பிறரைப் புகழ்ந்து பேசுதல்.

1888. ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்றார்கள்.

புஹாரி : 2662 அபூபக்ரா (ரலி).

1889. நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, ‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் – அல்லது துண்டித்து விட்டீர்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 2663 அபூ மூஸா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to பிறரைப் புகழ்ந்து பேசுதல்.

  1. mohammed rafeek says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) “பிறரை புகழ்ந்து பேசுதல்” என்ற ஹதீஸை படித்தேன். ரொம்ப அருமையான விஷயத்தை நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸ்ல சொல்லி இருக்காங்க. “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே” அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் ரஹ்மத் செய்வானாக! (ஆமீன்)

Comments are closed.