வீணான நம்பிக்கைகள்

அல்லாஹ் பலனை ஏற்படுத்தாத பொருட்களில் பலன் இருப்பதாக நம்புதல்

இதுவும் ஷிர்க்காகும். உதாரணமாக சிலர் ஜோதிடர் அல்லது சூனியக்காரனின் ஆலோசனையின் பேரில் அல்லது முன்னோர்களின் வழக்கத்தின் அடிப்படையில் கயிறு, உலோக வளையம், சிப்பி, தாயத்து, தகடு போன்றவற்றில் பலன் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் கண் திருஷ்டிக்காகவும், துன்பம் நீங்குவதற்காகவும் அது வராமல் தடுப்பதற்காகவும் அவற்றை தங்களுடைய மற்றும் தங்கள் குழந்தகளுடைய கழுத்துக்களிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் கட்டிக் கொள்கிறார்கள். அல்லது தங்கள் வீடுகளில், வாகனங்களில் மாட்டிக் கொள்கிறார்கள். மேலும் இதே நோக்கத்திற்காக பல வகையான கற்கள் பதித்த மோதிரங்களையும் அணிகிறார்கள். இவையனைத்தும் சந்தேகமில்லாமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் – நம்பிக்கை வைப்பதற்கு எதிரானவையாகும். இவை மனிதனுக்கு பலவீனத்தையே அதிகப்படுத்தும். மட்டுமல்ல ஹராமானவற்றைக் கொண்டு மருத்துவம் செய்வதைச் சார்ந்தவையாகும் இவை.

இத்தகைய தாயத்து, தகடுகளில் பெரும்பாலானவற்றில் வெளிப்படையான ஷிர்க்கான வாசகங்களும் சில ஜின், ஷைத்தான்களிடம் பாதுகாப்புத் தேடும்படியான வாசகங்களுமே உள்ளன. அல்லது புரியாத வரைபடங்கள் அல்லது விளங்க முடியாத எழுத்துக்களே இருக்கின்றன. ஓதிப்பார்க்கின்ற சிலர் தாயத்து தகடுகளில் குர்ஆன் வசனங்களோடு ஷிர்க்கான வாசகங்களையும் சேர்த்து எழுதுகின்றனர். இன்னும் சிலரோ திருக்குர்ஆன் வசனங்களை சிறுநீர், மாதவிடாய் இரத்தம் போன்ற அசுத்தங்களின் மூலம் எழுதுகின்றனர். ஆக மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தொங்க விட்டுக் கொள்வது அல்லது கட்டிக் கொள்வது ஹராமாகும். ‘யார் தாயத்தைக் கட்டித் தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இணைவைத்து விட்டார்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: அஹ்மத்.

இவ்வாறு செய்பவன் – அல்லாஹ்வை விடுத்து இந்த தாயத்து தகடுகளும் நன்மை, தீமை அளிக்கக் கூடியவை என நம்பினால் அவன் இணை வைத்தவன் ஆவான். மிகப் பெரும் ஷிர்க்கைச் செய்து விட்டவனாவான். நன்மை, தீமை அளிப்பதற்கு இவையும் ஒரு காரணம் என நம்பினால் (அல்லாஹ் அப்படி ஏற்படுத்தவில்லை என்பது தனி விஷயம்) அவன் சிறிய இணைவைப்பைச் செய்து விட்டவனாவான். இது காரண காரியங்களில் இணை வைத்தல் என்பதில் அடங்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on வீணான நம்பிக்கைகள்

சிருஷ்டிகளைக் கொண்டு பாதுகாவல் தேடலாமா?

படைப்பினங்களைக் கொண்டு ஆணையிடுவது விலக்கப்படுவது போல அவர்களைக் கொண்டு பாதுகாவல் தேடுவதும் விலக்கப்பட்டுள்ளது. பாதுகாவல் தேடுவதற்கு அல்லாஹ்வையும், அவன் திருநாமங்களையும் இலட்சணங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களால் பாதுகாவல் தேட மாட்டாது. சிருஷ்டிக்கப்படாத நிரப்பமான வாக்கியங்களைக் (உரைகளை) கொண்டு நபியவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். ‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி’ என்று கூறியிருக்கிறார்கள். இறைவனின் திருவசனங்கள் சிருஷ்டிக்கப்பட்டவையல்ல என்பதற்கு நபிகளின் இந்த ஹதீஸ் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , | Comments Off on சிருஷ்டிகளைக் கொண்டு பாதுகாவல் தேடலாமா?

சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யக் கூடாது. அப்படி சத்தியம் செய்தாலும், அது நிறைவேறாது. இது அறிஞர்களின் ஏகமனதான தீர்ப்பாகும். மலக்குகள், ஷெய்குமார்கள், மன்னர்கள், கஃபா ஷரீஃப் இவர்களைக் கொண்டெல்லாம் ஆணையிட்டால் அந்த ஆணை நிறைவேறாமலாகி விடும். ஷரீஅத்தும் இத்தகைய சத்தியங்களை விலக்குகிறது. இவ்விலக்கல் ‘தஹ்ரீமுடையவும், அல்லது தன்ஸீஹுடையவும்’ அதாவது கடுமையான விலக்கலாக இருக்க இடம்பாடுண்டு. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?

நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை வைத்தல்

அதாவது சம்பவங்களிலும் மனிதர்களின் வாழ்விலும் நட்சத்திரங்களின் தாக்கம் இருப்பதாக நம்புவது. இதுவும் ஷிர்க்காகும்.

ஸைத் பின் ஹாலித் (ரலி) அறிவிப்பதாவது: ‘ஹுதைபிய்யா எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி, உங்கள் இறைவன் என்ன கூறினான் தெரியுமா? என வினவினார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்! என தோழர்கள் கூறினர். பிறகு, ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்புபவர்களும் என்னை மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் அருளாலும் அவனுடைய கருணையாலும் தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் என்னை நம்பியவரும் நட்சத்திரத்தை நிராகரித்தவரும் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் என்னை நிராகரித்தவரும் நட்சத்திரத்தை ஏற்றுக் கொண்டவரும் ஆவார்’ என இறைவன் கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

பத்திரிக்கைகளில் வரக்கூடிய ராசிபலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையைச் சேர்ந்தது தான். அதிலுள்ள நட்சத்திர மற்றும் வானசாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இணை வைத்தவனாவான். ராசிபலனை ஒருவன் ஆறுதலுக்காகப் படித்தால், அவன் பாவியாவான். ஏனெனில் ஷிர்க்கான விஷயங்களைப் படித்து ஆறுதலடைவது கூடாததாகும். இன்னும் சொல்வதானால் சில வேளை ஷைத்தான் அவனுடைய உள்ளத்தில் ராசிபலனைப் பற்றிய நம்பிக்கையை விதைத்து விடுவான். பிறகு அது ஷிர்க்கில் வீழ்வதற்கு சாதனமாக அமைந்து விடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை வைத்தல்

சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்

பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும்.

சூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: “(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” (2:102)
மேலும் கூறுகிறான்: “சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்” (20:69) சூனியம் பார்க்கச் செல்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரிப்பவர் – காஃபிர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று கூறி எச்சரிக்காத வரையில் எவருக்கும் அந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை” (2:102)

சூனியக்காரன் பற்றிய சட்ட நிலை, அவனைக் கொலை செய்ய வேண்டும். அவனுடைய சம்பாத்தியம் விலக்கப்பட்டது, மோசமானது என்பதாகும். அறிவீனர்களும் அக்கிரமக்காரர்களும் பலவீனமான ஈமான் உடையவர்களும் சிலரின் மீது வரம்பு மீறுவதற்காக அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்காக சூனியம் செய்ய சூனியக்காரர்களிடம் செல்கிறார்கள்.

மேலும் மக்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சூனியத்தை எடுப்பதற்காக சூனியக்காரர்களிடம் செல்வதன் மூலம் ஹராமான செயலைச் செய்கிறார்கள். இத்தகையவர்கள் மீது கடமை என்னவெனில் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் போன்ற அவனுடைய வார்த்தைகள் மூலம் நிவாரணம் தேட வேண்டும்.

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இப்படியிருக்க ஜோதிடம் பார்ப்பவன், குறி பார்ப்பவன் ஆகிய இருவரும் மறைவான விஷயங்களைத் தாம் அறிவதாக வாதிட்டால் அவ்விருவரும் மகத்துவமிக்க அல்லாஹ்வை நிராகரிப்பவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் பணம் பறிப்பதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக அவர்கள் மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பீங்கானில் நீர் உற்றி பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.

இவர்கள் ஒரு உண்மை கூறினால் 99 முறை பொய் கூறுவார்கள். கற்பனைகளை அள்ளி வீசக்கூடிய இவர்கள் கூறுவது எந்த ஒரு தடவை உண்மையாகிறதோ அதை மட்டும் இந்த அப்பாவி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காகவும், திருமணம், வியாபாரம் போன்ற காரியங்களில் நன்மை, தீமையை அறிந்து கொள்வதற்காகவும், காணாமல் போன பொருட்களை கண்டு பிடிப்பதற்காகவும் அவர்களிடம் செல்கின்றனர்.

இப்படி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை ஒருவன் நம்பினால் அவன் காஃபிராவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான். ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்தவன் ஆவான். (அஹ்மத்)

ஆனால் அவர்களிடம் செல்பவன் மறைவானவற்றை அவர்கள் அறிவார்கள் என நம்பாமல் என்ன சொல்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காகச் செல்வானாயின் அவன் காஃபிராக மாட்டான். மாறாக அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் ஜோசியக்காரனிடம் சென்று எதையேனும் கேட்டால் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ (முஸ்லிம்).

ஆயினும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும் நாற்பது நாட்கள் அவன் தொழுவதும் இப்பாவத்திற்காக தவ்பா செய்வதும் அவன் மீது கடமையாகும்.

இன்ஷா அல்லாஹ் எச்சரிக்கை தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்

ஹராமை ஹலாலாகவும் ஹலாலை ஹராமாகவும் ஆக்குதல்

இன்று பரவலாகக் காணப்படக்கூடிய மிகப் பெரும் இணைவைத்தலுக்கு மற்றொரு உதாரணம் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாகவும் அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராமாகவும் ஆக்குவது. அல்லது ஹலால், ஹராம் ஆக்குகின்ற இந்த உரிமை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கும் இருக்கிறது என்று நம்புவது. அல்லது அஞ்ஞான காலத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்களையும் சட்டங்களையும் நாடிச் சென்று முழு திருப்தியுடனும் விருப்பத்துடனும் வழக்குத் தொடுப்பது. அது ஹலால் – ஆகுமானது என்று கருதுவது. இதனை அல்லாஹ் மிகப் பெரும் குஃப்ர் – இறைநிராகரிப்பு என பின்வரும் வசனத்தில் கூறியுள்ளான்:

“அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் கடவுளராக ஆக்கிக் கொண்டார்கள்” (9:31)

(முன்பு கிறிஸ்தவராக இருந்த) அதிய்யுப்னு ஹாதிம் (ரலி) இந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிடக் கேட்டபோது அந்த மக்கள் அவர்களை (பாதிரிகளையும், துறவிகளையும்) வணங்கிக் கொண்டிருக்கவில்லையே என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சரிதான்! ஆனால் அந்த பாதிரிகளும், துறவிகளும் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலால் என்றும், அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராம் என்றும் கூறும்போது அவர்களும் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்களே! அதுதான் அவர்களை அவர்கள் வணங்குவதாகும். (திர்மிதி, பைஹகி)

மேலும் இணை வைப்பவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது, “அவர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலக்கியவற்றை விலக்கப்பட்டவை என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்கள்…. (9:29) என்று கூறியுள்ளான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) சிலவற்றை விலக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை ஆகுமாக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே! (நபியே! இவர்களிடம்) கேளுங்கள் ‘இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கிறீர்களா?'” (10:59)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on ஹராமை ஹலாலாகவும் ஹலாலை ஹராமாகவும் ஆக்குதல்

ஷபாஅத்தின் வகைகள்

ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் வந்து அவன் முன்னிலையில் ஸுஜுதில் விழுந்து விடுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் திறந்து கொடுக்கின்ற பாராட்டுரைகளால் அல்லாஹ்வைத் துதிப்பார்கள். பின்னர் தலையை ஸிஜுதிலிருந்து உயர்த்த, அல்லாஹ் அறிவிப்புக் கொடுத்து ஷபாஅத்துக்கு அனுமதி வழங்குவான். அதற்கொப்ப நபியவர்கள் ஷபாஅத் செய்வார்கள். (இது பற்றிய முழு விளக்கமும் முன்னர் வந்துள்ளது. ஹயாத்தாக இருக்கும் போது பெருமானாரிடம் பிரார்த்தனையை வேண்டுவதில் ஷிர்க் வந்து விடும் என்று பயப்படுவதற்கில்லை). Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on ஷபாஅத்தின் வகைகள்

நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.


22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

22:66. இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.

22:68. (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.

22:69. நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாமநாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”

22:70. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவுன் சுலபமானது.

22:71. மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.

22:72. இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

அல் குர்ஆன்- ஸூரா அல் ஹஜ்.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

சமாதி வழிபாடு

இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்: “உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (17:23)

அதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். (இதுவும் இணை வைத்தல் ஆகும்) அல்லாஹ் கூறுகிறான்: “துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்” (27:62).

இன்னும் சிலர் நிற்கும் போதும், உட்காரும் போதும், கீழே விழும் போதும், அல்லது துன்பங்கள், துயரங்களில் மாட்டிக் கொள்ளும் போது தங்களுடைய ஷேக் அல்லது அவ்லியாக்களுடைய பெயரை திக்ராக உச்சரிக்கும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். யா முஹம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா முஹ்யுத்தீன், யா ஷாதுலி, யா ரிஃபாஈ என்றெல்லாம் கூறுகின்றனர். மேலும் ஐதுரூஸ், சைய்யதலி பாத்திமா போன்றோரையும் அழைக்கின்றனர். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எவர்களை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள் தாம்” (7:194)

சமாதிகளை வழிபடக்கூடியவர்களில் சிலர் அவற்றை வலம் வருகின்றனர். அவற்றின் மூலைகளையும், படிக்கட்டுகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். மேனியில் தடவிக் கொள்கின்றனர். அங்குள்ள மணலை முகத்தில் பூசிக் கொள்கின்றனர். அவற்றுக்கு ஸஜ்தாவும் செய்கின்றனர். மேலும் அவற்றுக்கு முன் தாழ்ந்து, பணிந்து பயபக்தியுடன் நின்று நோய் குணமாகுதல், பிள்ளைப் பேறு கிடைத்தல், தங்களுடைய காரியங்கள் எளிதாகுதல் போன்ற தங்களுடைய நாட்டங்களையும் தேவைகளையும் கேட்கின்றனர்.

சிலபோது அவ்லியாவே! தலைவரே! நான் தொலை தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வை விடுத்து கியாம நாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்” (46:5) ‘அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.

சிலர் சமாதிகளுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை தரிசிப்பது சம்பந்தமாக ‘தர்ஹாக்களை ஹஜ் (?) செய்வது எப்படி?’ என்பது போன்ற தலைப்புகளில் புத்தகங்களே வைத்திருக்கிறார்கள். (அடக்கஸ்தலங்களை தரிசிப்பது என்னவோ அவர்களுக்கு ஹஜ் செய்வதைப் போல) மற்றும் சிலர், அவ்லியாக்கள் இவ்வுலகை நிர்வகித்து கொண்டிருக்கின்றார்கள். நன்மையோ, தீமையோ செய்ய அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தைக் கொடுத்தால் அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை” (10:107)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்!
Posted in எச்சரிக்கை | Comments Off on சமாதி வழிபாடு

நல்லுபதேசம் எதற்காக?


7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப் பற்றி நீர் அவர்களைக் கேளும் – அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு (த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன – ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) வருவதில்லை – அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.

7:164. (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்தக் கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “உங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகி விடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.

7:165. அவர்கள் எது குறித்து உபதேசிக்கப்பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையை விட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.

7:166. தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, ‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்’ என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

அல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நல்லுபதேசம் எதற்காக?