225- நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) உமர் ரலி) ஆகியோரும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.
தொழுகையில் பிஸ்மில்லாஹ் சப்தமின்றி கூறுவது..
தொழுகையில் ஸூரா ஃபாத்திஹா ஓதுவது…
222.திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து ஸுராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
223- எல்லாத் தொழுகைகளிலும் ஒதப்படவேண்டும் என நபி ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் சப்தம் இன்றி ஒதியதை நாங்களும் சப்தமின்றி ஒதுகின்றோம். அல்ஹம்து அத்தியாயத்தை மட்டும் ஒதினால் அது போதுமாகும். அதை விட அதிகமாக ஒதினால் அது சிறந்ததாகும்.
224- நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்றும் கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போலவே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். திரும்பவும் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று தடவை நடந்தது) அதன் பிறகு அந்த மனிதர் சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்கு கற்றுத் தாருங்கள்! என்று கேட்டார். நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதவீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உமது எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ருகூஉ ஸஜ்தாவில் என்ன கூறுவது…
219- குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூஹுரைரா (ரலி) தொழுவித்துவிட்டு நான் உங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுகை போலவே தொழுது காட்டினேன் என்றும் கூறினார்கள்.
220- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா லகல் ஹம்து- மற்றொரு அறிவிப்பில் வலகல் ஹம்து என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.
221- நானும் இம்ரான் இப்னு ஹுஸைனும் அலி (ரலி)யைப் பின் பற்றித் தொழுதோம். அலி (ரலி) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறினார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டு ரக்அத்தை முடித்து எழும் போதும் தக்பீர் சொன்னார்கள். தொழுகையை முடித்து பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு இவர் நபி (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்தி விட்டார் என்று இம்ரான் (ரலி) குறிப்பிட்டார்கள்.
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்
மக்கள் சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப் பெரிய விஷயமாகும். சிலர் தரையைத் தொடுமளவுக்கு ஆடை அணிகின்றனர். இன்னும் சிலர் தமது ஆடையைத் தரையோடும் இழுத்துச் செல்கின்றனர். Continue reading
தொழுகையில் கைகளை தோள் வரை உயர்த்துதல்..
217- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் பொதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது தோள்களுக்கு நேராகவும் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல்ஹம்து என்று கூறுவார்கள். ஸஜதாவுக்குச் செல்லும் போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
218- மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) தொழும் போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவுக்குச் செல்லும் போது தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யுதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பாங்கொலியில் ஷைத்தான் ஓட்டமெடுப்பது
216- தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு சப்தத்தை கேட்ககூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும்போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்துக்கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தமக்குத் தாமே தீங்கிழைத்துக்…..
அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்). (அல்குர்ஆன்: 14:45)
பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?
215- பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒவ்வோர் ஆத்மாவுக்கான முழுமையான கூலி!
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த (தீர்ப்பு) நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் – அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:111)
பாங்கு எப்படி வந்தது?
213- முஸ்லீம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிருத்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கின்ற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் (ரலி) தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏன் ஏற்படுத்தக்கூடாது? என்று கூற உடனே பிலால் (ரலி) அவர்களிடத்தில் பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும் என நபி (ஸல்) கூறினார்கள்.
214- (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருப்பை மூட்டுவோம் என்றார். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால் (ரலி) ஏவப்பட்டார்கள்.