222.திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து ஸுராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
223- எல்லாத் தொழுகைகளிலும் ஒதப்படவேண்டும் என நபி ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் சப்தம் இன்றி ஒதியதை நாங்களும் சப்தமின்றி ஒதுகின்றோம். அல்ஹம்து அத்தியாயத்தை மட்டும் ஒதினால் அது போதுமாகும். அதை விட அதிகமாக ஒதினால் அது சிறந்ததாகும்.
224- நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்றும் கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போலவே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். திரும்பவும் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று தடவை நடந்தது) அதன் பிறகு அந்த மனிதர் சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்கு கற்றுத் தாருங்கள்! என்று கேட்டார். நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதவீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உமது எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.