1079. அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வணங்கி வருவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2550 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
1080. ஒருவருக்கு உடைமையான நல்ல பயபக்தியுள்ள அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு. இதை அறிவித்துவிட்டு, அபூஹுரைரா (ரலி), ‘எவனுடைய கரத்தில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இறைவழியில் போராடுவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்திருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் மரணிப்பதையே விரும்பியிருப்பேன்.” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
புஹாரி :2548 அபூஹூரைரா (ரலி).
1081. ‘தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்கி, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடப்பவரே உங்களில் நல்லவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
புஹாரி :2549 அபூஹுரைரா (ரலி).