797. ”நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.”
புஹாரி: 1606 இப்னு உமர் (ரலி).
798. ”கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (முத்தமிடாமல்) தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள்” என்று அபூ ஷஅஸா கூறினார். முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி), ‘(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரண்டு மூலைகளை முத்தமிடக் கூடாது” என்றார்கள்.
புஹாரி : 1608 அபூ அஷ்ஷாத்தா (ரலி).