Tag Archives: சமாதி

மனமிருந்தால் மாற்றம் வரும்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அரேபிய தீபகற்பத்தில் அறியாமை எனும் இருள் சூழ்திருந்த ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையுமே தம்முடைய வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டு எதற்கெடுத்தாலும் நல்ல நேரம், சகுனம் பார்த்து தம் அன்றாட வாழ்க்கையை நடத்தியவர்களாகயிருந்தனர். அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on மனமிருந்தால் மாற்றம் வரும்!

குறிப்பு (3)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். … Continue reading →

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on குறிப்பு (3)

ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.

இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபிமார்களையே ஷைத்தான் துன்புறுத்தவும், அவர்களுக்குத் தீங்குகளையும், அக்கிரமங்களையும் விளைவிக்கவும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக் கெடுத்து நாசம் பண்ணிடவும் தயாராவானானால் நபியல்லாத மற்றவர்களின் கதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். (சாதாரணமான முஸ்லிம் மனிதனை ஷைத்தான் எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான் என்பதைப் பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்). நபியவர்கள் மனு-ஜின் இரு … Continue reading →

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , | Comments Off on ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.

காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும் நபிகளார் மூலம் அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின் கப்றை ஸியாரத் செய்வது என்பது. காஃபிர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்களான முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ் அறிஞர்களின் தொகுப்புகளில் காணப்படுகின்றன.

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?

முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வது எப்படி?

கப்று (சமாதி) தரிசனம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும். அனுமதிக்கப்படாத நூதன முறையில் அனுஷ்டிக்கப்படும் அமைப்பு மற்றொன்று. இப்படி ஸியாரத் இரு வகைப்படும். ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்ட ஸியாரத்திற்கு நமது இஸ்லாம் விளக்கம் தரும்போது ‘எந்த ஸியாரத்தினால் ஸியாரத் செய்கிறவனின் எண்ணம் கப்றாளிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்’ என்று அமைகிறதோ அதுவே ஷரீஅத்தில் அனுமதிக்கப்படுகிற ஸியாரத்தாகும். மனிதன் இறந்ததன் … Continue reading →

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வது எப்படி?

மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!

பள்ளிவாசல்களை நிறுவுவதினால் அல்லாஹ்வைத் தொழுவது மட்டும் இலட்சியமாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தொன்று தொட்டு ஏக இறைவனை மட்டும் வணங்குவதற்கு மசூதிகளைக் கட்டி வந்தார்கள். இப்பள்ளிவாயில்களில் இறைவழிபாடுகளைத் தவிர்த்து வேறு எச்செயலையும் அனுஷ்டானம் என்ற பெயரில் செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. ஏகனைத் தொழலாம். அவனிடம் தன் நாட்டங்களைக் கேட்டுக் கெஞ்சலாம். இதைத் தவிர படைப்பினங்களில் எவரையும் … Continue reading →

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!

விக்ரஹங்களால் சிபாரிசு செய்ய முடியாது

இறைவனுக்கு இணையுண்டு என நினைக்கின்ற முஷ்ரிக்குகள் கூறுகின்றனர்: மலக்குகளும், நபிமார்களும் எங்களுக்காக சிபாரிசு செய்ய வேண்டுமென்றே நாம் அவர்களை வேண்டுகிறோம்.வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நபிமார்கள்,மலக்குகள், நன்மக்கள் இவர்கள் சமாதியில் வந்து நாம் கேட்பதெல்லாம் சிபாரிசு ஒன்றைத்தான். உதாரணமாகக் கூறுவதாயின்: இரக்கமுள்ள நாச்சியார் மர்யம் அவர்களே! மேன்மைக்குரிய பீட்டர் அவர்களே! ஜுர்ஜீஸ் அவர்களே! நபி மூஸாவே! … Continue reading →

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on விக்ரஹங்களால் சிபாரிசு செய்ய முடியாது

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் … Continue reading →

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

இணை வைப்பவர்களும் ஷபாஅத்தும்

இறைவனுக்கு இணைவைப்போர் மலக்குகளையும், நபிமார்களையும், மற்றும் நன்மக்களின் பிம்பங்களையும் அமைத்து அவற்றிடம் சிபாரிசை வேண்டினார்கள். இப்பிம்பங்களைக் கொண்டு வெளிப்படையில் நாங்கள் சிபாரிசைத் தேடினாலும் உண்மையில் நேரடியாகவே இவர்களிடம் கேட்கிறோம் என்று வாதாடினார்கள். இந்தப் படைப்பினங்களுக்கு கல்லறைகளை அமைத்து வேண்டி நின்றார்கள். அவற்றுக்கு முன் மண்டியிட்டு விழுந்து சிபாரிசை வேண்டி வணக்கங்களும் புரிந்தார்கள். இம்மாதிரியான சிபாரிசை இறைவன் … Continue reading →

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on இணை வைப்பவர்களும் ஷபாஅத்தும்