
கேள்வி எண்: 28. டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கருவியல் நிபுணர் டாக்டர் கீத் மூர் (Dr. Keith Moore) கூறுகிறார்:- ‘மனிதக்கரு வளர்ச்சியானது (Development of Embryo) பல்வேறு வளர் நிலைகளைக் (Stages) கொண்டது என்ற அறிவியல் உண்மையை கி.பி. 1940 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், உலகம் முழுவதும் நாம் பெற்றிருக்கும் கருவளர்ச்சி பற்றிய தற்கால அறிவை சில ஆண்டுகளுக்கு முன்னரே பெற முடிந்தது. ஆனால், குர்ஆன் “தாயின் கர்ப்பப்பையில் மனிதக்கரு பல்வேறு நிலைகளில் வளர்கின்றது” என்பதை கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே கூறியது என்னை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தியது’ என்றார். டாக்டர் கீத் மூரை வியப்பில் ஆழ்த்திய அந்த இறைவசனம் எது? Continue reading
பல்வேறு வளர்ச்சி நிலைகளில் வளரும் மனித சிசு!
ஜூம்ஆவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்..
495. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள்.
496. (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
497. ஜும்ஆவுக்குப் பிறகுதான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும் காலை உணவையும் கொள்வோம்.
498. என் தந்தை (ஸலமா இப்னு அக்வஹ் (ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் ‘பைஅத்துர் ரிள்வான்’ செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம் ‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) ‘ஜும்ஆ’ தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குக் கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது” என்று கூறினார்கள்.
ஜூம்ஆ குத்பாவை அமைதியாக கேட்டல்..
494. ”இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒப்பாரி வைத்தல்.
மிகப்பெரும் தீமைகளில் இதுவும் ஒன்றாகும். சில பெண்கள் இறந்தவருக்காக ஓலமிடுகின்றனர். இறந்தவரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறி ஒப்பாரி வைக்கின்றனர். முகத்திலும், கன்னங்களிலும் அடித்துக் கொள்கின்றனர். அதுபோல ஆடையைக் கிழித்துக் கொள்கின்றனர். தலையை மழித்துக் கொள்கின்றனர், அல்லது தலை விரித்துப் போட்டு அதைப் பிய்த்துக் கொள்கின்றனர். இவையாவும் விதியைப் பொருந்திக் கொள்ளாததையும், துன்பத்தை சகித்துக் கொள்ளாததையுமே காட்டுகிறது. இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். Continue reading
ஜூம்ஆ தினத்தில் நறுமணம் பூசுவதும் மிஸ்வாக் செய்வதும்
490.”ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
491. ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியபோது நறுமணப் பொருளோ எண்ணெய்யோ ஒருவரின் இல்லத்தில் இருந்தால் அதைப்பூசிக் கொள்ள வேண்டுமா?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘எனக்குத் தெரியவில்லை’ என்று விடையளித்தார்கள்.
492. ”ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
493.”ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கிறார்கள்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஜூம்ஆவில் குளிப்பது கடமை..
485. ”உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
486. ஜும்ஆ நாளில் உமர் (ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர் (ரலி) அழைத்து ‘ஏனிந்தத் தாமதம்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்’ என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) ‘உளூ மட்டும்தான் செய்தீரா? நபி (ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!” என்று கேட்டார்கள்.
487.”ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
488. (மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங்களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதியும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும் போது வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.
489. ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ராவிடம் கேட்டேன். அதற்கு அம்ரா ‘அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது’ என ஆயிஷா (ரலி) கூறினார் என விடையளித்தார்.
பூமி வாழத்தகுந்த இடமா?

கேள்வி எண்: 27. இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றது. இதுபற்றிய திருமறையின் கூற்றாகிய “அவன்தான் பூமியை உங்களுக்கு வாழத்தகுந்த இடமாக்கியவன்” என்ற வசனம் திருமறையில் எங்குள்ளது? Continue reading
அச்சநேரத் தொழுகை..
481. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுகை நடத்தினார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண்டாம் அணியினர்) நின்றிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்று கொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுதுவிட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதிமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.
482. (அச்ச நேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களும் முடிந்துவிட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.
483. (‘தாத்துர் ரிகாஉ’) போருக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்தோம். கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களும் முடிந்துவிட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.
484. ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு (போரை முடித்துக் கொண்டு) நாங்கள் நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். அந்த மரத்தை நபி (ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பவர்களில் ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்களின் வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அதை அவர் உருவிக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘எனக்கு நீர் அஞ்சுகிறீரா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் (கொஞ்சமும் அஞ்சாமல்) ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அவர், ‘இப்போது என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவது யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்” என்று பதிலளித்தார்கள
். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள். பிறகு தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. அப்போது (தம் தோழர்களில்) ஓர் அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் (அச்ச நேரத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அணியினர் பின்னால் விலகிக் கொள்ளவே (எதிரிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த அணியினர் வந்தனர்.) அந்த அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுகை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்துகளும், மக்களுக்கு இரண்டு ரக்அத்துகளும் ஆயின. (அந்த மனிதரின் பெயர் ‘கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்’ என்றும், இப்போரில் ‘முஹாரிப் கஸஃபா’ கூட்டத்தாரை நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்டார்கள் என்றும் அபூ அவானா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸத்தத் (ரஹ்) அறிவித்தார்.)
ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-1)
(இறை)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ”நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். 2:285 (காண்க:2:177,136,3:84)
1. அல்லாஹ்வை நம்புவது 2. வானவர்களை நம்புவது 3. வேதங்களை நம்புவது 4. நபிமார்களை நம்புவது 5. மறுமையை நம்புவது 6. விதியை நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது …(ஹதீஸின் கருத்து) உமர் (ரலி) புகாரி.
அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களையும், அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களையும் பூமிக்கு அனுப்பும்போதே என்னிடமிருந்து வழிகாட்டுதல் வரும் அதை முறையாகப் பின்பற்றுபவருக்கு பயமோ, கவலையோ தேவையில்லை என்று கூறியனுப்பியதாக வல்ல இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகிறான். Continue reading
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..
480. ”ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்” என்றார்கள்.