217- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் பொதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது தோள்களுக்கு நேராகவும் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல்ஹம்து என்று கூறுவார்கள். ஸஜதாவுக்குச் செல்லும் போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
புஹாரி-735: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
218- மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) தொழும் போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவுக்குச் செல்லும் போது தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யுதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
புஹாரி-737: அபூ கிலாஃபா (ரலி)