697. இவ்விரு நாள்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் தினமும் குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகும்.
698. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
699. ஒருவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று கூறினார்கள். அந்த மனிதர் ‘(அவர்) திங்கட்கிழமையன்று… (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!)” என்று கூறினார்கள் என நான் நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது! எனவே, இப்னு உமர் (ரலி) ‘நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்!” என்று கூறினார்கள்.