பெரிய குஃப்ரும் அதன் வகைகளும்

 ‘பெரிய குஃப்ர்’ அதனைச் செய்கின்றவனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விடுகின்றது. இதுதான் நம்பிக்கையின் அடிப்படையிலுள்ள குஃப்ராகும். (இறைநிராகரிப்பாகும்) இதன் வகைகள் அதிகமானவை.

1. பொய்யாக்குவதால் ஏற்படும் குஃப்ர்:- இது குர்ஆனையும் ஹதீஸையும், அல்லது இவ்விரண்டில் சில பகுதிகளைப் பொய்யாகுவதாகும். இதுபற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on பெரிய குஃப்ரும் அதன் வகைகளும்

நபியவர்களின் மிம்பர்!

316– நபி (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) இடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை நான் அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் (அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள்) ஆளனுப்பி நான் மக்களிடம் பேசும் போது அமர்ந்து கொள்வதற்காகத் தச்சு வேலை தெரிந்த உன் வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்! எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப் பட்டது. அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் மீதே தொழுததை அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூவு செய்வதையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்து விட்டு மீண்டும் மேலேறியதையும் நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி மக்களே நீங்கள் அறிந்து கொள்வதற்காக நான் இவ்வாறு செய்தேன் என்று குறிப்பிட்டார்கள்.

புஹாரி-917: அபூ ஹாஸிம் பின் தீனார் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபியவர்களின் மிம்பர்!

தொழும்போது குழந்தைகளை….

315– நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஸைனப் அவர்களின் குழந்தை உமாமாவைத் (தோளில்) சுமந்து கொண்டு தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள்.

புகாரி-516: அபூ கதாதா அல் அன்சாரி (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழும்போது குழந்தைகளை….

முழு உலகத்திற்குமான ஒரே இறைவன் அல்லாஹ்வின் தன்மைகள்!

அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255)

அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடியவையே! (28:88)

எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! (6:103)

அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11)

அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)

ஒவ்வொரு பொருளையும் படைத்தவன்; முழு பிரபஞ்சமும் அவனுடைய படைப்பே! (6:101)

அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. (112:3)

பிரபஞ்சம் முழுவதின் ஆட்சியதிகாரம் நேரடியாக அவனிடத்தே இருக்கிறது. (36:83)

வானம், பூமி மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் அவனே நிர்வகிக்கின்றான். (32:5)

அனைத்துக்கும் உணவளிப்பவன். (37:5)

வாழ்வையும், மரணத்தையும் படைத்தவன் (67:2)

அவனே வாழ்வையும் வழங்குகிறான்; மரணத்தையும் அளிக்கின்றான். (53:44)

அனைத்துக்கும் அமைதியும், புகலிடமும் அளிப்பவன். (59:23)

மறைந்திருப்பவை, நிகழ்ந்தவை, நிகழக் கூடியவை அனைத்தையும் அறிந்தவன். (2:29,59:22)

அனைத்தையும் செவிமடுப்பவன். (6:13)

அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். (2:20)

அனைத்தையும் மிகைத்தவன்; அவனது தீர்ப்பை யாரும் எதிர்த்திட முடியாது. (59:23)

அவன் நுண்ணறிவாளன்; அவனது எந்த படைப்பும் வீணானவை, இலக்கற்றவை அல்ல! (34:1)

அளவிலாக் கருணையுடையவன்; இணையிலாக் கிருபை உடையவன். (1:2)

மிகவும் அன்புடையவன். (2:207)

அவனுடைய கருணையும், கிருபையும் ஒவ்வொரு அணுவையும் சூழ்ந்திருக்கின்றது. (7:156)

நீதி செலுத்துபவன்; மக்களிடம் முழு நீதியுடன் நடந்து கொள்பவன். (10:4)

யார் மீதும் அணுவளவும் கொடுமை புரியாதவன். (50:29)

அவனுடைய கட்டளைகள் அனைத்தும் நீதியின் அடிப்படையிலானவை. (6:115)

அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவரைப் பழிவாங்குபவன். (3:4)

மன்னிப்புக் கோருபவருக்கு மன்னிப்பு அளிப்பவன். (85:14)

பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்பவன். (110:3)

நன்மைகளைப் பெரிதும் மதிப்பவன். (64:17)

தான் நாடியதைச் செய்யக் கூடியவன். (55:16)

பேசுகிறவன். (2:253)

தான் விரும்பும் வகையில் செயல்படுபவன். (3:40)

அவன் நாடுவது உண்டாகும்; அவன் நாட்டமின்றி எதுவும் தாமாகவே நடப்பதில்லை. (76:30)

தன்னிறைவுடையவன்; யாருடைய தேவையுமற்றவன்; அவனுக்கு தேவையானது எதுவுமில்லை. (35:15)

தனக்குத்தானே பெருமைக்குறியவன்; மிகவும் சிறப்புடையவன்; கண்ணியமானவன். (11:73)

எந்த ஒரு குறையையும் விட்டுத் தூய்மையானவன். எல்லா சிறப்பு அம்சங்களும் கொண்டவன். அந்த உன்னத அந்தஸ்தை விட்டுத் தாழ்மையான அல்லது அதற்கு முரணான எந்தத் தன்மையும் அவனிடம் இல்லை. (59:23)

ஒவ்வொரு தகுதியிலும் இணையற்றவன். அவனுடன் எதையும் ஒப்பிட முடியாது. (42:11)

வானம், பூமியில் நிகழும் எதுவொன்றையும் வைத்து அவனது எதார்த்த நிலையை யூகிக்க முடியாது. (30:26)

வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே! (2:163)

பிரபஞ்சம் முழுவதும் அவனுடைய மகிமையே படிந்திருக்கிறது. (45:37)

அவனைத் தவிர வேறு எவரிடமும் இம்மியளவும் மேன்மையோ வணங்கப்படுவதற்குரிய தன்மையோ இல்லை. அவன் எதிரில் எல்லோரும் இயலாதர்கள்; மேலும் அவனது கட்டளைக்கு கட்டுப் பட்டவர்கள்; அவனது அடிமைகள்!

அவனுடைய ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. (18:26)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on முழு உலகத்திற்குமான ஒரே இறைவன் அல்லாஹ்வின் தன்மைகள்!

தொழுகையில் ஷைத்தான்.

314– இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என் தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டும் என இந்தப் பள்ளி வாசலில் உள்ள ஒரு தூணில் அதைக் கட்டிவைக்க என்னினேன். இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஒரு ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக! (38:35) என்ற என் சகோதரர் சுலைமான் (அலை)அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்ததால் அதை விரட்டி அடித்து விட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-461: அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையில் ஷைத்தான்.

தொழுகையின் போது பேசக்கூடாது.

311– (ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீசீனியாவின் மன்னர்) நஜ்ஜாஸியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) ‘நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி- 1199. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)


312– (ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். ‘அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகயையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்” எனும் (திருக்குர்ஆன் 02:238 வது) வசனம் அருளப்படும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பட்டவுடன் பேசாமலிருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

புகாரி- 4534. ஸைத் இப்னு அர்கம் (ரலி)


313– நபி (ஸல்) அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி (ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.

புகாரி 1217. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகையின் போது பேசக்கூடாது.

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!

கேள்வி எண்: 19. “வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் மனிதனின் தோல்களிலேயே இருக்கின்றன. தீக்காயங்களினால் மனித தோல்கள் கருகி விட்டால் (Third degree burn) அவனுக்கு வலியுணர்ச்சி (வேதனை-Pain) ஏற்படுவதில்லை” என்ற இன்றைய அறிவியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய அற்புத திருமறை வசனத்தைக் கண்டு வியப்புற்று சத்திய மார்க்கத்தை தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர் டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr Tigatat Tejasen) என்ற தாய்லாந்து விஞ்ஞானி. இப்பேருண்மையை பிரதிபலிக்கும் அற்புத திருமறை வசனம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!

ருக்உவின் நிலையில்….

310– நான் எனது தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின் போது எனது இரு கைகளையும் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக் கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம் என்றார்.

புஹாரி-790: முஸ்அப் இப்னு ஸஃது (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ருக்உவின் நிலையில்….

குர்ஆன் வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றும் ஸூஃபிகள்

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் இறைவனைப் பெண்ணாக வர்ணிக்கிறார்கள். உதாரணமாக ஸூஃபி இப்னுல் ஃபாரிஸ் என்பவர் தன்னுடைய ‘கஷ்ஃபுல் உஜூஹ்’ என்ற நூலில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார். (நவூதுபில்லாஹி மின்ஹா) Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on குர்ஆன் வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றும் ஸூஃபிகள்

அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியை நிர்மாணிப்பவருக்கு..

309– உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவு படுத்தியபோது நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள் என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபணை செய்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.

புகாரி-450: உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியை நிர்மாணிப்பவருக்கு..