அல்கஸாமா(கொலை வழக்கில் சாட்சி கிட்டாதபோது குற்றஞ்சாட்டப் பட்ட தரப்பிலிருந்து 50பேர் சத்தியம் செய்தல்.)

1085. அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் (பேரீச்சம் பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற தம் தோழர்களைத் தேடி) கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரிச்சந் தோப்புக்குள் பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். எனவே, (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிம் வந்து (கொல்லப்பட்ட) தங்கள் நண்பரைக் குறித்துப் பேசினார்கள். அப்போது அப்துர் ரஹ்மானே (பேச்சைத்) தொடங்கினார். அவர் அந்த மூவரில் வயதில் சிறியவராக இருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் ‘(வயதில்) மூத்தவரை முதலில் பேசவிடு” என்றார்கள். -யஹ்யா இப்னு ஸயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘வயதில் பெரியவர், பேசும் பொறுப்பை ஏற்கட்டும்” என்று இடம் பெற்றுள்ளது. எனவே, (வயதில் மூத்தவர்களான) ஹுவய்யிஸாவும் முஹய்யிஸாவும் தம் (கொல்லப்பட்ட) நண்பர் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘யூதர்களே ஜம்பது பேர் சத்தியம் (கஸாமத்) செய்வதன் மூலம் ‘உங்களில் கொல்லப்பட்டவர்’ அல்லது ‘உங்கள் நண்பரின் உயிரீட்டுத் தொகையை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கண்ணால் காணாத விஷயமாயிற்றே! (எவ்வாறு நாங்கள் சத்தியம் செய்வது?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியானால், (பிரதிவாதிகளான) யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் கொலை செய்யவில்லை என்று) சத்தியம் செய்து உங்களை(ச் சத்தியம் செய்வதிலிருந்து) விடுவிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள்) இறைமறுப்பாளர்களான கூட்டமாயிற்றே! (அவர்களின் சத்தியத்தை எப்படி ஏற்க முடியும்?)” என்று கேட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களே (கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையைக்) கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்குத் தம் சார்பாக வழங்கினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகையாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்றை கண்டேன். அது அவர்களின் ஒட்டகத் தொழுவத்திற்குள் நுழைந்தது. அது தன்னுடைய காலால் என்னை உதைத்துவிட்டது.

புஹாரி :6142 ராஃபிஹ் பின் கதீஜ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அல்கஸாமா(கொலை வழக்கில் சாட்சி கிட்டாதபோது குற்றஞ்சாட்டப் பட்ட தரப்பிலிருந்து 50பேர் சத்தியம் செய்தல்.)

அடிமையை விடுவித்தலின் சிறப்பு.

1082. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2522 இப்னு உமர் (ரலி).

1083. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனில், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது.

புஹாரி :2504 அபூஹுரைரா (ரலி).

1084. அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவனைத் தம் இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவனாவான் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவில்லை. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது ‘என்னிடமிருந்து இவனை (விலைக்கு) வாங்குபவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹராம் (ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங்களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கினார்கள்.

புஹாரி :6716 ஜாபிர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அடிமையை விடுவித்தலின் சிறப்பு.

எஜமானுக்கு விசுவாசமுள்ள அடிமையின் சிறப்பு.

1079. அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வணங்கி வருவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2550 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1080. ஒருவருக்கு உடைமையான நல்ல பயபக்தியுள்ள அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு. இதை அறிவித்துவிட்டு, அபூஹுரைரா (ரலி), ‘எவனுடைய கரத்தில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இறைவழியில் போராடுவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்திருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் மரணிப்பதையே விரும்பியிருப்பேன்.” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

புஹாரி :2548 அபூஹூரைரா (ரலி).

1081. ‘தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்கி, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடப்பவரே உங்களில் நல்லவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி :2549 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on எஜமானுக்கு விசுவாசமுள்ள அடிமையின் சிறப்பு.

இவர்கள் யார்?

கேள்வி எண்: 60. “ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள்” என எவர்களைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on இவர்கள் யார்?

அடிமையைத் தன்னைப்போல் உண்ண உடுத்தக் கொடுத்தல்.

1077. ‘நான் அபூதர் (ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.

புஹாரி : 30 மஹ்ரூர் (ரலி).

1078. உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5460 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அடிமையைத் தன்னைப்போல் உண்ண உடுத்தக் கொடுத்தல்.

அடிமை மீது அவதூறு கூறாதே.

1076. நிரபராதியான தம் அடிமை மீது விபச்சார அவதூறு கூறியதற்காக எஜமானனுக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!’ என்று அபுல் காசிம் (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 6858அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அடிமை மீது அவதூறு கூறாதே.

அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பெற்ற கணக்கின்படி சுழன்று கொண்டிருக்கும் சூரியனும் சந்திரனும்!

9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் – அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு – ஆட்சிக்குக் – கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பெற்ற கணக்கின்படி சுழன்று கொண்டிருக்கும் சூரியனும் சந்திரனும்!

இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நேர்ச்சையை நிறைவேற்று

1075. அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர் (ரலி) ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்கு கருணை காட்டி அவர்களை சுதந்திரமாக விட்டு விட்டிருந்தார்கள். எனவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர் (ரலி) தம் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது?’ என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், போர்க் கைதிகளின் மீது கருணை புரிந்து அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்” என்றார்கள். (உடனே) உமர் (ரலி), அப்படியென்றால் நீ சென்று அந்த இரண்டு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்ல விட்டு விடு” என்று கூறினார்கள்.

புஹாரி :5144 நாஃபிவு (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நேர்ச்சையை நிறைவேற்று

குடும்பத்தார்க்கு எதிராக தீங்காக சத்தியம் செய்யாதே.

1074. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6624-6625 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குடும்பத்தார்க்கு எதிராக தீங்காக சத்தியம் செய்யாதே.

உறவை பேணி வாழச் சொல்வது எதனால்?

கேள்வி எண்: 59. ‘தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்’ -புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் யார்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on உறவை பேணி வாழச் சொல்வது எதனால்?