மறுமையில் முதலில் தீர்ப்பு.

1093. மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1093 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மறுமையில் முதலில் தீர்ப்பு.

தர்ஹாக்களுக்கு ஜியாரத் செல்லலாமா?

கேள்வி எண்: 62. கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்கள் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக ஸுனன் திர்மிதியில் அறிவிக்கப்படும் ஹதீஸ் என்ன? Continue reading

Posted in கேள்வி பதில் | 1 Comment

கொலையை இப்புவியில் துவங்கியவன்.

1092. (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3335 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கொலையை இப்புவியில் துவங்கியவன்.

எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கின்றான்

அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையை துறைகள் வாரியாகவோ, இம்மை மறுமை என்றோ பிரித்து நோக்குவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ‘வணங்குவதற்குதான் அல்லாஹ்; வாழ்வது எப்படியும் எக்கொள்கைப்படியும் இருக்கலாம்’ என்ற கருத்தை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கின்றது.

அல்லாஹ் அண்ட சராசரத்தையும், அதனுள் அடங்கப் பெற்றவற்றையும், எல்லாக் காலங்களையும், எல்லாச் சூழல்களையும், எல்லா உயிரினங்களையும், எல்லாப் பொருட்களையும் – ஆக அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் சூழ்ந்து நிற்கின்றான். இதன் கருத்து, ‘அவன் எல்லாப் பொருட்களாகவும் இருக்கின்றான்’ என்பது அல்ல; எல்லாப் பொருட்களிலும் அவனது தன்னிகரற்ற அதிகாரம் உண்டு என்பதாகும். அவன் வைத்த நியதிக்கு மாறாகவோ, ஏற்பாட்டுக்கு எதிராகவோ எவரும் எதுவும் செய்துவிட முடியாது.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கின்றான்

அல்லாஹ்வின் மாதம் எது?

கேள்வி எண்: 61. ‘அல்லாஹ்வின் மாதம்’ என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட மாதம் எது? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ்வின் மாதம் எது?

ஒரு முஸ்லீமைக் கொல்ல 3 காரணங்கள்.

1091. ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.

(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.

புஹாரி :6878 இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஒரு முஸ்லீமைக் கொல்ல 3 காரணங்கள்.

பழிவாங்குதல் (இழப்புக்கு).

1090. என் தந்தையின் சகோதரி – ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர் (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, இறைத்தூதர் அவர்களே!” என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும் (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம்பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றனர். (ருபய்யிஉவை பழி வாங்காமல் மன்னித்தார்கள்.) அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்” என்று கூறினார்கள்.

புஹாரி :4611 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பழிவாங்குதல் (இழப்புக்கு).

இழப்பீடு கிட்டாத நிலை.

1088. ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை அவரின் வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் தன்னுடைய கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது” என்றார்கள்.

புஹாரி :6891 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).

1089. நான் நபி (ஸல்) அவர்களுடன் சிரமமான (தபூக்) போரில் பங்கெடுத்துக் கொண்டேன். அந்தப் போர் என்னுடைய அமல்களிலேயே உறுதிமிக்கதாக எனக்குத் தோன்றியது. என்னிடம் கூலியாள் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அப்போது (அவர்களில்) ஒருவர், மற்றவரின் விரலைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் விரலை உருவிக் கொண்டு, கடித்தவரின் முன் பல்லை உடைத்தார். பல் கீழே விழுந்தது. பல்லுடைக்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் ‘அதற்கு எந்த நஷ்ட ஈடும் இல்லை!” என்று தீர்ப்பளித்துவிட்டு, அவரிடம், ‘ஒட்டகம் மெல்லுவது போல் நீர் மெல்லுவதற்காக அவர் உம்வாயில் தன் விரலைக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?’ என்று கேட்டார்கள்.

புஹாரி :2265 யஃலா பின் உமைய்யா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on இழப்பீடு கிட்டாத நிலை.

கொலைக்குப் பகரம் பழிவாங்குதல் பற்றி..

1087. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக் கொண்டு அவளுடைய மண்டையை உடைத்துவிட்டான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அவளை உடனே அவளுடைய குடும்பத்தார் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அவளால் பேச முடியவில்லை. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘உன்னைத் தாக்கியவன் யார்? இவனா? என்று அவளைத் தாக்காத வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள். அதற்கு அச்சிறுமி, ‘இல்லை” என்று தன்னுடைய தலையால் சைகை செய்தாள். பிறகு அவளைத் தாக்காத இன்னொருவரின் பெயரைக் குறிப்பிட்டு (இவரா உன்னைத் தாக்கியவர்? என்று) கேட்டார்கள். அதற்கும் அவள், ‘இல்லை’ என்று சைகை செய்தாள். இறுதியில் ‘இன்னாரா?’ என்று அவளைத் தாக்கியவனின் பெயரைச் சொல்லிக் கேட்டதும் அவள், ‘ஆம்’ என்று சைகை செய்தாள். உடனே அந்த நபருக்குத் தண்டனை வழங்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவனுடைய தலை இரண்டு கற்களுக்கிடையில் வைத்து நசுக்கப்பட்டது.

புஹாரி :5295 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கொலைக்குப் பகரம் பழிவாங்குதல் பற்றி..

மதம் மாறி குழப்பம் செய்வோர் பற்றி….

1086. ‘உக்ல்’ எனும் குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழி வழங்கினர். அப்போது (மதீனா) பூமியின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, அவர்களின் உடல்நலம் பாதித்தது. எனவே, இது குறித்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் நம் மேய்ப்பாளர் உடன் சென்று அவரிடமுள்ள (முஸ்லிம்களுக்குச் சொந்தமான) ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தலாமே!” என்று (யோசனை) கூறினார்கள். உக்ல் குலத்தார், ‘சரி’ என்று சொல்லிவிட்டு அங்கு சென்றனர். அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி உடல் நலம் தேறினர். பிறகு அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இச்செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே (அவர்களைப் பிடித்து வருமாறு) அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பி வைத்தார்கள். எனவே, அவர்கள் பிடிக்கப்பட்டு (இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுமாறும் அவர்களின் கண்களில் சூடிடுமாறும் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் இறக்கும்வரை அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள்.

புஹாரி: 6899 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மதம் மாறி குழப்பம் செய்வோர் பற்றி….