684. ஹம்ஸா இப்னு அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு” என்றார்கள்.
புஹாரி: 1943 ஆயிஷா (ரலி).
685. ”நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி (ஸல்) அவர்களை தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!”
புஹாரி : 1945 அபூதர்தா (ரலி).