அஸ்-ஸலாத்துன் நாரிய்யா

ஸலாத்துன் நாரிய்யா (என்ற பித்அத்தான ஸலவாத்து) அதிகமான முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபல்யமாக இருக்கின்றது. எவர் தனது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் எண்ணம் வைத்து, நேர்ச்சை செய்து 4444 விடுத்தங்கள் இதனை ஓதுவாரோ, அவருடைய நாட்டங்கள் நிறைவேறும் என்பது, இதனை ஓதி வருவோருடைய நம்பிக்கையாகும். இது எந்தவொரு ஆதாரமுமற்ற பிழையான ஒரு நம்பிக்கையாகும்.

குறிப்பாக இதன் வாசகங்களை உற்று நோக்கினால், இது வெளிப்படையானதொரு ஷிர்க்காக இருப்பதைக் காணலாம். அதன் வாசகம் மொழிபெயர்ப்புடன் பின்வருமாறு:- Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on அஸ்-ஸலாத்துன் நாரிய்யா

ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி

569.நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஜகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஜகாத் தர மறுத்துள்ளார். காலிதை (ரலி)ப் பொருத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் இறைவழியில் வழங்கிவிட்டாரே, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி), அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் ஜகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.

புஹாரி :1468 அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி

குதிரைகளின் அடிமைகளின் ஜகாத்.

568.”(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை..”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1463 அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குதிரைகளின் அடிமைகளின் ஜகாத்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட வருடம் எது?

கேள்வி எண்: 33. ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட வருடம் எது?

ஜகாத் அளவு

567.”ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் என்பது 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1405 அபூ ஸயீத் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜகாத் அளவு

ஜனாஸா தொழுகையில் இமாம் எங்கு நிற்பது?

566.பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மைய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன்.

புஹாரி : 1331 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜனாஸா தொழுகையில் இமாம் எங்கு நிற்பது?

கல்வி ஞானம் பெற்றவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கும் வெகுமதி!

28:76. நிச்சயமாக காரூன் மூஸாவின் (மோசே) சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். எனினும்: அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்;அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன;அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; “நீ (இதனால் பெருமைக் கொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான்” என்று கூறினார்கள்.

28:77. “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை (மறு உலக) வீட்டைத் தேடிக்கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே: நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்)

28:78. (அதற்கு அவன்) கூறினான்: ” எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப் பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமை உடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டர்கள்.

28:79. அப்பால், அவன் (கர்வத்துடனும் உலக) அலங்காரத்துடனும் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; “ஆ! காரூனுக்கு கொடுக்கப் பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக் கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்றும் கூறினார்கள்.

28:80. கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் (நம்பிக்கை) கொண்டு, நல்ல அமல்கள் செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

28:81. ஆகவே, காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கின்ற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

28:82. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சர்யம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகின்றான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை (அருள்) செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்த செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் (நிராகரிப்போர்) சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அல் குர்ஆன்: அல் கஸஸ் (வரலாறுகள்)
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கல்வி ஞானம் பெற்றவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கும் வெகுமதி!

ஜனாஸாவைக் கண்டால் எழுதல்.

561.”ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:1307 அமீர் பின் ரபிஆ (ரலி)


562.”உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும்வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும்.”

புஹாரி: 1308 ஆமிர் இப்னு ரபீஆ (ரலி)


563.”நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1309 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


564.ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா” என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்” எனக் கூறினார்கள்.

புஹாரி :1311 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


565.ஸஹ்ல் இப்னு ஹுனைஃபு (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.

புஹாரி :1312 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஜனாஸாவைக் கண்டால் எழுதல்.

ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-3)

 நபிமார்களின் பணி:

1. சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக:

அல்லாஹ்வின் செய்தியைப் பெற்று அதைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே கூறுவது.

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ”அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36). Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-3)

கப்ரில் ஜனாஸா தொழுகை நடத்துதல்.

559.’நபி (ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர்.

புஹாரி : 857 இப்னு அப்பாஸ் (ரலி)


560.பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘அவர் என்ன ஆனார்?’ எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) ‘இறைத்தூதர் அவர்களே! அவர் மரணித்துவிட்டார்!” என்றதும் ‘எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?’ எனக் கேட்டனர். தோழர்கள், அவரைப் பற்றி அந்தஸ்துக் குறைவாகக் கருதி, ‘அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்’ எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவரின் கப்ரை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறி, கப்ருக்கு வந்து (ஜனாஸாத்) தொழுதார்கள்.

புஹாரி :1337 அபூஹூரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கப்ரில் ஜனாஸா தொழுகை நடத்துதல்.