ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை.

722. இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் நோன்பை விட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.

”நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே. ‘இம்மாதம்’ என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ இப்னு மைமூன்) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்!” என்று அபுந் நுஃமான் கூறுகிறார்.’நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு ‘இம்மாதம்’ என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘ஸல்த்’ என்பவர் கூறவில்லை. ‘ஷஅபானின் கடைசி’ என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

புஹாரி :1983 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை.

தொடர்ந்து நோன்பு நோற்க தடை.

714. ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்’ என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி) அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘இது உம்மால் முடியாது! (சில நாள்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!” என்றார்கள். நான் ‘என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்யமுடியும்!” என்று கூறினேன். ‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டு விடுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!” என்றார்கள். நான் ‘என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்?’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!” என்றார்கள்.

புஹாரி : 1976 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

715. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். தாவூத் நபி (அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!” என்றார்கள்.”அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) வயோதிகம் அடைந்த பின் ‘நபி (ஸல்) அவர்களின் சலுகைகை நான் ஏற்காமல் போய் விட்டேனே’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்!” என அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

புஹாரி: 1975 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

716. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!” என்று கூறினார்கள். அப்போது நான், ‘(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது” என்று கூறினேன். ‘அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கி விடாதே” என்று கூறினார்கள்.

புஹாரி : 5054 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

717. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதைவிட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர்’ என்று க
ூறினார்கள்.

புஹாரி :1152 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

718. நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி (ஸல்) அவர்கள் ‘நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதை விட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!” என்று கூறினார்கள். நான், ‘இதற்கு எனக்கு சக்தி உள்ளது!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். ‘தாவூத் நபி (அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள் விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!” என்றேன்.
”காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் ‘காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!” என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)” என்று அதா (ரஹ்) கூறினார்.

புஹாரி :1977 அப்துல்லாஹ் பின் அம் ர்(ரலி).

719. நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?’ என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்!” என்றார்கள். அதற்கு ‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்!” என்று கூறினார்கள்.

புஹாரி : 1979 அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி).

720. ”அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1131 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).

721. நபி (ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றிக் கூறப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ‘ஒவ்வொரு ம
ாதமும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (இதை விட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)” என்றேன். அவர்கள் ‘ஐந்து நாள்கள்!” என்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே!” என்றேன். ‘ஒன்பது நாள்கள்!” என்றேன். ஒன்பது நாள்கள்!” என்றார்கள். பிறகு, ‘தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பும் இல்லை அது ஆண்டின் பாதி நாள்களாகும்! எனவே, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள்.

புஹாரி :1980 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தொடர்ந்து நோன்பு நோற்க தடை.

அல்லாஹ்வின் விரோதிகளுக்காக நாம் பிரார்த்திக்கலாமா?

‘இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் ஜனங்களை நோக்கி, ‘நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றிலிருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும், உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். அன்றி இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி ‘அல்லாஹ்விடத்தில் உமக்காக யாதொன்றையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும் உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்புக் கேட்பேன்’ என்று கூறி ‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்மீதே நாங்கள் பாரம் சாட்டினோம். உன்னிடமே (நாங்கள் யாவரும்) வரவேண்டியதிருக்கிறது. எங்கள் இறைவனே! நீ எங்களை நிராகரிப்போரின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீயே மிகைத்தவன் ஞானமுடையவன்’ என்று பிரார்த்தித்தார்’ (அல்குர்ஆன்: 60:4-5)

“இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம் அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே அல்லாது வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்று தெளிவாகத் தெரிந்ததும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக்க இரக்கமும், அடக்கமும் உடையோராக இருந்தார்”. (அல்குர்ஆன்: 9:114)

“இணைவைத்து வணங்குவோருக்காக பாவமன்னிப்புக் கோருவது நபிக்கோ, விசுவாசிகளுக்கோ தகுமானதல்ல. அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் சரியே. அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்று இவர்களுக்குத் தெளிவான பின்னரும் (இது தகுமானதல்ல)”. (அல்குர்ஆன்: 9:113)

“எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய்-தந்தைக்கும், மற்ற மூஃமின்களுக்கும் கேள்விக்-கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!…” (என இப்ராஹீம் நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்) (அல்குர்ஆன்: 14:41)

“மனிதர்களை அவர்கள் தேடிக்கொண்ட தீவினைக்காக உடனுக்குடன் அல்லாஹ் தண்டிப்பதாக இருப்பின் பூமியில் எந்த ஜீவனையும் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் அவர்களைக் குறிப்பிட்ட தவணை வரையிலும் பிற்படுத்துகிறான்…” (அல்குர்ஆன்: 35:45)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் விரோதிகளுக்காக நாம் பிரார்த்திக்கலாமா?

ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.

711. ”(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!”

புஹாரி : 1969 ஆயிஷா (ரலி).

712. நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!” என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

புஹாரி :1971 ஆயிஷா (ரலி).

713. நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பை விட மாட்டார்கள்!” என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பு நோற்க மாட்டார்கள்!’ என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டு விடுவார்கள்.

புஹாரி :1970 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.

நோன்பில் மறதியாக….

710. ”ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1933 அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பில் மறதியாக….

அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.

709. இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2840 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.

நோன்பின் சிறப்புகள்.

707. ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1904 அபூஹுரைரா (ரலி).

708. ”சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1896 ஸஹ்ல் (ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பின் சிறப்புகள்.

நோன்பின் போது நாவைப் பேணுதல்.

706. ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1894 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on நோன்பின் போது நாவைப் பேணுதல்.

இறந்தவருக்காக நோன்பு நோற்றல்.

704. ”களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1952 ஆயிஷா (ரலி)

705. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்றார்கள் .

புஹாரி :1953 இப்னு அப்பாஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இறந்தவருக்காக நோன்பு நோற்றல்.

மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றல்

“அல்லாஹ் அருளிய (வேதத்)தின் பாலும் (அவனுடைய) ரஸூலின் பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், ‘எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்கக் கண்டோமோ, அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்’ எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும் நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)?” (5:104)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களை நோக்கி குர்ஆனின் பக்கமும், அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி, அவனிடம் மட்டுமே தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பதின் பக்கமும் வாருங்கள் என அழைத்தபோது ‘எமது மூதாதைகளின் நடைமுறை எமக்குப் போதுமானது’ என்று அம்மக்கள் சொன்னார்கள். உங்களுடைய மூதாதைகள் அறிவீனர்கள்; எதனையும் அறியாதவர்கள்; நேர்வழியடையாதவர்கள் என்று மேற்காட்டிய வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறி இணை வைப்பவர்களின் கூற்றை மறுக்கிறான். Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றல்