இறைவனின் கட்டளைகள்.

2:183. ஈமான் (நம்பிக்கை) கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு (விரதம்) விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) (விரதம்) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதை கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக (ஃபித்யாவாக) ஒரு ஏழைக்கு (மிஸ்கீன்) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

2:185. ரமளான் (நோன்பு) மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.

2:186. (நபியே) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்: “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்னை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

2:187. நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்தைத் தேடிக் கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாக தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில் – தியானத்தில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசுமாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறைவனின் கட்டளைகள்.

மர்யமும் (கன்னி மேரி) மகனும் (ஏசு) மனிதர்களே.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (வான தூதர்கள்) மர்யமே!

நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்.

உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும்

உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக)

உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் (என்றும்)

3:43. “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜூது செய்தும் (சிர

வணக்கம்
) ருகூஃ செய்தும் (குனிந்து வணங்குதல்) வணக்கம்

செய்வீராக” (என்றும்) கூறினர்.

3:44. (நபியே (தூதரே) இவை(யெல்லாம்) மறைவானவற்றில்

நின்றுமுள்ள விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம்

அறிவிக்கின்றோம். மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க

வேண்டுமென்பதைப் பற்றி (குறிபார்த்தறிய) தங்கள் எழுது

கோல்களை அவர்கல் எறிந்த போது நீர் அவர்களுடன்

இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர்

அவர்களுடன் இருக்கவில்லை.

3:45. மலக்குகள் (வான தூதர்கள்) கூறினார்கள் “மர்யமே!

நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக்

கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங்

கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா (ஏசு)

என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும்

கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில்

ஒருவராகவும் இருப்பார்.

3:46. “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்

போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர்

மக்களுடன் பேசுவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய)

சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”

3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார் “என் இறைவனே! என்னை ஒரு

மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்

உண்டாக முடியும்” (அதற்கு) அவன் கூறினான் “அப்படித்தான்

அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு

காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’

எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”



3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும்,

தவ்ராத்தையும், இன்ஜீலையும், (இறைவனால் அருளப்பட்ட

குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள்
) கற்றுக் கொடுப்பான்.

4:172. வேதத்தையுடையோரே! நீங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து

செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர

(வேறெதையும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய

ஈஸா (ஏசு) அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான். இன்னும் (“குன்”

ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால்

உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால்

போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர்

ஆன்மா தான்
. ஆகவே, அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள்

மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளுங்கள். இன்னும்,

(வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள்
– (இப்படி

கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள். (இது) உங்களூக்கு

நன்மையாகும் – ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்

ஒருவன் தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து

அவன் தூய்மையானவன்
. வானங்களிலும், பூமியிலும்

இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள்

அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே

போதுமானவன்.

அல் குர்ஆன்

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மர்யமும் (கன்னி மேரி) மகனும் (ஏசு) மனிதர்களே.

இவர் தான் மர்யம் (கன்னி மேரி)

3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.

3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் – மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

3:35. இம்ரானின் மனைவி “என் இறைவனே என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து ஏற்று கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்.

3:36. (பின் தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையை பெற்றதும் “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண் பெண்ணை போலல்ல. (மேலும் அந்த தாய் சொன்னாள்) ” அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகிறேன்.

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்னையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார். ” இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள் (பதில்) கூறினாள்.

3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது (வணங்குதல்) கொண்டிருந்த போது, மலக்குகள் (வான தூதர்கள்) அவரை சப்தமாக அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் (தூதராகவும்) இருப்பார்” எனக் கூறினர்.

3:40.அவர் கூறினார் “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும், அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.

3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும், மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.

அல் குர்ஆன்: ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இவர் தான் மர்யம் (கன்னி மேரி)

கடவுளைப் பற்றி அறிவித்தவரை கடவுளாக்கிய விந்தை.

5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே (ஏசு நாதர்) ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் (தீர்ப்பு நாளில்) கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறி இருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

5:117. “நீ எனக்கு கட்டளை இட்டப்படி (மனிதர்களை நோக்கி), ‘என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);

5:118. “(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனாகவும், ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

5:119. அப்போது அல்லாஹ், ” இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

5:120. வானங்களுடையவும், பூமியுனுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.

அல் குர்ஆன்: சூரா அல் மாயிதா (உணவுத் தட்டு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கடவுளைப் பற்றி அறிவித்தவரை கடவுளாக்கிய விந்தை.

புறக்கணிப்பவனின் மறு உலக நிலை.

20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம (தீர்ப்பு) நாளில் குருடனாகவே எழுப்புவோம்”

20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் (உலக வாழ்வில்) பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.



20:126. (அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன; அவற்றை நீ மறந்து விட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று (அல்லாஹ்) கூறுவான்.

20:127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் (தீர்ப்பு நாளின்) வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.

20:128. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு (ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. அல் குர்ஆன்: சூரா; தாஹா

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on புறக்கணிப்பவனின் மறு உலக நிலை.

அ(ல்லாஹ்)வனே அனைத்துக்கும் சொந்தக்காரன்.

6:162. (நபியே) (தூதரே) நீர் கூறும்: என்னுடைய

தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும்,

(அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய

மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய

அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. “அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக்

கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு)

வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான்

முதன்மையானவன் (என்றும் கூறும்)

6:164. அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான்

இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப்

பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் –

பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை

தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை

மற்றோர் ஆத்மா சுமக்காது.
பின்னர் நீங்கள் (அனைவரும்)

உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல

வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம்

செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு

அறிவிப்பான் என்று (நபியே) நீர் கூறும்.

6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக

ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில்

உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை

விடப் பதவிகளில் உயர்த்தினான் – நிச்சயமாக உம்

இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன்

நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம்(கால்நடைகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அ(ல்லாஹ்)வனே அனைத்துக்கும் சொந்தக்காரன்.

உலகைப் படைத்தவனின் கூற்று.உற்று நோக்குங்கள்

6:95. நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் – எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?

6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.

6:97. அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் வழியறிந்து செல்கிறீர்கள் – அறியக் கூடிய மக்களூக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவவாறு விவரிக்கிறோம்.

6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, ( பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.

6:99. அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரித்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன; திராட்சை தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் (நம்பிக்கை) கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. அல் குர்ஆன்: சூரா அல் அன்ஆம் (கால்நடைகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உலகைப் படைத்தவனின் கூற்று.உற்று நோக்குங்கள்

படைத்தவனின் பரிவு.

6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படா செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே (அல்லாஹ்) படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குறிய (கடமையான) பாகத்தைக் (ஏழைகளுக்கு) கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள் – நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

6:145. (நபியே) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்பந்திக்கப்பட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்து விட்டால் – (அவர் மீது குற்றமாகாது; ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

அல் குர்ஆன்: சூரா அன்ஆம் (கால்நடைகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on படைத்தவனின் பரிவு.

அநியாயக்கார ஊராரே உஷார்!

மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்: அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம்.

ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்த போது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும்,உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).

(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.

அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தளிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்க வில்லை.



வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைகொண்டு, அசத்தித்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்து விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களூக்கு கேடுதான்.

அல்குர்ஆன்:அத்தியாயம்-21 வசனம் 11 லிருந்து 18 வரை.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அநியாயக்கார ஊராரே உஷார்!

ஒழுக்கங்கெட்ட ஓரிணபுணர்ச்சியாளர்கள்.

11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் (இறைதூதர்) வந்த போது (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார். (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக “இதுநெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.

11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள் இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு) ப் பரிசுத்தமானவர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமான படுத்தாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.

11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர். நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.

11:80. அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்க போதுமான) வலிமையுள்ள ஆதரவின் பால் நான் ஒதுங்க வேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.

11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள் “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கிறோம். நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது. எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும் போதேஉம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியை தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்து கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?



11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்து விட்ட போது. நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.



11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன. (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. அல்குர்ஆன்: சூரா-அல் ஹூது



26:165. “உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்டநோக்கோடு) நெருங்குகின்றீர்களா?

26:173. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது. அல்குர்ஆன்: சூரா- அஷ்ஷூஃரா

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஒழுக்கங்கெட்ட ஓரிணபுணர்ச்சியாளர்கள்.