Author Archives: Jafar

அவதூறு பரப்புவதும் கொலையை போன்றதே!

70- யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார்.தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம்,அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்)எந்த மனிதனுக்கும் தகாது எதன்மூலம் ஒருவர் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலம் அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். இறை நம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அவதூறு பரப்புவதும் கொலையை போன்றதே!

‘வஹ்ஹாபி’ என்பதென் அர்த்தமென்ன’?

மனிதர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களுக்கும், வீணான நம்பிக்கைகளுக்கும், பித்அத்தான நடைமுறைகளுக்கும் மாறாக நடக்கின்றவர்களை ‘வஹ்ஹாபிகள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய நம்பிக்கைகள் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரண்படக்கூடிய பிழையானவையாக இருப்பினும் சரிதான். குறிப்பாக தௌஹீதின் பக்கம் மக்களை அழைப்பதையும், அவனிடம் மட்டுமே தேவைகளைக் கேட்க வேண்டும் என்று கூறுவதையும், அவனல்லாத எவரிடமும் கேட்கக்கூடாது என்று கூறுவதையும் தான் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ‘வஹ்ஹாபி’ என்பதென் அர்த்தமென்ன’?

மன்னிப்போன் கருணையுடையோன்!

எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 5:39)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மன்னிப்போன் கருணையுடையோன்!

நினைவு படுத்த எளிதானது

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல் குர்ஆன்: 54:32)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நினைவு படுத்த எளிதானது

நிச்சயமாக மரித்தபின் மீண்டும் எழுப்பப்படுவீர்கள்!

11:7. “….உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) ”நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ”இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை என்றும் கூறுவார்கள்” 17:49. “இன்னும்; ”(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப் போனவைகளாகவும் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நிச்சயமாக மரித்தபின் மீண்டும் எழுப்பப்படுவீர்கள்!

கொலை செய்தவன் Vs வாழ வைப்பவன்

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் குர்ஆன்: 5:32)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கொலை செய்தவன் Vs வாழ வைப்பவன்

சிந்தித்து பார்!

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்குர்ஆன் – 39:27)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சிந்தித்து பார்!

தற்கொலையும் நரக நெருப்பும்……

69- யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில்(தள்ளப்பட்டு மேலிருந்து கீழே)என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தை கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொணடேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தற்கொலையும் நரக நெருப்பும்……

இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படி, ஓது

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (அவனே) ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:1-2)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படி, ஓது

நிலத்தை அபகரித்தல்

இறையச்சம் இல்லாமல் போய் விடுமானால் சக்தியும் உபாயமும் அவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கே கேடாகி விடுகிறது. அவற்றை, பிறரின் பொருள்களை அபகரிப்பது போன்ற அக்கிரமத்திற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த அக்கிரமத்தைச் சார்ந்ததுதான் நிலங்களை அபகரித்தல். இதன் முடிவு மிகப் பெரிய துன்பத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். ‘ஒரு ஜாண் அளவு நிலத்தை அநியாயமாக ஒருவன் அபகரித்தால் இறுதி … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on நிலத்தை அபகரித்தல்