ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகள் பற்றி…

703. எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.

புஹாரி :1950 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகள் பற்றி…

வெள்ளிக் கிழமை நோன்பிருக்க கூடாது.

700. நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘ஆம்’ என்றார்.

புஹாரி :1984 முஹம்மது பின் அப்பாத் (ரலி).

701. ”உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1985 அபூஹுரைரா (ரலி).

702. ”நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (‘உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.

புஹாரி :4507 ஸலாமா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வெள்ளிக் கிழமை நோன்பிருக்க கூடாது.

இருபெருநாள் தினங்களில் நோன்பிருக்க கூடாது.

697. இவ்விரு நாள்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் தினமும் குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகும்.

புஹாரி : 1990 அபூஉபைத் (ரலி).

698. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1197 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

699. ஒருவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று கூறினார்கள். அந்த மனிதர் ‘(அவர்) திங்கட்கிழமையன்று… (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!)” என்று கூறினார்கள் என நான் நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது! எனவே, இப்னு உமர் (ரலி) ‘நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்!” என்று கூறினார்கள்.

புஹாரி :1994 ஜியாத் பின் ஜூபைர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இருபெருநாள் தினங்களில் நோன்பிருக்க கூடாது.

ஆஷூரா தினத்தில் உணவை உண்டவர்.

695. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் ‘யார் சாப்பிட்டுவிட்டாரோ அவர் (நோன்பாக) இருக்கட்டும்!’ என்று ஒருவரை அனுப்பி மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.

புஹாரி : 1924 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

696. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

புஹாரி : 1960 அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஆஷூரா தினத்தில் உணவை உண்டவர்.

ஆஷூரா நோன்பு.

688. குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள்.

புஹாரி : 1893 ஆயிஷா (ரலி).


689. அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், ‘(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதை விட்டுவிடலாம்” என்று கூறினார்கள்.

புஹாரி : 4506 இப்னு உமர் (ரலி).

690. (ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, ‘இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே” என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) கூறினார். நான், ‘ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. எனவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்று சொன்னேன்.

புஹாரி : 4503 இப்னு மஸ்ஊத் (ரலி).

691. முஆவியா (ரலி) ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு ஆஷுரா நாளில் மிம்பரில் நின்றுகொண்டு, ‘மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? நபி (ஸல்) அவர்கள், இது ஆஷுரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டு விடட்டும்’ என்று கூறினார்.

புஹாரி : 2003 ஹூமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரலி).

692. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

புஹாரி : 2004 இப்னு அப்பாஸ் (ரலி).

693. ஆஸுரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!” என்றார்கள்.

புஹாரி : 2005 அபூமூஸா (ரலி).

694. ”ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”

புஹாரி: 2006 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஆஷூரா நோன்பு.

ஹஜ் செய்பவர்கள் அரஃபா நோன்பு நோற்க வேண்டாம்.

686. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு பானம் அனுப்பி வைத்தேன்; அதையவர்கள் குடித்தார்கள்.

புஹாரி : 1658 உம்மு ஃபழ்ல் (ரலி).

687. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.

புஹாரி : 1989 மைமூனா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஹஜ் செய்பவர்கள் அரஃபா நோன்பு நோற்க வேண்டாம்.

பயணத்தில் நோன்பு நோற்கலாமா?

684. ஹம்ஸா இப்னு அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு” என்றார்கள்.

புஹாரி: 1943 ஆயிஷா (ரலி).

685. ”நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி (ஸல்) அவர்களை தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!”

புஹாரி : 1945 அபூதர்தா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பயணத்தில் நோன்பு நோற்கலாமா?

நோன்பு நோற்காதோர் அதிக நன்மை பெற்றது.

683. (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் விட்டுவிட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள். நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இன்று நோன்பை (நோற்காமல்) விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி : 2890 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பு நோற்காதோர் அதிக நன்மை பெற்றது.

பயணிகள் நோன்பை விடுவது.

680. ”நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை அடைந்ததும் நோன்பைவிட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!”

புஹாரி : 1944 இப்னு அப்பாஸ் (ரலி).

681. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!” என்று கூறினார்கள்.

புஹாரி : 1946 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

682. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நோற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.

புஹாரி : 1947 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பயணிகள் நோன்பை விடுவது.

இறைவா! எங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி) விடுவான்” என்று நீர் கூறுவீராக.

20:106. “பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான்.

20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்”.

20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் – எக்காளம் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ்வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்க மாட்டீர்.

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் (அருளாளன்) எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்துக் கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.

20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.

20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்து விடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்துக் கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.

20:112. எவர் முஃமினாக (நம்பிக்கை கொண்டவராக) இருந்து, ஸாலிஹான – நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார்.

20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ – செய்தி அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப் படாதீர்; ‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!’ என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!.

அல் குர்ஆன்: சூரா தாஹா.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறைவா! எங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!