ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்

555.நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஸி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

புஹாரி : 1245 அபூஹூரைரா (ரலி)


556. (அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஸி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி :1327 அபூஹூரைரா (ரலி)


557.நஜ்ஜாஸி மரணித்ததும் அன்றே அச்செய்தியை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு முஸல்லா எனும் திடலில் அனைவரையும் ஒன்று கூட்டி அணிவகுக்கச் செய்து, நான்கு தக்பீர் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

புஹாரி : 1333 ஜாபிர் (ரலி)

558.”இன்றைய தினம் அபிஸீனியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன்.

புஹாரி :1320 ஜாபிர் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்

பித்அத்தான ஸலவாத்துக்கள்

நபி (ஸல்) அவர்களது சொல்லிலோ, ஸஹாபாக்கள், தாபியீன்கள், முஜ்தஹிதான இமாம்கள் ஆகியோரின் சொல்லிலோ அடங்காத பித்அத்தான ஸலவாத்தின் அமைப்புகளை அதிகமாக செவிதாழ்த்த முடிகின்றது. அவை பின்னால் வந்தவர்களால் ஏற்படுத்தப் பட்டவையாகும். அவ்வாறான பித்அத்தான வசன அமைப்புகள் எங்கிருந்து வந்தன? என்று தெரியாத அளவு அந்த ஸலவாத்துக்கள் பொதுமக்களுக்கு மத்தியிலும் அறிஞர்களுக்கு மத்தியிலும் பரவி விட்டன.

நபி (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்ட ஸலவாத்துக்களை ஓதுவதைவிட இவற்றையே மக்கள் அதிகமாக ஓதுகின்றனர். சிலவேளை நபியவர்களால் கற்றுத் தரப்பட்டவற்றை விட்டுவிட்டு தங்களது மஸாயிகுகளால் அமைக்கப்பட்டுள்ள ஸலவாத்துக்களை ஓதி வருகின்றனர். நாம் நன்றாக கவனித்துப் பார்த்தால் இவ்வாறான ஸலவாத்துக்கள் நபியவர்களுடைய நடைமுறைக்கு முரணாயிருப்பதைக் காணலாம். பின்வரும் பித்அத்தான ஸலவாத்தை உற்று நோக்குவோம். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on பித்அத்தான ஸலவாத்துக்கள்

மரணித்தவர் ஓய்வு பெறுதல்.

554.இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்” என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன” என்றார்கள்.

புஹாரி :6512 அபூகதாதா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரணித்தவர் ஓய்வு பெறுதல்.

மரணித்தவர் பற்றி….

மரணித்தவர் பற்றி புகழ்ந்தும் இகழ்ந்தும் கூறப்படுதல்.


553.ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள். உமர் (ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், ‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்” எனக் கூறினார்கள்.

புஹாரி : 1367 அனஸ் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரணித்தவர் பற்றி….

‘எச்சரிக்கை’ நூலின் முடிவுரை

இதுவரை மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்ற விலக்கப்பட்ட காரியங்களை முடிந்தவரை இங்கு கூறியுள்ளோம்.  Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on ‘எச்சரிக்கை’ நூலின் முடிவுரை

ஜனாஸா தொழுகை.

ஜனாஸா தொழுகை அதில் கலந்து கொள்பவரின் சிறப்பு.


551.”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.

புஹாரி:1325 அபூஹூரைரா (ரலி)


552. ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு என அபூஹுரைரா (ரலி) கூறினார் என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் ‘அபூஹுரைரா (ரலி) மிகைப்படுத்துகிறார்’ என்றார். ஆயிஷா (ரலி) அபூஹுரைரா (ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், ‘நானும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்’ என்றும் கூறினார். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) ‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’ என்றார்.

புஹாரி :1324 நாபிஃ (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜனாஸா தொழுகை.

ஜனாஸாவை எடுத்துச் செல்வதில் துரிதம்.

550.”ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1315 அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜனாஸாவை எடுத்துச் செல்வதில் துரிதம்.

ஜனாஸாவை துணியால் போர்த்துதல்.

549.”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

புஹாரி : 5814 ஆயிஷா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜனாஸாவை துணியால் போர்த்துதல்.

அத்தாட்சிகளுடன் கூடிய பாதுகாப்பான வானம்!

21: 30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?

21:31 இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.

21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளை புறக்கணித்து விடுகிறார்கள்.

21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அத்தாட்சிகளுடன் கூடிய பாதுகாப்பான வானம்!

ஜோதிடம், சகுனம் பார்த்தல் குறித்த இஸ்லாமிய பார்வை

கேள்வி எண்: 32. ‘யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்பியவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்’ என்ற நபிமொழியை அறிவித்தவர் யார்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on ஜோதிடம், சகுனம் பார்த்தல் குறித்த இஸ்லாமிய பார்வை