கேள்வி கணக்கின்றி சுவனம் புகும் விசுவாசிகள்

129- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள் என்று கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடு போட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து அல்லாஹ்பின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார் என்று சொன்னார்கள்.

புகாரி-6542: அபூஹூரைரா(ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.