இது பெருமை பொருந்திய குர்ஆன்!

2:176. நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.

4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, ‘நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!’ என்று கூறி, ‘ராயினா’ என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் ‘நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிபட்டோம்;’ (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும் மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும் – ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பி விடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) ‘அஸ்ஹாபுஸ் ஸப்து’ என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப்பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும்.

6:39. நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

16:105. நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.

25:30. ‘என்னுடைய இறைவா! நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்’ என்று (நம்) தூதர் கூறுவார்.

25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவி புரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.

25:32. இன்னும்: ‘இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை’ என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.

25:33. அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும் (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.

25:34. எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழிகெட்டவர்கள்.

86:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

86:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூலில் – பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இது பெருமை பொருந்திய குர்ஆன்!

குழந்தைகளின் மரணத்தில் பொறுமை காத்தவர் நிலை.

1689. ”ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1251 அபூஹூரைரா (ரலி).

1690.இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்து விடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்” என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, ‘உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்” என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலுமா?’ என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ‘ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்” என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.

புஹாரி : 7310 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1691. ‘பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”

புஹாரி : 102 அபூ ஹுரைரா(ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on குழந்தைகளின் மரணத்தில் பொறுமை காத்தவர் நிலை.

பெண் குழந்தைகள் நரகின் திரை.

1688. ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ‘இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள்.

புஹாரி :1418 ஆயிஷா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on பெண் குழந்தைகள் நரகின் திரை.

கீழ்வரும் ஹதீஸுடைய தராதரத்தைக் குறித்து ஹதீஸ் கலை நிபுணர்களின் கூற்றை வரைக.

கேள்வி எண்: 102. கீழ்வரும் ஹதீஸுடைய தராதரத்தைக் குறித்து ஹதீஸ் கலை நிபுணர்களின் கூற்றை வரைக. Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on கீழ்வரும் ஹதீஸுடைய தராதரத்தைக் குறித்து ஹதீஸ் கலை நிபுணர்களின் கூற்றை வரைக.

நல்ல கெட்ட நண்பர்கள் பற்றி….

1687. நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :5534 அபூ மூஸா (ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நல்ல கெட்ட நண்பர்கள் பற்றி….

நல்லவைக்குப் பரிந்துரை செய்.

1686. நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), ‘(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்” எனக் கூறினார்கள்.

புஹாரி :1432 அபூமூஸா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நல்லவைக்குப் பரிந்துரை செய்.

அண்டை வீட்டார் நலம் பேணுதல்.

1684. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6014 ஆயிஷா (ரலி) .

1685. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6015 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அண்டை வீட்டார் நலம் பேணுதல்.

மறுமை நாள் (அத்தியாயம்-2)

மறுமை வாழ்வென்பது பகுத்தறிவு ரீதியான உண்மை என வாதிக்கும் அல்குர்ஆன் அந்த நம்பிக்கையை இரு சிந்தனைகள் ஊடாக முன்வைக்கிறது. ஒன்று இறை நம்பிக்கையோடு தொடர்பு படுகிறது. இங்கு அவ்விரு சிந்தனைகளும் விளக்கப்படுகிறன:

(1) இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும்:

அல்குர்ஆன் மறுமை நாள் நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என விளக்குகிறது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்பவன் இதனைப் படைத்த ஒரு மாபெரும் படைப்பாளன் உள்ளான் என நம்புகிறான். அந்த இறை நம்பிக்கையின் தர்க்கரீதியான விளைவாக மறுமை நாள் நம்பிக்கை அமைகிறது. அதாவது அல்குர்ஆன் காட்டுகின்ற இறைவனை நம்புபவன் மறுமை நாளையும் கண்டிப்பாக நம்ப வேண்டியவனாகிறான்.

அல்லாஹ் ஞானமுள்ளவன், ஆழ்ந்த அறிவு படைத்தவன் என்ற கருத்தை அல்குர்ஆன் பல நூற்றுக்கணக்கான வசனங்களின் ஊடாக முன்வைக்கிறது. அத்தோடு அல்லாஹ் மிகுந்த கண்ணியமும், பெருமையும் கொண்டவன். எனவே அல்லாஹ்வின் செயல்கள் அனைத்தும் இப்பண்புகளைப் பிரதிபலிப்பதாகவே அமையும். அவனது செயல்கள் அறிவு பூர்வமானதாக இருக்கும். ஆழ்ந்த நோக்கம் கொண்டதாக அமையும். விளையாட்டும், கேளிக்கையும் கொண்டதாக அமையாது. மிகுந்த பொறுப்பு வாய்ந்த உயர்ந்த செயல்களாக அவை அமையும். இந்த உண்மையை இப்பௌதீக உலகமும், அதன் இயக்கமும் நன்கு தெளிவு படுத்துகின்றன.

இந்தப் பின்னணியில் மனித வாழ்வு நோக்கப்பட வேண்டும். ஞானமும், அறிவும், கண்ணியமும், பெருமையும், உயர்வும் கொண்ட இறைவன் மனித வாழ்வை பொருளோடும், கருத்தோடும், ஆழ்ந்த நோக்கத்தோடுமே அமைத்திருக்க வேண்டும். எப்பொருளும், கருத்துமின்றி வீணாக, விளையாட்டாக அவன் இந்த மனித வாழ்வை ஆக்கியிருக்க மாட்டான். அது அல்லாஹ்வின் இத்தகைய அடிப்படைப் பண்புகளுக்கே முரணானது. இக்கருத்தை அல்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. அவற்றில் ஒன்றை இங்குத் தருகிறோம்:

“உங்களை நாம் படைத்ததெல்லாம் விணாக, விளையாட்டாகத்தான் எனவும், நீங்கள் எம்மிடம் திரும்பி கொண்டு வரப்படமாட்டீர்கள் எனவும் நினைக்கிறீர்களா? சத்தியமான ஆட்சியாளன் அல்லாஹ் மிக உயர்ந்தவனாவான். அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை. அவன் கண்ணியமிக்க அர்ஷின் அதிபதியாவான்” (முஃமினூன்: 115, 116) Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-2)

தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்.

1683. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை. அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை. அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3482 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்.

பாதையில் துன்பம் தரும் பொருட்களை அகற்றுதல்.

1682. ”ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :652 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on பாதையில் துன்பம் தரும் பொருட்களை அகற்றுதல்.