தூத்துவாவில் இரவு தங்குதல்.

791. நபி (ஸல்) அவர்கள் ஃதூத்துவா எனுமிடத்தில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.

புஹாரி :1574 இப்னு உமர் (ரலி).

792. நபி (ஸல்) அவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்கள் செல்லும்போது ‘துல்ஹுலைஃபா’வில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இருந்த முள் மரத்தினடியில் இளைப்பாறுவார்கள். அந்த வழியாக ஹஜ்ஜு, உம்ரா மற்றும் போரிடுதல் போன்றவற்றுக்காகச் செல்லும்போது ‘பத்னுல்வாதீ’ என்ற பள்ளத்தாக்கு வழியாகப் புறப்பட்டு வந்து அந்தப் பள்ளதாக்கின் மேற்குப் புறஓரத்தில் ஒட்டகையைப் படுக்கச் செய்து ஸுபுஹ் வரை ஓய்வெடுப்பார்கள். ஓய்வெடுக்கும் அந்த இடம் பாறையில் அமைந்துள்ள பள்ளிவாசலும் இல்லை; பள்ளியின் அருகிலுள்ள மணற்குன்றுமில்லை என்று இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 484 இப்னு உமர் (ரலி).

793.‘நபி (ஸல்) அவர்கள் ஷரபுர்ரவ்ஹா எனும் இடத்திலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சின்னப் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் தொழுதிருக்கிறார்கள்.’ என்று இப்னு உமர் (ரலி) என்னிடம் கூறிவிட்டு, அந்த இடத்தை அடையாளம் கூறும்போது ‘(நீ மதீனாவிலிருந்து) மக்கா செல்லும வழியில் பாதையின் வலப்புறம் அமைந்த பெரிய பள்ளியில் நீ கிப்லா பக்கம் நோக்கி நின்றால் அந்த இடம், உன் வலப்புறத்தில் இருக்கும். அந்த இடத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்திற்கும் தூரம் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 485 இப்னு உமர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.