கூரான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது….

1679. ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!” என்று கூறினார்கள்.

புஹாரி :451 ஜாபிர் (ரலி).

1680. உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நம்முடைய பள்ளிவாசலில் அல்லது நம்முடைய கடைவீதியில் நடந்து சென்றால், அவர் ‘அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்’ அல்லது ‘தம் கைக்குள் (அதன் முனையை) மூடி வைத்துக் கொள்ளட்டும்’. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறி விடக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7075 அபூ மூஸா (ரலி) .

1681. நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7072 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on கூரான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது….

முகத்தில் தாக்காதே.

1678. உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2559 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on முகத்தில் தாக்காதே.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்.

1676. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6114 அபூ ஹுரைரா (ரலி).

1677. நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்” என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், ‘நான் பைத்தியக்காரன் அல்லன்” என்றார்.

புஹாரி :6115 ஸூலைமான் பின் ஸூரத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கோபத்தைக் கட்டுப்படுத்துதல்.

உண்மையின் மகத்துவம்.

1675. உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும்; தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6094 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on உண்மையின் மகத்துவம்.

அழிக்கப்பட்ட ஊர்களை பிரயாணம் செய்து பாருங்கள் என்று அல்லாஹ் கூறுவது எதற்காக?

கேள்வி எண்: 101. அழிக்கப்படட ஊர்களை பிரயாணம் செய்து பார்க்கலாம் என்று கருத்துடைய குர்ஆன் கூறும் வசனங்கள் சிலவற்றைக் கூறுக. Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on அழிக்கப்பட்ட ஊர்களை பிரயாணம் செய்து பாருங்கள் என்று அல்லாஹ் கூறுவது எதற்காக?

சமாதானம் நாடி.

1674. (பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2692 உம்மு குல்தூம் பின்த்து உக்பா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on சமாதானம் நாடி.

விசுவாசியைத் திட்டாதே.

1673. நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!” என்று கூறியதை செவியுற்றேன்.

புஹாரி :6361 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on விசுவாசியைத் திட்டாதே.

அருவருப்பான பேச்சுகளைத் தவிர்த்தல்.

1672. ஒருவர் (எங்கள் வீட்டுக்குள் வர) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று (அவரைப் பற்றிச்) கூறினார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது, (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்; பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?’ என்று கேட்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், ‘ஆயிஷா! மக்கள் எவரின் அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு ஒதுங்கிறார்களோ அவரே மக்களில் தீயவராவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)” என்றார்கள்.

புஹாரி : 6054 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அருவருப்பான பேச்சுகளைத் தவிர்த்தல்.

உங்கள் வாய்களால் கூறும் வெற்று வார்த்தைகள் அல்லாஹ்விடம் நீதமானவை அல்ல!

33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், (நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும்) முனாஃபிக்களுக்கும் (நயவஞ்சகர்களுக்கும்) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.

33:2. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை – உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவிகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய(பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

33:7.
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹூ, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.

33:8.
எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையைப் பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.

அல் குர்ஆன்: அல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உங்கள் வாய்களால் கூறும் வெற்று வார்த்தைகள் அல்லாஹ்விடம் நீதமானவை அல்ல!

விசுவாசிகள் ஒருவர் மற்றவரை நேசிப்பர்.

1670. ”ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறை நம்பிக்கையாளர் இன்னொரு இறை நம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்” என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

புஹாரி 481 அபூமூஸா (ரலி).

1671. ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6011 நுஅமான் இப்னு பஷீர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on விசுவாசிகள் ஒருவர் மற்றவரை நேசிப்பர்.