1679. ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!” என்று கூறினார்கள்.
1680. உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நம்முடைய பள்ளிவாசலில் அல்லது நம்முடைய கடைவீதியில் நடந்து சென்றால், அவர் ‘அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்’ அல்லது ‘தம் கைக்குள் (அதன் முனையை) மூடி வைத்துக் கொள்ளட்டும்’. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறி விடக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1681. நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.