Author Archives: Jafar

தன்னை நிராகரிப்பதை அறவே விரும்பாதவன்

“நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”. (அல்குர்ஆன்: 39:7)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தன்னை நிராகரிப்பதை அறவே விரும்பாதவன்

உயிரற்றதிலிருந்தே உயிரினம் தோன்றியது

கேள்வி எண்: 14. உயிரினங்கள் என்பது உயிரற்ற அணுக்களால் உருவான சேர்மங்களின் (Molecules) தொகுப்பே என்ற நவீன அறிவியலாளர்களின் கூற்றை மெய்ப்படுத்தும் இறை வசனமாகிய “நீயே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றாய்: நீயே உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துகின்றாய்” என்ற வசனம் எது? பதில்: “(நாயனே) நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய். நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய். மரித்ததிலிருந்து … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on உயிரற்றதிலிருந்தே உயிரினம் தோன்றியது

கடமையான குளிப்பின் முறை

182- நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக்கரத்தால் தமது இடது கையில் தண்ணீரை ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள். தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தைக் கழுவினார்கள். மேலும் தமது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கடமையான குளிப்பின் முறை

இவர்கள் மீது இரக்கம் வேண்டாம்

விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்: மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் (நம்பிக்கை கொண்டவர்களில்) ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல்குர்ஆன்: 24:2)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இவர்கள் மீது இரக்கம் வேண்டாம்

ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி…

இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி…

இரண்டு பேர் இரகசியம் பேசுதல்

அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும்.

Posted in எச்சரிக்கை | Comments Off on இரண்டு பேர் இரகசியம் பேசுதல்

கடமையான குளிப்பை எவ்வாறு நிறைவேற்றுவது

181- நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்கள் இரு முன் கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் முக்கி அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதி விடுவார்கள். பின்னர் அவர்கள் தலை மீது மூன்று முறை கையினால் தண்ணீரால் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கடமையான குளிப்பை எவ்வாறு நிறைவேற்றுவது

அல்லாஹ்வின் உறுதி மிக்க வாக்கு!

“இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன்: 16:38)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வின் உறுதி மிக்க வாக்கு!

பெண்களுக்குக் கனவில் ஸ்கலிதம் ஆனால்…

180- உம்முஸூலைம் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு (ஆம்! அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பெண்களுக்குக் கனவில் ஸ்கலிதம் ஆனால்…

நேர்வழியின் பால் அழைப்பு!

(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (அல்குர்ஆன்: 22:67)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நேர்வழியின் பால் அழைப்பு!