6:95. நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் – எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
6:97. அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் வழியறிந்து செல்கிறீர்கள் – அறியக் கூடிய மக்களூக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவவாறு விவரிக்கிறோம்.
6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, ( பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
6:99. அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரித்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன; திராட்சை தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் (நம்பிக்கை) கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. அல் குர்ஆன்: சூரா அல் அன்ஆம் (கால்நடைகள்)
வணக்கம் தோழரே,
இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்வதற்கு உங்கள் வலைக்குறிப்புக்கள் பல வழிகளிலும் எனக்கு உதவிக்கொண்டிருக்கின்றன.
ஒரு சிறிய நெருடல்..
இறைவன், அவன், படைத்தவன் போன்ற சொற்களை பயன்படுத்த்வது அவ்வளவு நன்றாக இல்லை.
இறைவன் என்ன ஆணா?
இறைவன் ஆணாகத்தான் இருக்கவேண்டுமா?
இறைவன் என்பது எம்மை மீறிய சக்தி என்றால் அதை ஏன் ஆணாகவே உருவகிக்கவேண்டும்?
உலகைக்கடந்து, புலனாகோபவற்றின் பொய்த்தோற்றங்களைக்கடந்து சிந்ந்திக்க முனைப்புறுத்தும் போது,
பால் ரீதியான வட்டங்களை கடக்கவேண்டாமா?
எவ்வளவுகாலம் இந்த ஆண்மைய சிந்தனை?
அன்பு சகோதரர் மயூரன் அவர்களுக்கு ஜாஃபர் எழுதியது; வேதத்தில் கடவுள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ ஒரு இடத்திலும் குறிப்பிட வில்லை. தமிழில் கடவுளை குறிப்பிடுவதற்கென்று தனியாக வார்த்தை ஏதும் வைத்து இருக்கிறோமா? இருந்தால் தயவு செய்து அறிவித்து தாருங்கள். இது சம்பந்தமாக மேலதிக விளக்கம் தேவை என்றால் சொல்லுங்கள். முயற்சிப்போம்.இன்சாஅல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)