சிறந்த படைப்பான மனிதா சிந்தித்துப் பார்!

28:71. (நபியே! – தூதரே) நீர் கூறுவீராக: “கியாம

(இறுதி) நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை

நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால்,

உங்களுக்கு (ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு

வரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன்

உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?

28;72. “கியாம நாள் வரை உங்கள் மீது அல்லாஹ்

பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால்,

நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு

உங்களுக்குஇஅரவைக் கொண்டு வரக்கூடியவன்

அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள்

(சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள்

நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!

28:73. இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால்

(அருளால்) உங்களுக்கு இரவையும் பகலையும்

உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும்

பொருட்டு, (பகல்) நீங்கல் அதில் அவன்

அருளைத்தேடும் பொருட்டும், (உண்டாக்கினான்.

இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!

அல் குர்ஆன்: அல் கஸஸ் (வரலாறுகள்)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.