தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..

327– இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி: அனஸ் பின் மாலிக் (ரலி)


328– இரவு நேர உணவு தயாராகி விடுமானல் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-672: அனஸ் (ரலி)

329– இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-671: ஆயிஷா (ரலி)


330– உங்களில் ஒருவருடைய இரவு உணவு வைக்கப்பட்டு, (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-673: இப்னு உமர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..

சிறிய குஃப்ரும் அதன் வகைகளும்

இந்த வகை இதனைச் செய்பவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடாது.

1. (அல்லாஹ்வுடைய) அருட்கொடைகளை நிராகரித்தல்:- மூஸா (அலை) அவர்களுடைய கூட்டத்தாரை நோக்கி அல்லாஹ் கூறும் சில அம்சங்கள் இதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளன. Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on சிறிய குஃப்ரும் அதன் வகைகளும்

சித்திரங்களாலான ஆடையை….

326– கோடுகள் போடப்பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி (ஸல்) அவர்கள் தொழதார்கள். அதன் கோடுகள் என் கவனத்தை திருப்பிவிட்டன. இதை அபுஜஹ்மிடம் கொடுத்து விட்டு மற்றொரு ஆடையைக் கொண்டு வாருங்கள்! என்று கூறினார்கள்.

புஹாரி-752: ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சித்திரங்களாலான ஆடையை….

காலணியுடன் தொழுதல்..

325– அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் நான் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆம் எனப் பதில் கூறினார்கள்.

புகாரி-386: ஸயீது பின் யஸீதுல் அஸ்தி (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on காலணியுடன் தொழுதல்..

முளைகளாக இருக்கும் மலைகள்!

கேள்வி எண்: 20. “இந்த பூமி ஆடி, அசையாதிருக்க மலைகளே உதவுகிறது” என்ற விஞ்ஞான உண்மையைப் பறைசாற்றும் வசனங்கள் மூன்றைக் கூறுக. Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on முளைகளாக இருக்கும் மலைகள்!

தொழுகையின் போது துப்புதல் பற்றி..

319– நபி (ஸல்) அவர்கள் கிப்லா திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதை சுரண்டி விட்டு மக்களை நோக்கி உங்களில் ஒருவர் தொழுதுக்கொண்டிருக்கும் போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது: ஏனெனில் அவர் தொழும் போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான் என்று கூறினார்கள்.

புகாரி-406:அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


320– நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுறண்டினார்கள். பின்னர் உங்களில் எவர்க்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்துக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.

புகாரி-410: அபூஸயித் அல் குத்ரீ (ரலி)


321– நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுறண்டினார்கள். பின்னர் உங்களில் எவர்க்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்துக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.

புகாரி-409:அபூஹுரைரா (ரலி)


322– நபி (ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டு விட்டுச் சுரண்டி (அப்புறப் படுத்தி)னார்கள்.

புகாரி-407: ஆயிஷா (ரலி)

323– அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஒரு மூமின் தொழுயையில் இருக்கும் போது தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே தமது முன் புறமோ வலப்புறமோ அவர் உமிழ வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்.

புகாரி-413: அனஸ் (ரலி)

324– பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-415: அனஸ் பின் மாலிக் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையின் போது துப்புதல் பற்றி..

வழிகெட்ட ஸூஃபித்துவக் கொள்கைகள்!

ஸூஃபியிஸம்: ‘ஏகத்துவமும், பல இறைக்கொள்கைகளும் ஒன்றுதான். இவைகள் எல்லாம் இறைவனை அடையும் பல்வேறு வழிகளில் ஒன்று’ என்று ஸூஃபிகளில் சிலர் கூறுகின்றனர். ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on வழிகெட்ட ஸூஃபித்துவக் கொள்கைகள்!

தொழுகையில் ஸஜ்தா செய்யுமிடத்தை சரிசெய்தல்..

318– ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி ‘நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1207 முஐகீப் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையில் ஸஜ்தா செய்யுமிடத்தை சரிசெய்தல்..

சிகைக்கு கருப்பு சாயம் பூசுதல்

சரியாகச் சொல்வதென்றால் இது ஹராமாகும். ஏனெனில் இது குறித்து நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. ‘புறாக்களின் (கருத்த) மார்புப் பகுதியைப் போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத், நஸயீ. Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on சிகைக்கு கருப்பு சாயம் பூசுதல்

தொழும்போது இடுப்பில் கை வைப்பது பற்றி..

317– ஒருவர் இடுப்பில் கை வைத்து தொழுவது தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி- 1220. அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழும்போது இடுப்பில் கை வைப்பது பற்றி..