319– நபி (ஸல்) அவர்கள் கிப்லா திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதை சுரண்டி விட்டு மக்களை நோக்கி உங்களில் ஒருவர் தொழுதுக்கொண்டிருக்கும் போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது: ஏனெனில் அவர் தொழும் போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான் என்று கூறினார்கள்.
320– நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுறண்டினார்கள். பின்னர் உங்களில் எவர்க்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்துக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.
321– நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுறண்டினார்கள். பின்னர் உங்களில் எவர்க்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்துக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.
322– நபி (ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டு விட்டுச் சுரண்டி (அப்புறப் படுத்தி)னார்கள்.
323– அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஒரு மூமின் தொழுயையில் இருக்கும் போது தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே தமது முன் புறமோ வலப்புறமோ அவர் உமிழ வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்.
324– பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.