மக்காவினுள் ஒருவழியாக நுழைந்து மறு வழியாக வெளியேறுதல்

787. நபி (ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள்.

புஹாரி : 1533 இப்னு உமர் (ரலி).

788. நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

புஹாரி : 1575 இப்னு உமர் (ரலி).

789. நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தால் அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள்.

புஹாரி : 1577 ஆயிஷா (ரலி).

790. மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘குதா’ (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள்.

புஹாரி : 1578 ஆயிஷா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , . Bookmark the permalink.