அநியாயக்கார ஊராரே உஷார்!

மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்: அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம்.

ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்த போது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

“விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும்,உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).

(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.

அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தளிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்க வில்லை.



வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைகொண்டு, அசத்தித்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்து விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களூக்கு கேடுதான்.

அல்குர்ஆன்:அத்தியாயம்-21 வசனம் 11 லிருந்து 18 வரை.

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.