Monthly Archives: March 2007

ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-1)

(இறை)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ”நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-1)

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..

480. ”ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்” என்றார்கள். புஹாரி : 627 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..

இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவே உபதேசம் செய்யப்படுகிறது

7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப் பற்றி நீர் அவர்களைக் கேளும் – அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு (த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன – ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவே உபதேசம் செய்யப்படுகிறது

மக்ரிபுக்கு முன் ஸூன்னத்து தொழுதல்..

479. முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுனனத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கும் முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள். புஹாரி :625 அனஸ் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மக்ரிபுக்கு முன் ஸூன்னத்து தொழுதல்..

அஸருக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் தொழுதது..

477. இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி (ஸல்) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க. … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அஸருக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் தொழுதது..

தொழக்கூடாத நேரங்கள்..

473. ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். புஹாரி: 581 உமர் (ரலி) 474. ”ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 586 அபூ ஸயீத் அல்குத்ரீ … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தொழக்கூடாத நேரங்கள்..

சபித்தல்

பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.

Posted in எச்சரிக்கை | Comments Off on சபித்தல்

தொழுகையில் ஒரு ரக்அத்தில் ஓதும் குர்ஆனிய வசனங்கள்..

470. ஒருவர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து ‘நான் முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதினேன்’ என்றார். (முஃபஸ்ஸல் என்பது ‘காஃப்’ அத்தியாயம் முதல் குர்ஆனின் கடைசி வரை உள்ள அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களையும் ஒரே ரக்அத்தில் ஓதியதாகக் கூறிவிட்டு இது சரியா? என்று அவர் கேள்வி கேட்டார்.) ‘கவிதைகளைப் படிப்பது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தொழுகையில் ஒரு ரக்அத்தில் ஓதும் குர்ஆனிய வசனங்கள்..

குர்ஆன் ஏழு வட்டார முறைகளில் அருளப்பட்டது..

468. ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம் (ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி), அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குர்ஆன் ஏழு வட்டார முறைகளில் அருளப்பட்டது..

நபி (ஸல்) அவர்கள் பேரில் மௌலிது வைபவம் நடத்துதல்.

இவ்வைபவம், நபி (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்கள், தாபிஈன்கள், நான்கு இமாம்கள் ஆகியோர்களோ அல்லது சிறப்பெனக் கருதப்பட்ட காலங்களிலிருந்தவர்களோ செய்யாததாகும். மார்க்க அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரமுமில்லை. மௌலிது ஓதுகின்றவர்கள் அதிகமாக, ஷிர்க்கிலேயே மூழ்கியுள்ளனர். அவர்கள், மௌலிதுகளில் பின்வருமாறு ஓதுவார்கள்.

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on நபி (ஸல்) அவர்கள் பேரில் மௌலிது வைபவம் நடத்துதல்.