சிறந்த படைப்பான மனிதா சிந்தித்துப் பார்!

28:71. (நபியே! – தூதரே) நீர் கூறுவீராக: “கியாம

(இறுதி) நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை

நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால்,

உங்களுக்கு (ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு

வரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன்

உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?

28;72. “கியாம நாள் வரை உங்கள் மீது அல்லாஹ்

பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால்,

நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு

உங்களுக்குஇஅரவைக் கொண்டு வரக்கூடியவன்

அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள்

(சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள்

நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!

28:73. இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால்

(அருளால்) உங்களுக்கு இரவையும் பகலையும்

உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும்

பொருட்டு, (பகல்) நீங்கல் அதில் அவன்

அருளைத்தேடும் பொருட்டும், (உண்டாக்கினான்.

இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

அல் குர்ஆன்: அல் கஸஸ் (வரலாறுகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சிறந்த படைப்பான மனிதா சிந்தித்துப் பார்!

சிந்திக்கும் மக்களுக்கு!

32:27. அவர்கள் (இதையும்) கவனிக்க வில்லையா – நிச்சயமாக நாமே (அல்லாஹ்வே) வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?

அல் குர்ஆன்: அஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சிந்திக்கும் மக்களுக்கு!

அல்லாஹ்வையன்றி வேறு கடவுள் உண்டா? பதில் தாருங்கள்.

27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.

27:61. இந்த பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும், இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை!) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்து பார்ப்பது மிகக் குறைவேயாகும்.

27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள்மாரிக்கு (மழைக்கு) முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? – அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.

27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.

27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப் படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

27:66. ஆனால் மறுமையைப் (இறுதி நாளைப்) பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.

அல் குர்ஆன்: அல் நம்ல் (எறும்புகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வையன்றி வேறு கடவுள் உண்டா? பதில் தாருங்கள்.

தர்மத்தின் நியதி.

2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன்.

2: 262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லி காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குறிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடைய மாட்டார்கள்.

2:263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன். மிக்க பொருமையாளன்.

2:264. நம்பிக்கை கொண்டோர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்தைச் சொல்லி காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் காஃபிரான (நிராகரிப்பவரை) மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை.

2:265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், த்ங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமுள்ள (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெருமழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும் அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடிமழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.

2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரிச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கின்றது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்து விடுகிறது. அவருக்கு (வலுவில்லாத) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாமபலாக்கி) விடுகிறது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.

2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தருமங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தருமங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண்மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசுமாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தர்மத்தின் நியதி.

தர்மமும், மனிதனும்.

2:264. நம்பிக்கை கொண்டோர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்தைச் சொல்லி காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் காஃபிரான (நிராகரிப்பவரை) மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை.

அல் குர்ஆன்: அல் பகரா (பசுமாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தர்மமும், மனிதனும்.

நேர்வழியை தேடுவோர் சிந்திக்கட்டும்!

4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

4:174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது. தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.

அல் குர்ஆன்: அன்னிஸாவு (பெண்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நேர்வழியை தேடுவோர் சிந்திக்கட்டும்!

தர்மத்தின் நிலைபாடு

2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தருமங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தருமங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண்மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசுமாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தர்மத்தின் நிலைபாடு

உலகின் நிலையான அரசன்.

2:255. அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன் மகிமை மிக்கவன்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசு மாடு)

17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அ(ல்லாஹ்)வனை துதி செய்து கொண்டு இருக்கின்றனர்; இன்னும் அ(ல்லாஹ்)வன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அ(ல்லாஹ்)வன் பொறுமையுடையோனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

அல் குர்ஆன்: பனீ இஸ்ராயீல்.(இஸ்ராயீலின் சந்ததிகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உலகின் நிலையான அரசன்.

காரணக் காரியம்.

10:5. அவன் (அல்லாஹ்) தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்ளும் பொருட்டு (ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

10:6. நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்) திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

அல் குர்ஆன்: அல் யூனுஸ்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on காரணக் காரியம்.