Author Archives: Jafar
உஹதுப்போர்.
1169. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் நடுப் பல் உடைக்கப்பட்டுவிட்டபோது, அலீ (ரலி) (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) காயத்தைக் கழுவி வந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட … Continue reading
உங்கள் உருவங்களை தன் விருப்பப்படி அமைத்த இறைவன் யார்?
கேள்வி எண்: 71. “அ(ல்லாஹ்)வனே (உங்கள் அன்னையரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான்” என்ற வசனம் எங்குள்ளது?
ஹூதைபிய்யா உடன்படிக்கை பற்றி….
1167. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப் (ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள்” (என்று சொல்லிவிட்டு) முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), … Continue reading
ஒரு பறவைக்கு தெரிந்த உண்மை மனிதனுக்குத் தெரியாத மர்மம்
وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ 27:20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ 27:21. ‘நிச்சயமாக நான் அதைக் கடுமையான … Continue reading
கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.
1166. நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். ‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள். புஹாரி :2478 இப்னு மஸ்ஊத் (ரலி).
அறிவும் சுதந்திரமும்!
அல்லாஹ்வின் ஓர் உயர் படைப்பான மனிதன் நல்வாழ்வு பெறுவதற்கு, இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையைக் கொடுத்தான் என்பதை நாம் முன்னர் விளக்கமாகப் பார்த்தோம். எனினும், மனிதன் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் பலவந்தப்படுத்தவில்லை. மாறாக மனிதனுக்கு – சிந்திக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தான் – நல்லது கெட்டதைப் புரிந்துக் கொள்ளக்கூடிய திறமையைக் கொடுத்தான். … Continue reading
தாயிஃப் யுத்தம்.
1165. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, ‘இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், ‘இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?’ என்று பேசிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் … Continue reading
ஹூனைன் போர் பற்றி….
1163. பராஉ (ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது பின்வாங்கி ஓடினீர்களா?’ என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுதபலமில்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுதபாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் … Continue reading
உலக மக்கள் அனைவருக்குமான வேதநூல் எது?
கேள்வி எண்: 70. “இது (குர்ஆன்) உலக மக்கள் அனைவருக்கும் நல்லுரையேயன்றி வேறில்லை” என அல்லாஹ் நமக்கு அறிவுறுத்தும் வசனம் எது?
ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
1162. ஠ப௠à®à¯à®à®ªà¯à®¯à®¾à®©à¯(ரலி) தம௠வாயà¯à®ªà¯à®ªà® à®à®©à®à¯à®à¯ ஠றிவிதà¯à®¤à®¾à®µà®¤à¯: (à®à¯à®±à¯à®·à®¿à®¯à®°à®¿à®©à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯ தலà¯à®µà®°à®¾à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤) à®à®©à®à¯à®à¯à®®à¯ à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯à®®à®¿à®à¯à®¯à®¿à®²à®¾à®© (ஹà¯à®¤à¯à®ªà®¿à®¯à¯à®¯à®¾ à®à®®à®¾à®¤à®¾à®© à®à®ªà¯à®ªà®¨à¯à®¤à®®à¯ நà®à¯à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤) à®à®¾à®²à®à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ நான௠(வியாபாரதà¯à®¤à®¿à®±à¯à®à®¾à® வாணிபà®à¯ à®à¯à®´à¯à®µà®¿à®©à®°à¯à®à®©à¯ ஷாம௠நாà®à¯à®à®¿à®±à¯à®à¯à®à¯) à®à¯à®©à¯à®±à®¿à®°à¯à®¨à¯à®¤à¯à®©à¯. நான௠ஷாம௠நாà®à¯à®à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®à®®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ (à®°à¯à®® பà¯à®¸à®¾à®¨à¯à®¤à®¿à®¯à®ªà¯ பà¯à®°à®°à®à®°à¯ à®à¯à®à®°à¯) ஹà¯à®°à®¾à®à¯à®³à®¿à®¯à®¸à®¿à®±à¯à®à¯ நிரà¯à®ªà®®à¯à®©à¯à®±à¯ … Continue reading