Monthly Archives: August 2007

வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்தல்.

800. நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள். புஹாரி :1607 இப்னு அப்பாஸ் (ரலி). 801. என் உடல் நலக்குறைவு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டபோது ‘ஜனங்களுக்குப் பின்னால் வாகனத்தில அமர்ந்து கொண்டு நீ தவாஃப் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்தல்.

மனிதனின் எந்த செயல் அவனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது?

கேள்வி எண்: 40. நெருப்பு விறகை அழித்து விடுவதைப்போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on மனிதனின் எந்த செயல் அவனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது?

தவாஃபின் போது கறுப்புக் கல்லை முத்தமிடுதல்.

799. உமர் (ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ‘நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ என்றார். புஹாரி :1597 அபீஸ் பின் ரபிஆ (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தவாஃபின் போது கறுப்புக் கல்லை முத்தமிடுதல்.

கஃபாவின் இருமூலைகளைத் தொட்டு முத்தமிடுதல் பற்றி..

797. ”நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.” புஹாரி: 1606 இப்னு உமர் (ரலி). 798. ”கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (முத்தமிடாமல்) தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கஃபாவின் இருமூலைகளைத் தொட்டு முத்தமிடுதல் பற்றி..

உம்ரா ஹஜ்ஜில் ரமல் செய்தல்

794. நபி (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள். புஹாரி :1617 இப்னு உமர் (ரலி). 795. நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, ‘யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on உம்ரா ஹஜ்ஜில் ரமல் செய்தல்

தூத்துவாவில் இரவு தங்குதல்.

791. நபி (ஸல்) அவர்கள் ஃதூத்துவா எனுமிடத்தில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். புஹாரி :1574 இப்னு உமர் (ரலி). 792. நபி (ஸல்) அவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்கள் செல்லும்போது ‘துல்ஹுலைஃபா’வில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இருந்த முள் மரத்தினடியில் இளைப்பாறுவார்கள். அந்த வழியாக ஹஜ்ஜு, உம்ரா மற்றும் போரிடுதல் போன்றவற்றுக்காகச் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தூத்துவாவில் இரவு தங்குதல்.

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும்.

2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன். 2: 262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும்.

மக்காவினுள் ஒருவழியாக நுழைந்து மறு வழியாக வெளியேறுதல்

787. நபி (ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள். புஹாரி : 1533 இப்னு உமர் (ரலி). … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on மக்காவினுள் ஒருவழியாக நுழைந்து மறு வழியாக வெளியேறுதல்

ரமலான் மாதத்தில் செய்யும் உம்ராவின் சிறப்பு!

786. நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்… ‘இப்னு அப்பாஸ் (ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா (ரஹ்) கூறினார்.. ‘நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?’ எனக் கேட்டார்கள். அதற்கவர், ‘எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on ரமலான் மாதத்தில் செய்யும் உம்ராவின் சிறப்பு!

நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்.

782. நபி (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபிய்யாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள். பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபிய்யாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஓர் உம்ரா செய்தார்கள். புஹாரி 1779 அனஸ் (ரலி). 783. நான் ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்.