Tag Archives: தூய்மை

நோன்பின் தத்துவங்கள்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்! நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , | Comments Off on நோன்பின் தத்துவங்கள்!

அத்தியாயம்-3 ஜகாத்.

ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இது பல தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் அரிய அமைப்பாகும். திருக்குர்ஆனில் வரும் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்தும் ஒரே தமிழ்ச்சொல் இல்லை. இதுபோலவே இதன் முழுப்பொருளையும் உணர்த்தும் ஒரே சொல் வேறு மொழிகளிலும் இல்லை. தர்மம், கொடை, இனாம், அன்பளிப்பு, வரி என்ற … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-3 ஜகாத்.

அத்தியாயம்-3 தொழுகையின் விதிகள்

குறைத்து தொழுதல் 1. ஒருவர் தனது ஊரிலிருந்து நாற்பத்தெட்டு மைல்கள் அல்லது அதற்கு மேலே தொடர்ந்து செல்லும் எண்ணத்தோடு பயணம் செய்யும்போது அவர் நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாகக் குறைத்து தொழுது கொள்ள வேண்டும். இந்த சலுகை லுஹர், அஸர், இஷாத் தொழுகைகளுக்குப் பொருந்தும். பஜ்ரு, மஃரிப் ஆகிய தொழுகைகளை குறைத்துத் தொழ … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-3 தொழுகையின் விதிகள்

அத்தியாயம்-3 வெள்ளிக்கிழமைத் தொழுகை (ஜும்ஆத் தொழுகை)

இதுவரை நாம் தினமும் நிறைவேற்றிட வேண்டிய தொழுகைகளைப் பார்த்தோம். இப்போது வாரம் ஒருமுறை நிறைவேற்ற வேண்டிய வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகையைப் பார்ப்போம். ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி வரும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தத் தொழுகையையும் கண்டிப்பாக நிறைவேற்றிட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதைத் தவறவிடக் கூடாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்தத் தொழுகை நடைபெறும். இது … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-3 வெள்ளிக்கிழமைத் தொழுகை (ஜும்ஆத் தொழுகை)

அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்

தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்: 1. புத்தி சுவாதீனமுள்ளவர்கள் அனைவரும் தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். 2. ஓரளவுக்கு மனப்பக்குவம் அடைந்தவரும், வயதுக்கு வந்தவர்களும் (பொதுவாக பதினான்கு வயது) தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். குழந்தைகள் ஏழு வயதை அடைந்தவுடன் தொழும்படி பெற்றோர்கள் அறிவுரை கூற வேண்டும். பத்து வயதை அடைந்தவுடன் அதனை … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்

80. பிரார்த்தனைகள்

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6304 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6305 … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 80. பிரார்த்தனைகள்

[பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.

மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தினர். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் அவர்களை நேசிப்பதால். அவர்கள் ஏனைய முஃமின்கள், முஸ்லிம்களை விடச் சிறந்தவர்கள் என நம்ப வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: “(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-3] முஸ்லிமின் வழிமுறை.

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

பிறரைப் புகழ்ந்து பேசுதல்.

1888. ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | 1 Comment