பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் பிரார்த்திப்பவரை ஒப்பிட்டால் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும். Continue reading
மறைமுகமான பிரார்த்தனை
இணை வைத்தல்
விலக்கப்பட்டவைகளில் பொதுவாகவே இதுவே மிகப் பெரியதாகும். அபூபக்ரா (ரலி) அறிவிப்பதாவது: ‘பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். புகாரி (5976), முஸ்லிம்.
எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான் இணைவைத்தலைத் தவிர. எனவே இணைவைத்தலுக்கு பிரத்தியேகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: “திண்ணமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்” (4:48)
இணை வைத்தலில் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடக்கூடிய மிகப் பெரும் இணை வைத்தலும் உண்டு. இத்தகைய இணை வைத்தலைச் செய்பவர் தவ்பா செய்யாமல் இறந்து விட்டால் நிரந்தர நரகத்தில் வீழ்வார். முஸ்லிம்கள் வாழும் பெரும்பாலான ஊர்களில் பரவலாகக் காணப்படுகின்ற இந்த இணை வைத்தலின் வகைகளை பின்வரும் அத்தியாயங்களில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
கப்றுகளில் பள்ளி கட்டலாமா?
கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள். Continue reading
நிராகரிப்போருக்கான இவ்வுலக கூலி!
34:16. ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிராவகத்தை அவர்கள் மீது அனுப்பினோம். இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளையும் கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களுடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
34:17. அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரிதோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
34:18. இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் போக்குவரத்து (ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; ‘அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்’ (என்று கூறினோம்).
34:19. ஆனால் அவர்கள் ‘எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!’ என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம். இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப் போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
முன்னுரை
எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே! திண்ணமாக அல்லாஹ் சில விஷயங்களைக் கடமையாக்கியுள்ளான். அவற்றைப் பாழாக்கி விடக் கூடாது. சில வரம்புகளை நிர்ணயித்துள்ளான். அவற்றை மீறக் கூடாது. பல விஷயங்களை தடை செய்துள்ளான். அவற்றைக் குலைக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் தன் வேதத்தில் எவற்றை ஹலாலாக்கியுள்ளானோ அவை ஹலாலாகும். எவற்றை ஹராமாக்கியுள்ளானோ அவை ஹராமாகும். எவை பற்றி அவன் ஒன்றுமே கூறவில்லையே அவை சலுகையாகும். அல்லாஹ் அளித்திருக்கும் சலுகையை ஏற்றுக் கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் எதையும் மறப்பவனல்ல. பிறகு “உமது இறைவன் எதையும் மறப்பவனல்ல” (19:64) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி). நூல்: ஹாகிம்.
விலக்கப்பட்டவைகள் தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும். அல்லாஹ் கூறுகிறான்: “இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள்” (2:187). தான் ஏற்படுத்திய வரம்புகளை மீறுபவர்களையும், தான் விலக்கிய காரியங்களைச் செய்பவர்களையும் திண்ணமாக அல்லாஹ் எச்சரித்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: “எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய வரம்புகளை மீறுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நரகில் தள்ளுவான். அதில் அவர்கள் நிலையாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்களுக்கு அங்கு இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது” (4:14).
விலக்கப்பட்டவைகளைத் தவிர்ப்பது கடமையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘நான் உங்களுக்கு எதைத் தடுத்துள்ளேனோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதை முடிந்த அளவு செய்யுங்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.
மனோ இச்சையைப் பின்பற்றக் கூடிய, பலவீனமான உள்ளங்களுடைய, சில குறைமதியுடையோர் தொடர்ந்து ஹராமானவற்றைச் செவியுகிறபோது வெறுப்படைந்து, கடுப்பாகி இவ்வாறு கூறுவதைக் காண முடிகிறது: எல்லாம் ஹராம் தானா? நீங்கள் எதையும் ஹராமாக்காமல் விடுவதில்லை. இதனால் எங்களின் வாழ்வை சோர்வடையச் செய்து விட்டீர்கள், எங்கள் வாழ்க்கையை வெறுப்படையச் செய்து விட்டீர்கள், எங்களுடைய உள்ளங்களில் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டீர்கள். ஹராம் – ஹராமாக்குதல் என்பதைத் தவிர வேறு எந்த வேலையும் உங்களுக்கு இல்லை! இறைமார்க்கம் எளிமையானது. மார்க்க விஷயங்கள் விசாலமானவை. அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் மிக்க கருணை உள்ளவனும் ஆவான்.
இத்தகையவர்களுக்கு நாம் கூறும் பதில் இதுதான்: உண்மையில் அல்லாஹ், தான் நாடியவற்றைச் சட்டமாக்குகிறான். அவனுடைய சட்டத்தை மறுபரிசீலனை செய்பவர் யாரும் கிடையாது. அவன் யாவற்றையும் அறிந்தவன், நுண்ணறிவாளன். அவனே தான் நாடியவற்றை ஹலாலாகவும் தான் நாடியவற்றை ஹராமாகவும் ஆக்குகின்றான். அவனுடைய சட்டத்தை நாம் பொருந்திக் கொள்வதும் அதற்கு முழுமையாக கீழ்படிவதுமே அல்லாஹ்வுக்கு நாம் அடிமை பட்டிருப்பதன் அடிப்படைகளில் உள்ளவையாகும்.
இறைச்சட்டங்கள் யாவும் இறைவனுடைய ஞானம், விவேகம் மற்றும் நீதியின் மூலம் பெறப்பட்டவையாகும். அவை வீண் விளையாட்டானவையல்ல. இதோ அல்லாஹ் கூறுகிறான்: “உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் முழுமையாக உள்ளன. அவனுடைய கட்டளைகளை மாற்றக் கூடியவர் எவருமிலர். அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கிறான்” (6:115)
மேலும் அல்லாஹ் ஹலால் ஹராமுக்கு ஒரு அடிப்படைச் சட்டத்தை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். “(இந்த இறைத்தூதர்) அவர்களுக்குத் தூய்மையானவற்றை ஆகுமாக்குகிறார். தூய்மையில்லாதவற்றை தடை செய்கிறார்” (7:157) என்று அவன் கூறியுள்ளான்.
எனவே தூய்மையானவை ஹலாலாகும். தூய்மையற்றவை ஹராம் ஆகும். ஹராம் ஆக்குகின்ற உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அந்த உரிமை தனக்கு இருப்பதாக எவன் வாதிடுகிறானோ அல்லது வேறொருவருக்கு இருப்பதாக ஒத்துக் கொள்கிறானோ அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக் கூடிய பெரிய அளவிலான நிராகரிப்பை மேற்கொண்ட நிராகரிப்பாளன் ஆவான். அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் அனுமதியளிக்காதவற்றை (தீனின்) இறைமார்க்கத்தின் நெறிமுறைகள் என அவர்களுக்கு வகுத்துக் கொடுக்கும் இணைக் கடவுளர்கள் அவர்களுக்கு உண்டா?” (42:21)
குர்ஆன், ஹதீஸ் பற்றி அறிந்த கல்வியாளர்களைத் தவிர வேறு எவரும் ஹலால், ஹராம் குறித்துப் பேசுவது ஆகுமானதல்ல. எவ்வித ஞானமுமின்றி ஹலால், ஹராம் என்று சட்டம் பேசுகின்றவர்கள் குறித்து கடுமையாக எச்சரிக்கை வந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: “உங்கள் நாவுகள் இன்ன பொருள் ஹலால், இன்ன பொருள் ஹராம் என்று பொய்(சட்டங்)களைக் கூறுவது போன்று அல்லாஹ்வின் மீது பொய்களை ஏற்றிச் சொல்லாதீர்கள்” (16:116)
சந்தேகமின்றி – திட்டவட்டமாக விலக்கப்பட்டவைகள் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளன. சான்றாக, அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) கூறும்! வாருங்கள் இறைவன் உங்களுக்கு விலக்கியிருப்பவற்றை நான் கூறுகிறேன். யாரையும் எதனையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொன்று விடாதீர்கள்…” (6:151)
இவ்வாறே ஹதீஸிலும் விலக்கப்பட்டவைகள் ஏராளம் கூறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மது, செத்தவைகள், பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதை திண்ணமாக அல்லாஹ் தடை செய்துள்ளான். (அபூ தாவூத்) அல்லாஹ் ஒன்றைத் தடை செய்து விட்டால் அதை விற்பதையும் தடை செய்து விடுவான் என்பதும் நபிமொழி. (தாரகுத்னி)
சில வசனங்களில் குறிப்பிட்ட சில வகையைச் சேர்ந்த ஹராம் பற்றி மட்டும் கூறப்படும். உதாரணமாக, உணவுகளில் எவை எவை ஹராம் என்று அல்லாஹ் குறிப்பிட்டதைப் போன்று. அல்லாஹ் கூறியுள்ளான்: “தானாக செத்தவைகள், இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டவை, கீழே விழுந்து செத்தவை, கொம்பால் முட்டப்பட்டு செத்தவை, கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்டவை ஆகிய யாவும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. எவற்றை நீங்கள் உயிருடன் அறுத்து விட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலிபீடங்கள் மீது அறுக்கப்பட்டவையும், குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன)… (5:3)
மணம் முடிக்க விலக்கப்பட்டவர்களைக் குறிப்பிடும் போது அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “(பின் வரும் பெண்களை மணம்புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது): உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள், மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னால் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடியில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணமாகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து அவர்களின் புதல்வியரை மணந்து கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை.
மேலும் உங்கள் முதுகந்தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன). ஆனால் இதற்கு முன் நடந்து விட்டதைத் தவிர. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்” (4:23)
மேலும் பொருளீட்டுவதில் விலக்கப்பட்டவைகளையும் குறிப்பிட்டுள்ளான்: “அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாகவும் வட்டியை ஹராமாகவும் ஆக்கியுள்ளான்” (2:275)
தன் அடியார்கள் மீது கருணை உடையவனாகிய அல்லாஹ் தூய்மையானவற்றிலிருந்து ஏராளமானவற்றை, பல்வேறு வகையானவற்றை வரையறையில்லாமல் நமக்கு ஆகுமாக்கியுள்ளான். அதனால் தான் இவை இவையெல்லாம் ஆகுமானவை என்று அவன் விவரித்துச் சொல்லவில்லை. காரணம் அவை வரையறுக்க முடியாத அளவுக்கு ஏராளம் உள்ளன. ஆனால் எவை எவை எல்லாம் ஹராமாக்கப்பட்டவை என்று விவரமாகக் கூறியிருப்பதற்குக் காரணம் அவை இவ்வளவுதான் என அல்லாஹ்வால் வரையறுக்கப்பட்டவை என்பதாகும். மேலும் நாம் அவற்றை எளிதில் அறிந்து அவற்றை விட்டும் விலகிட வேண்டும் என்பதும் நோக்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் நிர்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகளில் அன்றி பிற நேரங்களில் எவை எவை உங்களுக்கு விலக்கப்பட்டவை என்பதை அல்லாஹ் உங்களுக்கு விவரித்துக் கூறியுள்ளான்” (6:119) “மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் புசியுங்கள்” (2:168)
அவனுடைய கருணையில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு பொருளின் அசல் தன்மை ஹலாலாகும் என்று அவன் நிர்ணயித்துள்ளான். அது ஹராம் என்று அறிவிக்கக்கூடிய ஆதாரம் கிடைத்தாலே தவிர! இது அல்லாஹ்வின் அருட்கொடையையும், தனது அடியார்கள் மீதுள்ள அவனுடைய பரந்த மனப்பான்மையையுமே எடுத்துக் காட்டுகிறது. எனவே நாம் அவனுக்குக் கீழ்படிவதும் அவனைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவதும் கடமையாகும்.
சிலருக்கு இன்னின்னவைகள் ஹராம் என்று கூறப்படுமானால் மார்க்கச் சட்டங்கள் அவர்களுக்குப் பாரமாகத் தோன்றுகின்றன. இது அவர்களுடைய பலவீனமான ஈமானையும், மார்க்க விஷயங்களில் விளக்கமின்மையையுமே காட்டுகிறது. இவர்கள் என்ன தங்களுக்கு இன்னின்னவை ஹலால் எனக் கூறப்பட வேண்டும், ஹலாலின் வகைகள் அனைத்தையும் எண்ணிக்கையோடு இவர்களுக்கு சொல்லப்பட வேண்டும் என விரும்புகிறார்களா – இறைமார்க்கம் எளிதானது தான் என மன திருப்திக் கொள்வதற்கு? அல்லது இன்னின்னவை தூய்மையானவை என பட்டியலிடப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா – இறை மார்க்கத்தின்படி வாழ்வது ஒன்றும் சிரமமில்லை என்று நிம்மதியாக இருப்பதற்கு?
அறுக்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம், முயல், மான், மழையாடு, கோழி, புறா ஆண்வாத்து, பெண்வாத்து, தீக்கோழி ஆகியவற்றின் மாமிசங்கள் ஹலாலாகும். இன்னும் செத்த வெட்டுக்கிளி, மற்றும் மீன், காய்கறிகள், கீரைகள், பழங்கள், இன்னும் ஏனைய பயனுள்ள தானியங்கள், பயிர்கள் ஆகியவையும் ஹலாலாகும் என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களா?
தண்ணீர், பால், தேன், எண்ணை, வெனிகர், உப்பு, மசாலா சாமான்கள் ஆகியவையும், மரம், இரும்பு, மணல், கற்கள், பிளாஸ்டிக், கண்ணாடி, இரப்பர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் ஹலாலாகும். கால்நடைகள், கார், புகைவண்டி, கப்பல், விமானம் போன்றவற்றில் பயணம் செய்வதும் ஹலாலாகும்.
ஏ.சி, ஃபிரிஜ், வாஷிங் மிஷின், துணிகளை உலர்த்தும் இயந்திரம், திருகை, கிரைண்டர், மிக்ஸி, ஆகியவற்றை உபயோகிப்பதும், மருத்துவம், பொறியியல், கணிதம் விண்வெளி, மற்றும் வானிலை ஆராய்ச்சி, கட்டடவியல் ஆகியவற்றுக்கும், தண்ணீர், பெட்ரோல், உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்களை வெளியேற்றுவதற்கும், அவற்றை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துவதற்கும் பயன்படக்கூடிய கருவிகள், அச்சு இயந்திரங்கள் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் ஹலால் ஆகும்.
மேலும் பருத்தி, சணல், கம்பளி ஆடைகள், அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலாலும் ரோமத்தாலும் தாயரிக்கப்பட்ட ஆடைகள், நைலான், பாலிஸ்டர் ஆடைகள் ஆகியவற்றை அணிவதும் ஹலால். மேலும் திருமணம், வியாபாரம், கொடுக்கல், வாங்கல், நற்காரியங்களுக்குப் பொறுப்பேற்றல், தன் பொறுப்பை பிறரிடம் ஒப்படைத்தல், வாடைகைக்கு விடுதல், தச்சு, கொல்லர்த் தொழில், சாதனங்களைப் பழுது பார்த்தல், ஆடு மேய்த்தல் ஆகியவற்றின் அசல் தன்மைஹலால் ஆகும் என்றெல்லாம் விபரமாகச் சொல்லப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?
இவ்வாறாக ஹலாலானவைகளை அடுக்கிக் கொண்டே சென்றால் அவற்றின் பட்டியல் முடிந்து விடுமா என்ன? இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதில்லையே!
இறைமார்க்கம் எளிமையானது என்று இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தின் நிலை என்னவெனில் அது சத்தியமே! ஆனால் அதற்குத் தவறான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தின் எளிமை என்பதன் கருத்து மக்களின் மன இச்சைகள் மற்றும் அபிப்பிராயத்தைப் பொறுத்தல்ல. மாறாக ஷரீஅத் சட்டங்களைப் பொறுத்ததாகும். இறைமார்க்கம் எளிமையானது என்று சொல்லிக் கொண்டு (அது எளிமையானது தான் அதில் சந்தேகமில்லை) ஹராம் என விலக்கப்பட்டவைகளைச் செய்வதற்கும், சட்டபூர்வமாக அளிக்கப்பட்ட சலுகைகளைச் செய்வதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. சட்டபூர்வமான சலுகைகளுக்கு உதாரணம்: தொழுகைகளைச் சேர்த்து தொழுதல் (ஜம்வு), சுருக்கித் தொழுதல் (கஸ்ர்), பயணத்தில் நோன்பை விடுதல், காலுறைகள் மீது மஸஹ் செய்தல் (இந்தச் சலுகை பயணத்தில் உள்ளவர்களுக்கு மூன்று நாட்களும், ஊரில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு நாளும் ஆகும்), தண்ணீரைப் பயன்படுத்த முடியாது போனால் தயம்மும் செய்தல், நோயாளி ஜம்வு செய்து தொழுதல், மழைக் காலங்களில் ஜம்வு செய்தல், நிச்சயதார்த்தம் பேசிய ஆண் நிச்சயதார்த்தம் பேசப்பட்ட பெண்ணைப் பார்ப்பதை ஆகுமாக்குவது, சத்தியத்தை முறித்தற்குரிய பரிகாரமான அடிமையை விடுவித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல், உடை அளித்தல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தல், நிர்பந்தமான நேரத்தில் இறந்தவைகளை உண்ணுதல்.
ஒரு முஸ்லிம் இதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது சில விஷயங்கள் விலக்கப்பட்டிருப்பதில் சில தத்துவங்கள் இருக்கின்றன. அவை வருமாறு:
1) விலக்கப்பட்டவைகளைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை சோதிக்கின்றான். இது விஷயத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கின்றான்.
நரகவாசிகளை விட்டும் சுவனவாசிகள் வேறுபட்டிருப்பதன் காரணங்களில் ஒன்று என்னவெனில் நரகவாசிகள் (இவ்வுலகில்) மனோ இச்சைகளில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். அம்மனோ இச்சைகளால் தான் நரகம் சூழ்ந்துள்ளது. சொர்க்கவாசிகள் (இவ்வுலகில்) மனதிற்கு விருப்பமில்லாத காரியங்களை சகித்துக் கொள்கிறார்கள். மனதிற்கு விருப்பமில்லாத காரியங்களால் தான் சொர்க்கம் சூழ்ந்துள்ளது. இச்சோதனை இல்லையெனில் இறைவனுக்குக் கீழ்ப்படிபவன் யார்? இறைவனுக்கு மாறு செய்னவன் யார்? என்பது தெளிவாகாமல் போய்விடும்.
நம்பிக்கையாளர்கள் இறைச்சட்டங்களை எடுத்து நடப்பதால் ஏர்படக்கூடிய சிரமங்களை நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்ற நோக்குடனும் பார்க்கின்றனர். இதனால் அச்சிரமங்கள் அவர்களுக்கு எளிதாகின்றன.
ஆனால் நயவஞ்சகர்களோ இறைச்சட்டங்களைப் பின்பற்றுவதால் ஏற்படுகின்ற கஷ்டங்களை துன்பம், தொல்லை மற்றும் இழப்புகளாகப் பார்க்கின்றனர். அதனால் அவற்றைப் பின்பற்றுவது அவர்களுக்குச் சிரமமாகத் தோன்றுகின்றது.
2) இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்பவன் விலக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வதன் மூலம் ஈமானின் இன்பத்தை சுவைப்பான். எவ்வாறெனில் அல்லாஹ்வுக்காக எதையேனும் ஒருவன் தவிர்த்துக் கொண்டால் அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்ததை அல்லாஹ் அவனுக்குக் கொடுப்பான். மேலும் அவனது உள்ளத்தில் ஈமானின் இன்பத்தை அவன் உணர்வான்.
வாசக நேயர்களே! இச்சிறிய நூலில் ஷரீஅத் தடை செய்துள்ள பல்வேறு காரியங்களை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஆதாரங்களுடன் நாங்கள் குறிப்பிட்டுள்ளதைக் காண்பீர்கள். விலக்கப்பட்ட இக்காரியங்கள் பெரும்பாலான முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்படுபவையாகும். பெரும்பாலும் அவர்கள் செய்யக் கூடியவையாகும். இவற்றைக் குறிப்பிடுவதின் நோக்கம் மக்களுக்கு நலம் நாடுவதையும், தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வதையும் தவிர வேறு இல்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எங்களுக்கும் எங்களுடைய சகோதர முஸ்லிம்களுக்கும் நேர்வழியையும் அதற்கான உதவியையும் அவன் விதித்த வரம்புகளை மீறாமல் வாழும் பாக்கியத்தையும் வேண்டுகிறோம். அவன் விலக்கப்பட்டவற்றை விட்டும் நம்மைத் தூரமாக்குவானாக! தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக! அல்லாஹ் மிகச் சிறந்த பாதுகாவலனும் கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளனும் ஆவான்.
நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?
நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா தேடுவதை நபித்தோழர்களும், தாபியீன்களும்வழக்கமாக்கிக் கொள்ளவில்லை. Continue reading
முதல் பக்கம்
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட
தீமைகள்!
எச்சரிக்கை!
தொகுப்பு
வெளிநாட்டவர் அழைப்பு மையம்
ஜுல்பி – சவூதி அரேபியா
வெளியீடு
ஜம்இய்யா இஹ்யாவுத்துராதுல் இஸ்லாமிய்யா
லஜ்னா காரல் ஹிந்திய்யா
ரவ்லா – குவைத்
Phone: 2574912-3-4 EX 108
வெளியீட்டாளர்களின் அனுமதியுடன் இந்த நூல் தளத்தில் பதியப்படுகிறது.
அல்லாஹ்வின் ரஹ்மத்!
30:48 அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியப்படி, வானத்தில் பரத்தி, பல துண்டுகளாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.
30:49 எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் – அதற்கு முன்னரும் – (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.
30:50 (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிப்பவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
30:51 ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரனத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராக இருந்து விடுகின்றனர்.
30:52 ஆகவே (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.
30:53 இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது.
முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்
ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி மன்றாடினர். பிறகு மழை பெய்தது. இதை அடிப்படையாக வைத்து அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பக்தியும், நேர்மையும் நிரம்பிய நல்லவர்களைக் கொண்டு குறிப்பாக அஹ்லுல் பைத் (நபியின் சந்ததியைச் சார்ந்தவர்களைக்) கொண்டு மழை தேடிப் பிரார்த்தித்தல் மிக ஏற்றமாகும். Continue reading
ஷபாஅத் விஷயத்தில் ஸுன்னத் ஜமாத்திற்கு மாறுபட்டவர்களின் அபிப்பிராயம்
ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வயீதிய்யாப் பிரிவினரும் மறுமையில் நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின் பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பதவியை உயர்த்தும் விஷயத்தில் மட்டும்தான் மறுமையில் ஷபாஅத் செய்வார்களாம். இப்பிரிவினரில் மற்றும் சிலர் நபிகளின் ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள். பெருமானாருக்கு ஷபாஅத்தே இல்லையாம். Continue reading