இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம். Continue reading
அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.
அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.
இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில:
1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே!
2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான். Continue reading
அத்தியாயம்-2 இஸ்லாம் அமைத்துத்தரும் சமுதாயம்.
சமுதாயம் என்ற சொல்லுக்கு மிக விரிந்த விளக்கங்கள் உண்டு. நாம் சமுதாய அமைப்பின் அடிப்படைகளையே இங்கே எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம். ஆகவே சமுதாய அமைப்பின் அடிப்படைகளை மட்டும் எடுத்துச் சொல்லும் சில இலக்கணங்களை மட்டுமே இங்கே தருகின்றோம்
சமுதாயம் என்பது எல்லாவகையான உறவுகளையும் உள்ளடக்கியதாகும். அது தனி மனிதர்களுக்கிடையே ஏற்படும் அந்தரங்கமான உறவுகள், உணர்வுகள், ஒழுக்கக் கடமைகள், சமூக பிணைப்பு இவைகளை குறிப்பதாகும். இந்த உறவு ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் காணப்படலாம். ஒரே தேசத்தைச் சார்ந்த மக்களிடையே காணப்படலாம். ஒரே தொழிலைச் செய்பவர்களிடையே காணப்படலாம். இதனுடைய மிகச் சிறிய எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தைக் குறிப்பிடலாம்………….. (Nisbet pp. 74-8) Robert Nisbet. The Sociological Tradition (Newyork: basic Books, 1966) Continue reading
அத்தியாயம்-2 சாந்தி (அமைதி) இஸ்லாத்தின் பார்வையில்
இஸ்லாம், சாந்தி அல்லது அமைதி என்பதை எப்படி அணுகுகின்றது என்பதை அறிந்துகொள்ள ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படைகளை மட்டும் கவனித்தால் போதுமானது. சாந்தி – சமாதானம் (மன அமைதி) இஸ்லாம் இவை அனைத்தும் ஒரே வேரிலிருந்து பிறந்தவைகளே! ஆதலால், இவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைந்தவைகளே! இறைவனின் அழகிய பெயர்களில் ஒன்று சாந்தி – அமைதி. முஸ்லிம்கள் ஒவ்வொரு இறை வணக்கத்தையும் (தொழுகையை) முடிக்கும்போது இறைவனிடம் அமைதியை வேண்டியே – இறைஞ்சியே முடிக்கின்றனர். முஸ்லிம்கள் இறைவனிடம் திரும்பிடும்போது, அமைதியைக் கொண்டே முகமன் கூறப்படுகின்றார்கள். முஸ்லிம்கள் தினமும் ஒருவரை ஒருவர் அமைதியைக் கொண்டே முகமன் கூறி வரவேற்கின்றனர் – வாழ்த்துகின்றனர் – விட்டுப் பிரிகின்றனர். Continue reading
அத்தியாயம்-2 ’சகோதரத்துவம்’ இஸ்லாத்தின் தனித்தன்மை.
மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே என்பது இஸ்லாத்தின் பிரிதொரு பிரிக்க முடியாத அடிப்படையாகும். ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’ இவைகள் எந்த அடிப்படையில் அமைந்துள்ளனவோ அதே அடிப்படையில் தான், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அமைந்துள்ளது. சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கைகள் அமைந்துள்ள அடிப்படைகளைத் தவிர இன்னும் சில அடிப்படைகள் இதற்குண்டு. அவை, இறைவன் ஒருவனே, அவன் எங்கும் நிறைந்து நிற்பவன். அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவன் அருளிய மார்க்கம் (வழி காட்டுதல்) ஒன்றே என்பவைகளாகும். Continue reading
அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.
சமத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் தரும் சமத்துவத்தைக் குறிப்பிட சமத்துவம் என்ற வார்த்தையைவிட ‘நியாயம், நேர்மை’ என்ற வார்த்தைகளே பொருத்தமானதாக அமையும். It is Not Equality But Equit. இங்கே சமத்துவம் என்பதை ஒரே மாதிரியானது அல்லது ஒன்றைப்போல் மற்றொன்று என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. இஸ்லாம், இறைவனின் முன் அனைவரும் ‘சமம்’ எனக் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்களுக்குள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று பொருளல்ல. மனிதர்கள், தங்கள் திறமைகளால், தகுதிகளால், அவர்கள் கொண்டிருக்கும் ஆசைகளால், செல்வங்களால் வேறுபட்டு நிற்பவர்களே. ஆனால் இவைகளில் எதுவும் ஒரு மனிதனின் அந்தஸ்தை இன்னொரு மனிதனின் அந்தஸ்திலிருந்து உயர்த்தி விடாது. அதுபோலவே இவைகளில் எதுவும் ஒரு இனத்தை இன்னொரு இனத்தை விட உயர்ந்ததாக ஆக்கிவிடாது.
மனிதனின் கோத்திரம் அல்லது குலம், மனிதனின் நிறம், மனிதன் பெற்றிருக்கும் செல்வங்கள், அவன் சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்து இவைகளில் எதுவும் இறைவன் முன் ஒரு மனிதனைவிட இன்னொரு மனிதனை உயர்ந்தவனாக ஆக்கிடாது. இறைவன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அளக்கின்ற அளவுகோல் அவர்கள் கொண்டுள்ள இறையச்சமேயாகும். இறையச்சத்தின் அடிப்படையிலிருந்து இறைவன் மனிதர்களுக்கிடையில் எந்த பாகுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், தீய செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே பிரித்தறிகின்றான். இதனை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: Continue reading
அத்தியாயம்-2 சுதந்திரம்.
சுதந்திரம் என்பது எப்போதுமே தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. பல நேரங்களில் அது தவறாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்த மனித சமுதாயத்திற்கும் பூரணமானதொரு சுதந்திரத்தை இந்த வார்த்தைக்கு இருக்கின்ற அதே பொருளில் தந்திட முடியாது. சமுதாயம் ஒழுங்காக செயல்பட வேண்டுமேயானால் அங்கே சில கட்டுப்பாடுகள் இருந்தே ஆக வேண்டும். Continue reading
அத்தியாயம்-2 ’பாபம்’ – இஸ்லாத்தின் பார்வையில்.
’பாபம்’ என்ன என்பதை புரிந்து கொள்வதில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன. பாபம் முதன்முதலில் ஆதம், ஹவ்வா என்ற ஆதிப் பெற்றோர்கள் சுவர்க்கத்தில் இருக்கும் போதுதான் ஆரம்பமானது எனக் கருதப்பட்டு வருகின்றது. அங்கே நடந்த பாப சம்பவம்தான் அவர்களை அங்கே இருந்து கீழே (பூமிக்கு)) தள்ளியது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதர்கள் அனைவரும் பாவிகள் என அழைக்கப்படுகின்றார்கள். இப்படி மனிதர்கள் பாபம் எதுவும் செய்யாதபோது, அவர்கள் பாவிகள் என்று அழைக்கப்படுவது எண்ணற்ற குழப்பங்களை விளைவித்தது.
ஆனால் இஸ்லாம் இந்தக் குழப்பங்களுக்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் இதுவரை எந்தக் கோட்பாடும் தராததொரு கோட்பாட்டை தருகின்றது. அதுவே உண்மை நிறைந்தது.
திருமறை பின்வருமாறு கூறுகின்றது: ஆதம், ஹவ்வா ஆகிய இருவரையும் இறைவன் சுவர்க்கத்தில் இருக்கும்படியும், அங்கு கிடைப்பவற்றை புசிக்கும்படியும் பணித்தான். அங்கு அவர்களுக்கு இறைவனின் அருள் கொடைகளை பூரணமாக அள்ளித் தருவதாகவும் இறைவன் வாக்களித்தான். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு தடையையும் விதித்தான். அதாவது அவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட மரத்தின் பக்கம் போகக்கூடாது என்பதே அந்தத்தடை. பின்னர் ஷைத்தான் அவர்களைத் தூண்டி அவர்கள் அந்த சுகவாழ்வை இழக்கும்படிச் செய்தான். பின்னர் அவர்கள் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பூமியில் வாழ்ந்து, இறந்து, மீண்டும் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பப்படக் கூடியவர்களாக ஆயினர். தங்களது தவறை உணர்ந்த அவர்கள் இறைவனிடம் இறைஞ்சினார்கள். இறைவனும் மன்னித்தான். (அல்குர்ஆன்: 2:35-38, 7:19-25, 19:25, 20:117-123)
மேலே விவரித்த சம்பவம் எண்ணற்ற உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மனிதனின் ஆசைகளுக்கு முடிவே இல்லை. சுவர்க்கத்தையே அவன் முன் கொண்டு வந்தால்கூட அவன் திருப்தி அடைவதில்லை. ஆதம், ஹவ்வா ஆகியோர்கள் செய்ததைப்போல் ஒரு தவற்றினை செய்து விடுவது மனிதனின் மனதை மரத்துப்போக செய்வதில்லை. அவன் ஆன்மீக உயர்நிலைகளை அடைய முடியாமல் அவைகள் தடுத்திடுவதில்லை. அவன் ஒழுக்க நிலைகளில் உயர்வதற்கு அவை தடையாக அமைவதுமில்லை. மனிதனின் அறிவும், மனமும் பாவத்தை உணர்ந்து கொள்ளும் தன்மை உடையவையே! அவைகள் அவன் செய்யும் தவறுகளையும் உணர்ந்து கொள்ளும். அவனது குறைகளையும் அவைகள் உணர்ந்து கொள்ளும். இவற்றையெல்லாம் விட அவை யாரிடம் அவன் தனது தவறுகளை பொறுத்தருளும்படி இறைஞ்சிட வேண்டும் என்பதை உணர்த்தும் தன்மை படைத்தவைகளே! அதேபோல் யாரிடம் மனிதன் தனக்கு நேர்வழி காட்டும்படி கோரிட வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லி விடும் மனிதனின் அறிவும், மனமும். Continue reading
அத்தியாயம் – 2 மதம் அல்லது மார்க்கம்.
மனித வரலாற்றை சற்று உற்று நோக்குவோமானால், வரலாறு முழுவதும் மதம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது.
அடுத்தவர்களை சுரண்டுவதற்காகவும், பலரை ஏய்திடவுமே மதத்தை சிலர் பயன்படுத்தினர். சிலர் தாங்கள் கொண்டிருந்த மாச்சரியங்களை மறைத்திடவும், தாங்கள் இழைத்த கொடுமைகளை நியாயப்படுத்திடவுமே மதத்தை பயன்படுத்தினர். சிலர் அதிகாரத்தை கைப்பற்றிடவும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்திடவும், கற்றவர்களை, பாமரர்களையும் ஏய்த்திடவுமே மதத்தை பயன்படுத்தினர். மதத்தின் பெயரால் பல அநீதியான போர்கள் நடத்தப்பெற்றன. சிந்தனை சுதந்திரமும், மனசாட்சிப்படி காரியமாற்றிடும் சுதந்திரமும் பறிக்கப்பட்டன. விஞ்ஞானமும், விஞ்ஞானிகளும் சித்திரவதை செய்யப்பட்டனர்.
மதத்தின் பெயரால் மனிதனின் அடிப்படை சுதந்திரங்கள் அனைத்தும் நசுக்கப்பட்டன. மனிதனின் சுயமரியாதையும், கண்ணியமும் தகர்த்தெறியப்பட்டன. மதத்தின் பெயரால் மனிதர்கள் செய்த பித்தலாட்டங்கள் மனித இனத்திற்கு எண்ணற்ற இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மதத்திற்கே பல இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலே நாம் சொன்னவைகளெல்லாம் வரலாற்று உண்மைகளாகும். இவற்றை எவரும் மறுத்திட முடியாது. நாம் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். ‘மதம்’ என்பதை இப்படித்தான் அணுக வேண்டுமா? மதத்தின் உண்மையான பணிகள் இவைதானா? இந்தக் கேள்விகளுக்கான பதில், அழுத்தம் திருத்தமாக ‘இல்லை’ என்பதே ஆகும்.
இந்த உலகில் எண்ணற்ற மதங்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவைகள் ஒவ்வொன்றும் தானே உண்மையான மதம் எனக் கூறுகின்றன. ஒவ்வொரு மதமும் தான் இறைவனிடமிருந்து, மனிதனின் வழிகாட்டுதலுக்காக வந்ததே எனக் கூறுகின்றது. இப்படி ஒவ்வொரு மதமும் தானே உண்மையானது எனக் கூறுவதால் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவைகளை கேள்விப்படுகின்ற மக்கள் ஒரு விரக்திக்கே ஆளாகி இருக்கின்றார்கள். இந்த முரண்பாடுகள் மக்கள் மனதில் மதத்தைப் பற்றி ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மதங்கள் அவைகள் சொல்லும் முரண்பட்ட தத்துவங்கள், இவைகளெல்லாம் மனித இனத்தை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக துண்டுபடுத்தி விட்டன. எந்தக் கொள்கையின் பக்கமும் சாயாமல் நடுநிலையில் நின்று பார்ப்பவர்கள். ஒருவித குழப்பத்திற்கே ஆளாகியுள்ளனர். சில நேரங்களில் இவர்கள் எல்லா மதத்தையும் ஒட்டுமொத்தமாக வெறுக்கின்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
’மதம்’ என்று இஸ்லாம் கூறுவது மிகவும் விசாலமானதொரு பொருளைக் கொண்டதாகும். Continue reading
அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.
நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு யாரையும் படைத்து விடுவதில்லை. நமக்கு இறைவனால் தரப்பட்டுள்ள உயிரும் வாழ்வும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அறிவுடைய மனிதர்கள் எவரும் இவைகளை விரயம் செய்திட மாட்டார்கள். சிந்திக்கும் திறன் படைத்த எவரும் இவைகளை பலனற்றதாக ஆக்கிட மாட்டார்கள்.
சில நேரங்களில் சிலர், விரக்தியின் காரணமாக தங்களுடைய பொன்னரிய உயிரை தற்கொலை மூலம் மாய்த்துக்கொள்ள முற்படுவதை பார்க்கிறோம். இவர்களும்கூட கடைசி நேரத்தில் மீண்டும் ஒருமுறை உயிர் பிழைத்து வாழும் வாய்ப்பு கிடைத்திடாதா என அங்கலாய்க்கக் காண்கின்றோம்.
மனிதனுக்கு உயிரை வழங்கியவன் வல்லான் இறைவனே! அதனை திரும்ப எடுத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு. அந்த ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அதனை அழிக்கும் உரிமை இல்லை. இதனாலேயே தான் இஸ்லாம் எல்லாவிதமான தற்கொலைகளுக்கும் தடை விதித்துள்ளது. ஒரு உயிர் உடலைப் பிரிந்து செல்லும்போது பொறுமையோடும் அமைதியோடும் இருக்கும்படி வேண்டுகின்றது இஸ்லாம். Continue reading