரண்டாவது மனைவி என்பதாகும். இம்மையை முதலாவது மனைவி போலவும், மறுமையை இரண்டாவது மனைவி போலவும் கவிஞர் கற்பனை செய்து பாடியுள்ளார். எனவே இங்கு ‘ளர்ரத்’ என்ற சொல்லுக்கு மறுமை என்பதே பொருளாகும்.
அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான சில அதிகாரங்கள் நபியவர்களுக்கும் உண்டு என்பதாக கவிஞர் மிகைப்படுத்திக் கூறியுள்ளார். இது ஷிர்க்காகும்.
நபி (ஸல்) அவர்களை (அவர்களுடைய மௌத்துக்குப் பின்னால்) விளிப்பான நிலையில் கண்டதாகக் கூறுகின்ற தஜ்ஜால் (குழப்பக்காரர்)களுடைய வழிகேடும் இந்த வகையைச் சேர்ந்ததாகும்.
மறைவான பல விஷயங்களை நபியவர்களிடம் கேட்கின்றனர். இவர்களுடைய சில விவகாரங்களை நபியவர்கள் நிர்வகிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். குர்ஆன் சொல்லுகின்றவாறு நபியவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இப்படியானவற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
“(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறிய முடியுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன். யாதொரு தீங்குமே என்னை அணுகியிராது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும் மூமின்களுக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை” (7:188)
இவ்வுலகில் உயிருடனிருக்கும்போதே மறைவானவற்றை அறிய முடியாதவர்களாக நபியவர்கள் இருந்தார்களென்றால், மரணத்துக்குப் பின் அவற்றை எவ்வாறு அறியமுடியும்?
ஓர் அடிமைப்பெண் ‘எங்களிடத்தில் ஒரு நபி இருக்கிறார். நாளை என்ன நடைபெறும் என்பதையும் அவர் அறிவார்’ என்று ஒரு பாடலைப் படித்தாள். இதனைச் செவியுற்ற நபியவர்கள் இவ்வாறு படிப்பதைத் தடை செய்தார்கள்’ ஆதாரம்: புகாரி.
அல்லாஹ் சிலவேளை நபிமார்கள் ரஸூல்மார்களுக்கு மறைவான சிலவற்றை அறிவித்துக் கொடுப்பான். அவனால் அறிவித்துக் கொடுக்கப்பட்டதன்றி வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“(அல்லாஹ்வாகிய) அவன்தான் இரகசியங்களை நன்கறிந்தவன். அவனுடைய இரகசியங்களை, அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவதுமில்லை; ஆனால் (தன்னுடைய) தெரிந்தெடுத்த தூதருக்குத் தவிர. (அதனை அவன் அவருக்கு அறிவிக்கக் கூடும். அவன் அறிவிக்கும் சமயத்தில்) நிச்சயமாக அவன் அவருக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாவலராக அனுப்பி வைக்கிறான்” (72:26,27)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
கால்களை நன்றாக நன்கு கழுவுதல் பற்றி…
139- நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளு செய்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணிரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) குதிக்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்! என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.